இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன் திறக்கப்பட்ட உணவகங்கள் பற்றி தெரியுமா?

இன்று நாளுக்கு ஒரு உணவகம் திறக்கப்படுகிறது. ஆனால் அந்த காலத்தில் கதையே வேறு. குறிப்பிட்ட நபர்களிடம் மட்டுமே வெளியில் உணவு சாப்பிடும் அளவு வசதி இருந்தது. அதிலும் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே ஒரு தனி உணவகம் நடத்தும் அளவு வசதி இருந்தது.
இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன் திறக்கப்பட்ட உணவகங்கள் பற்றி தெரியுமா?
இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன் திறக்கப்பட்ட உணவகங்கள் பற்றி தெரியுமா?twitter

உணவுகள் மீதான நமது பிரியம் அதிகரித்துவிட்டது. வித்தியாசமான உணவுகளை தேடி தேடி சாப்பிடுகிறோம். நமது தேடலுக்கு இன்னும் சுவையூட்ட, உணவுகளை வழங்கும் இடங்களிலும் புதுமை, வித்தியாசத்தை நாம் பார்க்கிறோம்.

அந்த வகையில் இந்தியாவில், ரயில் தீம் உணவகங்கள், மயான தீமில் உணவகம் போன்ற உணவகங்கள் உள்ளது. இந்த புதுமைகளுக்கு மத்தியில் ஒரு பழமையும் உள்ளது.

இன்று நாளுக்கு ஒரு உணவகம் திறக்கப்படுகிறது. ஆனால் அந்த காலத்தில் கதையே வேறு. குறிப்பிட்ட நபர்களிடம் மட்டுமே வெளியில் உணவு சாப்பிடும் அளவு வசதி இருந்தது. அதிலும் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே ஒரு தனி உணவகம் நடத்தும் அளவு வசதி இருந்தது.

அப்படி இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன் திறக்கபட்ட சில உணவகங்கள் இன்றும் செயலில் உள்ளன.

லியோபோல்டு கஃபே, மும்பை

1871ல் திறக்கப்பட்ட இந்த உணவகம், இந்தியாவின் பழமையான உணவகங்களில் ஒன்றாகும். இந்தியாவில் இருக்கும் தனித்துவமான பார்சி உணவகம் ஆகும். இந்த உணவகம் இன்றும் மக்களின் ஃபேவர்ட் கஃபேவாக உள்ளது.

குரேமால் மோகன்லால் குல்ஃபிவாலே, டெல்லி

இந்திய தலைநகரில் அமைந்திருக்கும் இது 1906ஆம் ஆண்டு திறக்கப்பட்டதாகும். பழைய டெல்லியில் சாவ்ரி பஜாரில் அமைந்திருக்கும் இந்த இடம் இளைஞர்களுக்கு பிடித்தமான குல்ஃபி ஸ்பாட்டாக உள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் இந்த இடத்தை தேடி மக்கள் வருகின்றனர். இவர்களின் பான், மாம்பழ ஃபிளேவர் குல்ஃபிக்கள் பேமஸ்.

இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன் திறக்கப்பட்ட உணவகங்கள் பற்றி தெரியுமா?
Gujarat : சவப்பெட்டி உணவகம் முதல் தலைகீழ் ஜெல்லி மீன்கள் வரை - 15 வியக்கவைக்கும் உண்மைகள்!

கரீம்ஸ், டெல்லி

டெல்லியில் இருக்கும் கரீம்ஸ் உணவகம் 1913 முதலில் செயலில் உள்ளது. இந்த உணவகம் இங்கு கிடைக்கும் முகலாய பாணி உணவுகளுக்காக பெயர்பெற்றது. கரீம்ஸ் பிரியாணி புகழ்பெற்றதாகும். ஜமா மஸ்ஜிதில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது இந்த உணவகம்

பிரிட்டானியா அண்ட் கோ, மும்பை

1923ல் திறக்கப்பட்ட இந்த உணவகம் மும்பையில் அமைந்துள்ளது. இன்றும் செயலில் இருக்கும் இந்த ரெஸ்டாரண்ட் அதன் பார்சி வகை உணவகளுக்காக பிரபலமாக உள்ளது. இந்த உணவகத்துக்கு சென்றால், பெர்ரி புலாவ் மற்றும் கேரமல் கஸ்டர்டை மிஸ் செய்துவிட வேண்டாம்

இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன் திறக்கப்பட்ட உணவகங்கள் பற்றி தெரியுமா?
குஜராத்: கல்லறையா? டீ கடையா? சுடுகாட்டை உணவகமாக மாற்றிய நபர்! திகிலான அனுபவத்துக்கு தயாரா?

எம்டிஆர் - மாவல்லி டிபன் ரூம், பெங்களூரு

கர்நாடகாவின் பெயரைச் சொல்லும் உணவகங்களில் இது முக்கியமானது. இந்த உணவகம் 1924ல் திறக்கப்பட்டது, இன்றும் செயலில் உள்ளது. இந்தியாவின் பிரபலமான உணவு வகையான ரவா இட்லியை கண்டுபிடித்தது இவர்கள் தான். காலை நேர உணவுகளுக்கு இந்த உணவகம் ஃபேமஸ்.

ஃப்லூரிஸ், கொல்கத்தா

1927ல் திறக்கப்பட்ட இது ஒரு கஃபே ஆகும். இங்கு ஐரோப்பிய பாணி இனிப்புவகைகள் கிடைக்கிறது. கொல்கத்தாவின் லேண்ட் மார்க்குகளில் இந்த ஃப்லூரிஸ் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

வித்யார்த்தி பவன், பெங்களூரு

1943ல் திறக்கப்பட்ட இந்த உணவகம் பெங்களூருவின் பிரபலமான பிரேக்ஃபாஸ்ட் ஸ்பாட். வித்யார்த்திபவன் சாம்பாருக்கு பலரும் இன்றும் அடிமை.

இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன் திறக்கப்பட்ட உணவகங்கள் பற்றி தெரியுமா?
இந்தியாவில் இருக்கும் ரயில்-தீம் உணவகங்கள் பற்றி தெரியுமா? இங்கு என்ன சிறப்பு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com