அமர்ஜீத் சதா: உலகின் மிக இளவயது சீரியல் கில்லர் - இப்போது எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்!

10 வயதுக்குள் 3 பேரின் உயிரை பறித்த இவர், இப்போது எங்கு இருக்கிறார் என யாருக்கும் தெரியாது. எளிமையாக மரமேறி விளையாடும் கிராமத்து சிறுவனான இவரது வாழ்வில் நடந்தது என்ன?
அமர்ஜீத் சதா: உலகின் மிக இளவயது சீரியல் கில்லர் - இப்போது எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்!
அமர்ஜீத் சதா: உலகின் மிக இளவயது சீரியல் கில்லர் - இப்போது எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்!Twitter
Published on

அமர்ஜீத் சதா, மொத்த உலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சிறுவன். இருளிலும் மர்மத்திலும் மறைந்திருக்கும் இவனது கதை பீகார் மாநிலம் முஷாகர் என்ற கிராமத்தில் இருந்து தொடங்குகிறது.

அந்த கிராமத்தில் வாழ்ந்த எளிமையான மக்களுக்கு தினம் தினம் போராட்டமாகவே இருந்துவந்தது. அமர்ஜீத் பிறந்ததுகூட ஏற்கெனவே ஏழ்மையில் வாடிய பெற்றோர்களுக்கு மேலும் சுமையாகதான் பார்க்கப்பட்டது.

இவருக்கு 7வயது இருக்கும் போது அவர்களின் எளிமையான குடும்பத்துக்கு புதுவரவாக வந்து சேர்ந்தது ஒரு பெண் குழந்தை. ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்களது சக்தியை சோதிக்கக்கூடிய பாரமாகவும் அந்த பெண் குழந்தை இருந்தது.

உலகின் சிறுவயது சீரியல் கில்லர் அமர்ஜீத்தின் கதையைப் பார்க்கலாம்.

தனிமையில் இருந்த அமர்ஜீத் மரங்களில் ஏறி குதிப்பது, அருகில் இருக்கும் பகுதிகளை சுற்றிப்பார்ப்பது என சலிப்பாக பொழுதைக் கழித்துவந்தான். வறுமையில் உழன்றுகொண்டிருந்த அவனது பெற்றோர்கள் தங்களது சந்ததிகளாவது எதிர்காலத்தில் சிறப்பான வாழ்க்கையை பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் குழந்தைகள் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

அன்பும் மகிழ்ச்சியும் இருக்க வேண்டிய குடும்பத்தில் அமர்ஜீத் மட்டும் கண்ணால் கண்டுணர முடியாத இருளில் மூழ்கிக்கொண்டிருந்தான். இந்த மாற்றம் அவரது அத்தையின் வருகைக்கு பிறகு தெரியத் தொடங்கியது.

பரபரப்பான நகரத்துக்கு வேலைக்கு செல்வதனால் தனது மகளை அமர்ஜீத்தின் வீட்டில் விட்டுவிட்டு சென்றார் அவரது அத்தை. அத்தை சென்ற பிறகு அந்த குடும்பத்தின் சுமை மேலும் மேலும் அதிகரித்தது. இதனால் உள்ளூர் சந்தைக்கு வேலை தேடி செல்ல வேண்டிய சூழலுக்கு ஆளானார் அமர்ஜீத்தின் தாயார்.

குழந்தையான அமர்ஜீத் சதா அவரது சிறுவயது தங்கை மற்றும் அத்தையின் குழந்தையையும் பராமரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். இது அவரது குணாதீசியங்களில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

அமர்ஜீத் கேட்பாரற்ற குழந்தையை கிள்ளுவதும், அடிப்பதும் அவள் அழுவதைப் பார்த்து ரசிப்பதுமாக அவனுள் இருந்த தீய குணங்கள் வெளிப்படத் தொடங்கின. கொடுமைப்படுத்துவதில் சுகம்காணத் தொடங்கியதால் அதனை இன்னும் இன்னும் அதிகரித்தான். அவனுக்குள் இருந்து உந்துதல் ஏற்பட, ஒரு நாள் குழந்தையின் கழுத்தை அழ முடியாதபடி நெரித்து அலட்சியமாக புல்வெளியில் போட்டான்.

பரிதாபகரமாக அந்த குழந்தை உயிரிழந்தது. தனது மகன் இத்தனைக் கொடூரமான செயலில் ஈடுபட்டதை அறிந்த அவனது தாய் அதிர்ச்சியடைந்தார். அமர்ஜீத்துக்கு கிடைத்த தண்டைனை அவரது அப்பா கையால் அடிவாங்கியது மட்டுமே.

காவல்துறையோ அல்லது பிற அதிகாரிகளோ இதில் தலையிடவில்லை. இறந்த குழந்தையின் அம்மா அதாவது அமர்ஜீத்தின் அத்தைக்கும் உண்மை தெரிவிக்கப்படவில்லை.

