நிர்மலா சீதாராமன் : "தனி ஒருவரை மனதில் வைத்து கொள்கைகளை வகுக்கவில்லை" - என்ன பேசினார்?

நாங்கள் இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் மனதில் வைத்தே நாங்கள் கொள்கைகளை வகுக்கிறோம். மாமன் மச்சான்களை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு கொள்கை வகுக்கும் கலாச்சாரம் கொண்ட கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்தான்.
நிர்மலா சீதாராமன் : "தனி ஒருவரை மனதில் வைத்து கொள்கைகளை வகுக்கவில்லை" - என்ன பேசினார்?
நிர்மலா சீதாராமன் : "தனி ஒருவரை மனதில் வைத்து கொள்கைகளை வகுக்கவில்லை" - என்ன பேசினார்?Twitter
Published on

நிதியமைச்சர் நிர்மலா சீதாராம் பிப்ரவரி 10ஆம் தேதி மாலை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில், 2023 - 24 நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்த கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையிலும், தான் தாக்கல் செய்த 2023 - 24 பட்ஜெட் இந்தியப் பொருளாதாரத்தில் என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் ஒரு நீண்ட நெடிய உரையாற்றினார். இனி அவர் பேசியவற்றுள் முக்கிய விஷயங்களை மட்டும் இங்கே பார்ப்போம்.

இந்திய பொருளாதாரம் நிலையாக இருக்கிறது

கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், 2023 - 24 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதை நாங்கள் மட்டும் கூறவில்லை இந்திய பொருளாதாரத்தை உற்றுநோக்கி கொண்டிருக்கும் பல்வேறு விமர்சகர்கள் & திறனாய்வாளர்களும் கூறுகிறார்கள்.

அது போக கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் வெடித்தது. அதனால் இந்திய பொருளாதாரம் உட்பட பல்வேறு வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் மீது பணவீக்க அழுத்தம் ஏற்பட்டது.

மறுபக்கம் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது. இது எவரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் சர்வதேச அளவில் பல்வேறு அடிப்படை பொருட்களின் விலை அதிகரித்தது. இதையும் தாண்டி மோசமான வானிலை காரணமாக, இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்தன.

இப்போது உலக அளவில் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கிறது, இனியும் தொடர்ந்து அப்படியே இருக்கும். இந்திய பொருளாதாரம் பல்வேறு பொருளாதார பின்னடைவுகளில் இருந்து முன்னேற்ற பாதைக்கு கொண்டுவர, அரசு மூலதன செலவீனங்கள் பாதையைத் தேர்வு செய்திருக்கிறது.

இந்தியப் பொருளாதாரம் ஒரு நிலையான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது, இந்த அரசு எப்போதுமே நாட்டின் நலனை கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான விலை அதிகரித்த போது, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலால் வரியைக் குறைந்து பொதுமக்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தார்.

தேசத்துக்கான கொள்கைகளை வகுக்கிறோம்

நாங்கள் உணவுக்கான மானியத்தை குறைத்திருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள் எதிர்க்கட்சிக்காரர்கள், ஆனால் உண்மையில் உணவுக்கான மானியம் 1.97 லட்சம் கோடி ரூபாயாக சுமார் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

நிர்மலா சீதாராமன் : "தனி ஒருவரை மனதில் வைத்து கொள்கைகளை வகுக்கவில்லை" - என்ன பேசினார்?
அதானி : தனி ஒரு மனிதனின் வளர்ச்சி தான் இந்தியாவின் கௌரவமா? - வறுத்தெடுத்த மஹுவா மொய்த்ரா

முதலில் இந்திய தேசிய காங்கிரஸ் பல குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள், நீங்கள் அதற்கான விளக்கங்களை முன்வைக்கத் தொடங்கும் போது அவர்கள் கூச்சலிடுவார்கள், அவையிலிருந்து வெளியேறுவார்கள். இதுதான் அந்தக் கட்சியின் நீண்ட நெடிய கலாச்சாரம்.

