Morning News Tamil : இந்திய அரசியலில் ஃபேஸ்புக் தலையிடுவதை தடுக்க வேண்டும் - சோனியா காந்தி

இன்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
சோனியா காந்தி

சோனியா காந்தி

Facebook

இந்திய தேர்தல் அரசியலில் பேஸ்புக் தலையிடுவதை தடுக்க வேண்டும் - சோனியா காந்தி

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகிறது. மக்களவையில் நேற்று சோனியா காந்தி, இளைஞர்கள் சிந்தனையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் தவறான தகவல்கள் ஊடகங்கள் மூலம் பரப்பப்படுவதாக புகார் கூறியுள்ளார். போலி விளம்பரங்களை செய்தி நிறுவனங்கள் தரும் செய்திகள் போல முகநூல், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படுத்தாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

2019 தேர்தலின் போது பாஜகவுக்காக ரிலையன்ஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் விதிகளை மீறி விளம்பரம் செய்ததை அவர் எடுத்து கூறினார். முகநூல், டிவிட்டர் போன்ற ஊடகங்கள் ஆட்சியாளர்களின் ரகசிய கூட்டுடன் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்வது இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து என அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன்

ரஷ்யா - உக்ரைன்

Twitter

முக்கிய நகரங்களை கைப்பற்ற திணறும் ரஷ்ய படைகள்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஒரு போர்க்குற்றவாளி என அறிவித்து என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உக்ரைனில் பிப்ரவரி 24 அன்று ஊடுருவலைத் தொடங்கிய ரஷிய படைகள், இதுவரை அந்நாட்டின் 10 பெரிய நகரங்களில் எதையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனில் சில நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய ராணுவம், தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் சில நாட்களாகவே கீவ் நகரில் தாக்குதல் கடுமையாக்கப்பட்டு இருக்கின்றன. அங்கு சரமாரியாக ஏவுகணை, வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

கீவ் நகரை 3 பகுதிகளில் இருந்தும் சுற்றிவளைத்துள்ள ரஷிய படைகள், பெரும் தாக்குதலை நடத்தலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அங்கு நேற்று 35 மணி நேர ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால் அங்கு சிக்கியுள்ள மக்கள், பதுங்குக் குழிகள், கட்டிடங்களின் அடித்தளங்களில் பதுங்கி இருந்தனர்.
தற்போது கீவ் நகரின் புறநகர் பகுதியில் கடுமையான சண்டை நடந்து வருகிறது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள செயற்கைக்கோள் படத்தில் கீவ் அருகே உள்ள கிராமங்களில் வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்திருப்பதையும், தீப்பற்றி எரிவதையும் காண முடிகிறது.

அதேபோல் உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ்விலும் ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.மேலும் லிவிவ் நகரில் வான்வழி தாக்குதல்களுக்கான அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டபடியே உள்ளது. மரியபோல் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் தாக்குதல் தொடர்ந்தபடியே இருக்கிறது.

சோனியா காந்தி

Ukraine : 9/11 இரட்டை கோபுர தாக்குதலுடன் ஒப்பிட்ட உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி

தீர்ப்பு

தீர்ப்பு

Twitter

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு செல்லும் - உச்ச நீதிமன்றம்

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தனியார் மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. முன்னதாக வழக்கு விசாரணையின்போது, ’தமிழக அரசின் அரசாணை புதிதல்ல. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்குவது என்பது தனி இடஒதுக்கீடு அல்ல. இது ஒருவகையான மாணவர் சேர்க்கை தான் (different mode of admission).

இது சேவை மனப்பான்மையுடன் பணி செய்யும் அரசு மருத்துவர்களுக்கான முன்னுரிமை. மேலும், இது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். எனவே இந்த ஒதுக்கீட்டை அமல்படுத்தலாம்’ என தமிழக அரசு மற்றும் கேவியட் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ’இது சாதிவாரியான ஒதுக்கீடு இல்லை. மாறாக இது அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீடு. இது அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புக்கான ஒரு நுழைவு கருவி மட்டுமே. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இந்த ஒதுக்கீடு சரியானதே என தெரிவித்துள்ளது என’ வாதிடப்பட்டது.