அமர்ஜீத்துக்கு தண்டனை கிடைக்கவில்லை என்றாலும் அந்த குடும்பம் 6 வயது குழந்தையின் இறப்பிற்காக வருந்தியது. ஆனால் அமர்ஜீத்தின் கொடிய எண்ணத்துக்கு அவர்களது 8 மாத குழந்தை பலியாகும் என்பதை அவர்கள் சிறிதும் எதிர்பார்த்திரவில்லை.

அமர்ஜீத் சதா: உலகின் மிக இளவயது சீரியல் கில்லர் - இப்போது எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்!
இன்று வரை உலகை உலுக்கும் 10 மர்மங்கள், அச்சப்படும் உலக நாடுகள் - திக் திக் பயணம்

அவர்களது குடும்பத்தில் சில உறுப்பினர்களுக்கு இந்த விஷயம் தெரியவந்தாலும் குடும்ப விஷயம் என எதையும் வெளிப்படையாக பேசாமல் விட்டுவிட்டனர். அமர்ஜீத்தின் கொடிய எண்ணங்களுக்கு மறைமுகமாக இடமளிக்கப்பட்டது.

ஆனால் 2007ம் ஆண்டு அவரது உண்மையான முகம் வெளியுலகை எட்டிப்பார்த்தது. அமர்ஜீத்தின் ஆழ்மன இருட்டு வெளியுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டது அவரால் மூன்றாவது உயிர் பறிபோனபிறகுதான்.

குஷ்பு எனப் பெயரிடப்பட்ட அந்த 6 மாத குழந்தையை அவரது தாய் உள்ளூர் பால்வாடியில் விட்டுள்ளார். அங்கிருந்து அந்த குழந்தை திடீரென காணாமல்போனது.

குஷ்பு அமர்ஜீத்தின் பக்கத்துவீட்டில் வாழ்ந்த குழந்தை. குஷ்புவின் தாய் தனது குழந்தை காணாமல் போனது குறித்து காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அந்த பச்சிளங்குழந்தையை கழுத்தை நெரித்து செங்கலால் தாக்கி கொன்றதை சாதாரணமாக ஒத்துக்கொண்டார் அமர்ஜீத்.

குழந்தையின் உடலை புதைத்த இடத்தை ஊர்மக்களுக்கு காட்டினார். சட்டப்படி கைது செய்யப்பட்டபோது சிரித்த முகத்துடன் காவல்துறையினருடன் சென்றான் அமர்ஜீத். கொடூரத்தின் உருவமாக அவனை ஊர் மக்கள் கண்டனர். கதை இங்கு முடியவில்லை.

அமர்ஜீத் சதா: உலகின் மிக இளவயது சீரியல் கில்லர் - இப்போது எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்!
சாவர்கர் : கோட்சேக்கு கொடுத்த 15,000 ரூபாய் - காந்தி கொலையில் இவருக்கு பங்கு உள்ளதா?

தனது போர்க்களமான ஆழ்மனத்தை மறைக்கும்படியாக சிறைக்காவலில் இருக்கும்போது கொடூரமான சிரிப்பை ஏந்திக்கொண்டிருந்தான் அமர்ஜீத். பேசுவதை முழுவதுமாக தவிர்த்தான் புலனாய்வாளர்கள் முன்னிலையில் பெரும் புதிராக திகழ்ந்தான்.

ஒரு உளவியளாலர் அமர்ஜீத்தை ஒரு "குழந்தைகளுக்கு காயங்களை ஏற்படுத்துவதில் மகிழ்ச்சியாக இருக்கும் சாடிஸ்ட்" என வரையறுத்தார். 18 வயது நிறையும் வரை அவர் இந்திய தாண்டனைச் சட்டப்படி ஒரு குழந்தைகள் காவலில் அடைக்கப்பட்டார்.

அமர்ஜீத் சதா: உலகின் மிக இளவயது சீரியல் கில்லர் - இப்போது எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்!
உலகை நடுங்க வைத்த சீரியல் கில்லர்கள்: அதிகமாக இருக்கும் 10 நாடுகள்- இந்தியாவின் இடம் என்ன?

ஏற்கெனவே சிக்கலாக இருந்த அவரது பலவீனமான மனம் நடத்தை கோளாருகளுடன் இருந்தது என உளவியலாளர்கள் தெரிவித்தனர். 16 வயதில் ஒரு புதிய பெயரில் சமூகத்தில் உலவ அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் இருக்கும் இடம் இன்றும் யாருக்கும் தெரியாது.

இப்போது புதிய அடையாளத்துடன் ஒரு 20 வயது இளைஞனாக அவர் எங்கு வேண்டுமானாலும் சுற்றிக்கொண்டிருக்கலாம். தமிழகத்தில் கூட...

அமர்ஜீத் சதா: உலகின் மிக இளவயது சீரியல் கில்லர் - இப்போது எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்!
Bikini killer: சீரியல் கில்லர்; ஏகப்பட்ட காதலிகள்; தாலிபான்கள் தொடர்பு- ஒரு கொடூரனின் கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com