'இந்தியாவின் ICE Cream மேன்' - பிழைப்புக்காக மும்பையில் குடியேறியவர் தொழிலதிபரானது எப்படி?

மும்பையின் ஜுஹு என்ற இடத்தில் உள்ள சாலில் 12க்கு 12 அறையில் குடும்பத்துடன் தங்கிய நாட்கள் அவருக்கு மிகவும் கடினமானது. அங்கிருந்து மும்பையின் முக்கிய தொழிலதிபராக இவர் உருவானது ஓர் உத்வேகமளிக்கக் கூடிய கதை!
'இந்தியாவின் ICE Cream மேன்' - பிளைப்புக்காக மும்பையில் குடியேறியவர் தொழிலதிபரானது எப்படி?
'இந்தியாவின் ICE Cream மேன்' - பிளைப்புக்காக மும்பையில் குடியேறியவர் தொழிலதிபரானது எப்படி?Twitter
Published on

ரகுநந்தன் ஸ்ரீனிவாஸ் காமத் கர்நாடகாவில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர்.

இவரது தந்தை ஒரு சாதாரண பழக்கடை வியாபாரி. மண் வீட்டில் பிறந்து வளர்ந்த இவர், இப்போது மும்பையின் பெரும்பணக்காரர்களில் ஒருவராக திகழ்கிறார்.

தனது நிறுவனமான நேச்சுரல் ஐஸ்-கிரீம் மூலம் 300 கோடி வருமானம் ஈட்டுகிறார். இந்த மாற்றம் அவரது வாழ்க்கையில் சாத்தியமானது எப்படி?

1954ம் ஆண்டு ஒரு முல்கி கிராமத்தில் பிறந்தவர் ரகுநந்தன். இவருடன் பிறந்தவர்கள் 7 பேர்.

சாதாரண பழக்கடை வியாபாரியான இவரது தந்தை தனது 7 குழந்தைகளுக்கும் மனைவிக்கும் உணவளிக்கவே கஷ்டப்பட்டுள்ளார்.

இதனால் சிறுவயதிலேயே வறுமை பழகிப்போன ரகுநந்தன் கடைசி பிள்ளை என்பதனால் பெரிய கவலைகள் இன்றி கிராமத்தைச் சுற்றித்திரிந்து விளையாடி வளர்ந்தார்.

அவருக்கு 15 வயது இருக்கும் குடும்பத்துடன் மும்பைக்கு குடியேறியிருக்கின்றனர். வறுமை காரணமாக ரகுநந்தன் தன் சகோதரருடன் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மும்பையின் ஜுஹு என்ற இடத்தில் உள்ள சாலில் (தொழிலாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு) 12 * 12 அறையில் குடும்பத்துடன் தங்கிய நாட்கள் அவருக்கு மிகவும் கடினமானது.

நேச்சுரல் ஐஸ்-கிரீம்

ஐஸ்கிரீம்களின் மகிமைக் குறித்து சொல்லித் தெரியவேண்டியதில்லை. எல்லா பருவங்களிலும் எல்லா நேரத்திலும் விரும்பி உண்ணப்படும் ஒன்று.

கலர்ஃபுல்லான, சுவையான ஐஸ்கிரீம்கள் குழந்தைகளின் நாக்குகளைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும்.

இந்த ஐஸ்கிரீம்களில் மாம்பழம், தேங்காய், சோளம் ஏன்? நண்டு ஃப்ளேவரைக் கூட சேர்த்தார் ரகுநந்தன். இந்த ஐடியா அவருக்கு எப்படி வந்தது?

பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத ரகுநந்தன் மும்பையில் இருந்து தென்னிந்தியாவுக்கு தனது அண்ணனுடன் வந்தார். அவர்கள் ஒரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தனர்.

அங்கு வீட்டிலேயே சமைக்கும் ஐஸ்கிரீமை செய்வது எப்படி எனக் கற்றுக்கொண்டுள்ளார். ஆனால் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட், வெண்ணிலா ஃப்ளேவர்களைத் தாண்டி எதையாவது செய்ய வேண்டும் என அவருக்கு தோன்றியிருக்கிறது.

1984ம் ஆண்டு தனது சகோதரனைப் பிரிந்து மும்மையில் ஜுஹு கொலிவாடா என்ற இடத்தில் தனது முதல் கடையைத் திறந்தார் ரகுநந்தன்.

சாதாரண சாக்லேட், வெண்ணிலா ஃப்ளேவர்கள் இல்லாத சாக்லேட்களை விற்பனை செய்தார்.