அப்போது மத்திய அரசு தரப்பில், ’சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் 2017-ல் இருந்து இடஒதுக்கீடு வழங்கவில்லை. எனவே அந்த நிலையே தொடர வேண்டும். இந்த ஆண்டும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க கூடாது’ என எதிரப்பு தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், அரசு மருத்துவர்களுக்கு இவ்வாறு தனி இடஒதுக்கீடு வழங்குவது பாகுபடுத்தி பார்ப்பது என்றும், இவ்வாறு உள்ஒதுக்கீடு செய்ய முடியாத எனவும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கூறியுள்ளது; எனவே தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தனியார் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட உச்ச நீதிமன்றம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டு வழங்கலாமா, வேண்டாமா என்பது தொடர்பான இடைக்கால தீர்ப்பை வழங்க வழக்கை ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், ’தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம்’ என அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த ஆண்டு தமிழக அரசின் அரசாணைப்படி அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மேற்படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கலந்தாய்வு நடத்தவும் அனுமதி வழங்கு உத்தரவிட்டது.

அதேநேரம் மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்த பிரதான வழக்கை, விடுமுறைக்கு பின்னர் விசாரிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சோனியா காந்தி

Hijab அணியாமல் பள்ளிக்கு செல்லமாட்டோம்" - உச்ச நீதிமன்றத்தில் மாணவிகள் மேல் முறையீடு

நீராவி முருகன்

நீராவி முருகன்

Twitter

பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுண்டர்

நெல்லை களக்காட்டில் போலீசின் என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி நீராவி முருகன் சுட்டுக்கொல்லப்பட்டார். திருட்டில் தொடங்கி கூலிப்படை தலைவானாக வலம் வந்தவன் நீராவி முருகன். கடந்த 2011-ன் போது தூத்துக்குடியின் தி.மு.க. மாவட்ட துணை செயலாளரான ஏ.சி.அருணாவுக்கும், வேறு சிலருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பட்டப்பகலில் வீட்டினருகே ஏ.சி.அருணா வெட்டிக் கொல்லப்பட்டதில் கூலிப்படையாக நீராவி முருகன் முன் நின்று செயல்பட்டு வழக்கில் மாட்டியவன். இந்தக் கொலை வழக்கின் மூலம் தான் நீராவி முருகனின் பெயர் வெளி உலகில் பிரபலமாகி, ரவுடி என்கிற அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. மூன்று கொலை வழக்குகள் மற்றும் 30- க்கும் மேற்பட்ட பிற வழக்குகளில் இருந்ததால், நீராவி முருகனை ஈரோடு போலீசார் பிடிக்க திட்டமிட்ட போது தப்பியிருக்கிறான்.

இதையடுத்தே திண்டுக்கல் மாவட்டத்தின் ஒட்டன்சத்திரத்தில் நடந்த 150 பவுன் நகை கொள்ளையில் தொடர்புடைய அவனைப் பிடிப்பதற்காக பழனி எஸ்.ஐ.இசக்கிராஜாவின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான் நீராவி முருகன். இந்த டீம் ஏ.டி.எஸ்.பி.லாவண்யா தலைமையில் செயல்பட்டது.

இந்நிலையில் களக்காடு பகுதியில் பதுங்கியிருந்த நீராவி முருகனை திண்டுக்கல் தனிப்படை போலீசார் சுட்டுக்கொன்றனர். தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் மீது கடத்தல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

சோனியா காந்தி

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீர்ப்பு; யுவராஜ்-க்கு 3 ஆயுள் தண்டனை!

பிரியங்கா மோகன்

பிரியங்கா மோகன்

Twitter

ரஜினி படத்தில் பிரியங்கா மோகன்

சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன், அதையடுத்து சூர்யா நடித்து வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்த படங்களை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள டான் படத்தில் நடித்திருக்கிறார் பிரியங்கா மோகன். இந்த படம் வருகிற மே மாதம் 13ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் அடுத்தபடியாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 169ஆவது படத்திலும் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக கூறப்படும் நிலையில், பிரியங்கா மோகன் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சோனியா காந்தி

ரஜினிகாந்த் 170 : போனி கபூர் தயாரிப்பில் நெருப்புடா அருண்ராஜாவுடன் ரஜினி இணைவதாக தகவல்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com