சார்லஸ் முதல் சல்மான் வரை : இன்றும் ஆட்சி செய்யும் மன்னர்கள் - விரிவான தகவல்கள்!

கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளாக பூமியில் இருந்த மன்னராட்சி முறை 21ம் நூற்றாண்டில் வலுவிழந்தது. இப்போது குறிப்பிடும்படியாக உலகில் 43 மன்னராட்சிகள் மட்டுமே இருக்கின்றன.
சார்லஸ் முதல் சல்மான் வரை : இன்றும் ஆட்சி செய்யும் மன்னர்கள் - விரிவான தகவல்கள்!
சார்லஸ் முதல் சல்மான் வரை : இன்றும் ஆட்சி செய்யும் மன்னர்கள் - விரிவான தகவல்கள்!Twitter
Published on

மனிதர்கள் கூட்டமாக வாழ்த் தொடங்கியபோது தலைவர்கள் உருவாகியிருந்தனர். முதல் முறையாக அரசாங்கம் உருவானது முதலே மன்னர்களும் தோன்றிவிட்டனர்.

ஒரு மன்னருக்கு பிறகு அவரது மகன், பேரன் என குறிப்பிட்ட பகுதிகளை ஆண்டனர். அரசின் அளவு பெரியதாகும்போது சிற்றரசர்கள் உருவாகினர்.

பேரரசுகள் விரிவடைந்து செலெஸ்டியல் பேரரசு முதல் கிரேட் பிரிட்டன் வரை உலகின் பெரும்பகுதியை ஆட்சி செய்யும் மிகப்பெரிய அரசர்கள் உருவாகினர்.

கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளாக பூமியில் இருந்த மன்னராட்சி முறை 21ம் நூற்றாண்டில் வலுவிழந்தது. இப்போது குறிப்பிடும்படியாக உலகில் 43 மன்னராட்சிகள் மட்டுமே இருக்கின்றன.

இவற்றிலும் பெரும்பாலான நாடுகளில் மன்னர்களின் அதிகாரத்துக்கு வரம்புகள் இருக்கின்றன. சில நாடுகளில் மன்னர்களுக்கு கலாச்சார முக்கியத்துவம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இன்னும் சில மன்னர்கள் தொண்டு பிரச்சாரங்களை மேற்கொள்பவராக இருக்கின்றனர்.

இப்போதும் உலகில் இருக்கும் மன்னராட்சிகள் என்னென்ன? மன்னர்களின் நிலை எப்படியிருக்கிறது எனத் தெரிந்துகொள்வோம்.

மன்னராட்சியின் வகைகள்

முழுமையான முடியாட்சி

முழுமையான மன்னராட்சி குறித்து சொல்ல வேண்டியதில்லை. கதைகளில் படித்தும் படங்களில் பார்த்தும் நாம் தெரிந்துகொண்டது போல, எல்லா முடிவுகளை எடுக்கும் அதிகாரமும் மன்னரிடம் தான் இருக்கும்.

மன்னரின் கைகளுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. மன்னர் அதிகாரிகளுக்கு கட்டளைகளை வழங்குவார். மன்னருக்கு யாரும் கட்டளையிட முடியாது. ஆலோசனைகள் மட்டுமே!

பண்டைய காலங்களில் இதுவே பொதுவானதாக இருந்தது.

Saudi King Salman
Saudi King Salman

அரசியலமைப்பு முடியாட்சி

இந்த வகை முடியாட்சியில் அரசியலமைப்பில் மன்னர்களுக்கு கொடுக்கப்படும் அதிகாரத்தை மட்டுமே அவர்கள் பயன்படுத்த முடியும்.

முக்கியமான முடிவுகளை மன்னர் மட்டுமே எடுக்க முடியாது. சில நேரங்களில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும் மன்னருடன் இணைந்து மன்னர் அரசை வழிநடத்த வேண்டும்.

இன்றிருக்கும் மிகப் பெரிய அரச வம்சங்களில் ஒன்றான பிரிட்டிஷ் இதற்கு ஒரு உதாரணம். பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கு சட்டத்தை மீறி செயல்படுவதற்கான அதிகாரம் இருந்தாலும் மக்களாட்சியை மதிக்கும் வகையில் அவற்றைப் பயன்படுத்துவதில்லை.

பிற முடியாட்சிகள்

கூட்டாட்சி முடியாட்சி எனும் அரசியலமைப்பு சில இடங்களில் உள்ளது. அங்கு கூட்டாட்சிகளின் தலைமையாக முடியாட்சி இருக்கும். ஆனால் மக்கள் முடியாட்சி அல்லாத சக்திகளாலேயே ஆளப்படுவார்கள். இன்னும் சில கலப்பு முடியாட்சிகளும் உள்ளன.

பிரஞ்சு புரட்சிக்கு பின்னரே பெரும்பாலான முடியாட்சிகள் கவிழத்தொடங்கின. ஒருகாலத்தில் அதிகமான மன்னர் வம்சங்களைக் கொண்டிருந்த ஐரோப்பியா இப்போது ஜனநாயகத்தின் அடையாளமாக இருக்கிறது.

பெரும்பாலான மன்னராட்சிகள் மத்திய கிழக்கு நாடுகளில் தான் தென்படுகின்றன.

சார்லஸ் முதல் சல்மான் வரை : இன்றும் ஆட்சி செய்யும் மன்னர்கள் - விரிவான தகவல்கள்!
சவுதி அரேபியா : உலகில் சக்தி வாய்ந்த நாடாக உருவான பாலைவனம் - எப்படி?