'இந்தியாவின் ICE Cream மேன்' - பிளைப்புக்காக மும்பையில் குடியேறியவர் தொழிலதிபரானது எப்படி?
Steve Harvey: 30 வயதில் காலி பர்ஸ்; இப்போது ரூ.16,000 கோடி சொத்து- ஊர்குருவி பருந்தான கதை!

தொடக்க காலம்

ரகுநந்தன் காமத்தின் முதல் கடையில் 10 வகை ஐஸ்கிரீம்கள் கிடைத்தன. இன்னும் சில ஸ்நாக்ஸ்களையும் விற்றார், 4 ஊழியர்கள் வேலை செய்தனர்.

ரகுநந்தனின் தந்தை பழக்கடை காரர் என்பதனால் சரியான பழங்களைத் தேர்வு செய்வது மிகவும் லேசான காரியமாக இருந்திருக்கிறது.

மிகவும் எளிமையாக பழங்கள், பால் மற்றும் சர்கரையால் தயாரிக்கப்பட்ட அவரது ஐஸ்கிரீம்கள் விற்பனையில் கொடிகட்டிப் பறக்க, ஒரு வருடத்தில் நேச்சுரல் ஐஸ்கிரீம்கள் மட்டுமே கிடைக்கும் கடைகளாக மாறின.

இன்று இந்தியா முழுவதும் 135 கடைகளை ரகுநந்தன் காமத் இயக்குகிறார். 2020ம் ஆண்டு நேச்சுரல் ஐஸ்கிரீம் நிறுவனம் 300 கோடி டர்ன்ஓவர் செய்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.

'இந்தியாவின் ICE Cream மேன்' - பிளைப்புக்காக மும்பையில் குடியேறியவர் தொழிலதிபரானது எப்படி?
Abdu Rozik : உலகிலேயே க்யூட்டான சிங்கர் - இணையத்தில் அதிகம் தேடப்படும் இவர் யார்?

விளம்பரமே தேவையில்லை

இன்று வெள்ளரிக்காய், சப்போட்டா, கருப்பு திராட்சை, பலா என பல பழங்களின் ஃப்ளேவர்களில் நேச்சுரல் ஐஸ்கிரீம்கள் கிடைக்கின்றன.

இந்த ஃபிளேவர்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு பிரியமானதாக இருப்பதில்லை. ஆனால் இவற்றின் மூலம் நேச்சுரல் ஐஸ்கிரீம் நிறுவனத்துக்கு பழங்களின் மீதிருக்கும் அறிவு வெளிப்படும். அது பிராண்ட் மீதான நம்பிக்கையைக் கூட்டும்.

“நான் விளம்பரத்திற்காக ஒரு பைசா கூட செலவழிக்க வேண்டியதில்லை. அது பெரும்பாலும் வாய்மொழியாகவே இருந்தது” என கூறியிருக்கிறார் ரகுநந்தன்.

மற்றொருபக்கம் பாலிவுட் பிரபலங்கள் அமிதாப் பச்சன், திலீப் குமார் மற்றும் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் நேச்சுரல் ஐஸ்கிரீமின் பெருமையை சில இடங்களில் பேசியுள்ளனர்.

'இந்தியாவின் ICE Cream மேன்' - பிளைப்புக்காக மும்பையில் குடியேறியவர் தொழிலதிபரானது எப்படி?
The Mountain Man : இறந்த மனைவிக்காக 22 ஆண்டுகள் மலையை உடைத்த மனிதர் - ரியல் ஹீரோவின் கதை!

ஒரு நாள் சாதாரணமாக தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த ரகுநந்தன் மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணி கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ் நேச்சுரல் ஐஸ்கிரீம்ஸின் ஆப்பிள் ஐஸ்கிரீம் குறித்தும் சப்போட்டா ஐஸ்கிரீம் குறித்து பெருமையாக பேசுவதைப் பார்த்து அதிர்ந்து போனாராம்.

எல்லாரும் பல கனவுகள் காண்கிறோம். நாம் கனவு காணும் இடத்துக்கு செல்லும் வழி மூடப்பட்டிருப்பதால் பெரும்பாலானவர்கள் முடங்கிவிடுகிறோம்.

ஆனால் அந்த தடைகளை கடின உழைப்பாலும் கூர்மையான அறிவாலும் உடைத்து முன்னேர முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறது முல்கி ரகுநந்தன் ஸ்ரீனிவாஸ் காமத்தின் வாழ்க்கை.

'இந்தியாவின் ICE Cream மேன்' - பிளைப்புக்காக மும்பையில் குடியேறியவர் தொழிலதிபரானது எப்படி?
Bruce Lee : தெரிந்த மனிதன் தெரியாத உண்மைகள்- ஓர் உத்வேக கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com