சர்வதேச சந்தை காரணிகளால் உரங்களின் விலை உயர்ந்தது நம் விவசாயிகளை பாதிக்காமல் இருக்க, இந்த அரசு உரங்களுக்கான மானியங்களை அதிகரித்து அவர்களைப் பாதுகாத்து இருக்கிறது. மதிப்பீட்டு பட்ஜெட்டில் 1.05 லட்சம் கோடி ரூபாயாக இருந்த உர மானியத் தொகை, 2.25 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

நிர்மலா சீதாராமன் : "தனி ஒருவரை மனதில் வைத்து கொள்கைகளை வகுக்கவில்லை" - என்ன பேசினார்?
திருச்சி சிவா சொன்ன உப்புமா கதை - ஒரு அடடே சம்பவம்

மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய தொகை + மத்திய அரசின் ஸ்பான்சரில் நடக்கும் திட்டங்களுக்கு என மொத்தமாக இந்த பட்ஜெட்டில் 17.98 லட்சம் கோடி ரூபாய் நிதி சென்றடையவிருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 1.55 லட்சம் கோடி அதிகம்.

எதிர்க்கட்சியினர் எங்கள் மீது குற்றம் சுமத்துவதைப் போல, நாங்கள் ஒருவரை மட்டும் மனதில் வைத்து கொள்கைகளை வகுப்பவர்கள் அல்ல. இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் மனதில் வைத்தே நாங்கள் கொள்கைகளை வகுக்கிறோம். மாமன் மச்சான்களை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு கொள்கை வகுக்கும் கலாச்சாரம் கொண்ட கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்தான்.

நிர்மலா சீதாராமன் : "தனி ஒருவரை மனதில் வைத்து கொள்கைகளை வகுக்கவில்லை" - என்ன பேசினார்?
கனிமொழி : பாஜக அரசு இல்லாத மாநிலங்கள், ஆளுநரோடு போராடி வருகின்றன

மேற்கு வங்கம் மீது விசாரணை

கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் 10.09 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் ரைட் ஆஃப் செய்திருக்கிறோமே ஒழிய, கடன்களைத் தள்ளுபடி செய்யவில்லை. சுருக்கமாக, கடன் வாங்கியவர்கள் இப்போதும் கடனைத் திருப்பிச் செலுத்த கடமைப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.

மேற்கு வங்க மாநிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்துவதில் பல குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் நடந்திருப்பது மத்திய அரசு தரப்பிலான குழுக்களின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதேபோல பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக ஓர் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அந்த மாநில அரசிடம் இந்திய அரசு கூறியுள்ளது.

நிர்மலா சீதாராமன் : "தனி ஒருவரை மனதில் வைத்து கொள்கைகளை வகுக்கவில்லை" - என்ன பேசினார்?
அதானி விவகாரம் : மோடியை துளைத்தெடுத்த கேள்விகள் - ராகுல் காந்தி உரை தமிழில்

புதிய வரிமுறை காரணமாக, மக்கள் கையில் அதிக அளவிலான பணம் புழங்கும். புதிய வரிமுறையின் கீழ் 7 லட்சம் ரூபாய் வரை வரித் தள்ளுபடி பெற முடியும் என்பதையும் சுட்டி காட்டினார் நிர்மலா. புதிய வரி முறையின் கீழ் 2.5 லட்சம் ரூபாயாக இருந்த அடிப்படை வரி வரம்பு 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுபோக நிலைக் கழிவான (Standard Deduction) 50,000 ரூபாயும் புதிய வரிமுறையின் கீழ் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த புதிய வரிமுறை நடுத்தர குடும்பங்கள் மற்றும் இந்திய அரசுக்கு வரி செலுத்தும் நடுத்தர வரிதாரர்களுக்கும் மிகப்பெரிய பயனைக் கொடுக்கும்.

தகுதியான எல்லா விவசாயிகளும் பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் தொடர்ந்து பெறுவர் என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாராமன் : "தனி ஒருவரை மனதில் வைத்து கொள்கைகளை வகுக்கவில்லை" - என்ன பேசினார்?
மோடி: "ஏன் நேருவின் குடும்ப பெயரை வைத்துக்கொள்ளவில்லை?" - பிரதமரின் கேள்விக்கு பதில் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com