முழுமையான அரசாட்சி

புருனே - சுல்தான் ஹசனல் போல்கியா

எசுவாத்தினி ( eswatini ) - மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி

ஓமன் - சுல்தான் ஹைதம் பின் தாரிக்

சவுதி அரேபியா - மன்னர் சல்மான்

வாட்டிகன் சிட்டி - போப் முதலாம் பிரான்சிஸ்

எசுவாத்தினி ( eswatini ) - மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி
எசுவாத்தினி ( eswatini ) - மன்னர் மூன்றாம் எம்ஸ்வதிTwitter

அரசியலமைப்பு முடியாட்சிகள்

காமன்வெல்த் ராஜ்ஜியம்

ஆன்டிகுவா மற்றும் பார்புடா

ஆஸ்திரேலியா

பஹாமாஸ்

பார்படாஸ்

பெலிஸ்

கனடா

கிரெனடா

ஜமைக்கா

நியூசிலாந்து

பப்புவா நியூ கினி

செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்

செயின்ட் லூசியா

செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்

சாலமன் தீவுகள்

துவாலு

ஐக்கிய இராச்சியம் - பிரிட்டன்

ஆகிய 16 பகுதிகளைக் கொண்டது தான் காமன்வெல்த் ராஜ்ஜியம். இதனை பிரிடிட்டிஷ் மன்னர் வம்சத்தின் தாக்கம் உள்ள பகுதிகளாக கொள்ளலாம்.

இந்த நாடுகளில் பிரிட்டிஷ் மன்னரால், நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல்கள் செயல்படுகின்றனர்.

சார்லஸ் முதல் சல்மான் வரை : இன்றும் ஆட்சி செய்யும் மன்னர்கள் - விரிவான தகவல்கள்!
பிரிட்டன்: "உங்களை யார் தேர்ந்தெடுத்தது?"- வலுக்கும் அரச குடும்பத்துக்கு எதிரான குரல்கள்!

இவை தவிர அந்தோராவில் சிக்கலான ஆட்சிமுறை நிலவுகிறது. அங்கு தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமரும் நாடாளுமன்றமும் செயல்படுகிறது.

ஐரோப்பிய நாடான இது பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையில் உள்ள பைரனீஸ் மலைகளுக்கு நடுவில் அமைந்திருக்கும் சிறிய நிலப்பரப்பு தான்.

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸுடன் அரசியலமைப்பு உறவுகளைக் கொண்டுள்ளது. இதனால் பிரான்ஸ் ஜனாதிபதியும் ஸ்பெயினில் உள்ள உர்கெல் பேராயரும் அந்தோராவின் இணை இளவரசர்களாக செயல்படுகின்றனர்.

இதனால் தான் இது ஒரு சிக்கலான முடியாட்சி என்கின்றனர்.

அந்தோராவின் இணை இளவரசர்கள்
அந்தோராவின் இணை இளவரசர்கள்

பெல்ஜியம், பூடான், டென்மார்க், ஜப்பான், லெசோத்தோ, லுக்செம்பர்க், மனாக்கோ, மொராக்கோ, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், ஸ்வீடன், தாய்லாந்து, டோங்கா ஆகிய நாடுகளிலும் அரசியலமைப்பு முடியாட்சி இருக்கிறது. இங்கு பெரும்பாலும் மன்னர்கள் சடங்கு ரீதியான கடமைகளை மட்டுமே நிறைவேற்றுவர்.

சார்லஸ் முதல் சல்மான் வரை : இன்றும் ஆட்சி செய்யும் மன்னர்கள் - விரிவான தகவல்கள்!
நார்வே : அமெரிக்க ஷாமனுடன் காதல் - அரச பட்டத்தை துறந்த இளவரசி!

பஹ்ரைனில் மன்னராட்சி தான் என்றாலும் அங்கு நாடாளுமன்றமும் செயல்படுகிறது. நாடாளுமன்றத்தில் பிரதமர் உட்பட பல பெரும்பாலான உறுப்பினர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

அரச குடும்பத்தினர் சன்னி முஸ்லீம்கள் என்பதனால் அவர்களுக்கு எதிராக ஷியா முஸ்லீம் அரசியல் அமைப்புகள் அவ்வப்போது கலகத்தில் ஈடுபடுவார்கள். இதனை அரை அரசியலமைப்பு முடியாட்சி எனலாம்.

ஜோர்தான், குவைத், லிட்சென்ஸ்டைன், கத்தார், யுஏஇ ஆகிய நாடுகளில் அரை அரசியலமைப்பு மன்னராட்சி எனலாம்.

malaysia king Abdullah of Pahang
malaysia king Abdullah of Pahang

மலேசியா ஒரு கூட்டமைப்பு, பல மாநிலங்களை உள்ளடக்கிய இறையாண்மை கொண்ட நாடு. மொத்தத்தில், நாட்டில் முக்கிய முடிவுகளை மேற்கொண்டு மொத்த ஆட்சியையும் நாடாளுமன்றம் மேற்கொள்கிறது, ஆனால் ஒரு முடியாட்சி அரச தலைவர் இருக்கிறார்.

மலேசியாவின் 9 மாநிலங்களின் மன்னர்களும் ஒரு கூட்டமைப்பை உருவாக்குகின்றனர். இந்த கூட்டமைப்பு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒட்டுமொத்த மாநிலங்களுக்கும் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கிறது.

சார்லஸ் முதல் சல்மான் வரை : இன்றும் ஆட்சி செய்யும் மன்னர்கள் - விரிவான தகவல்கள்!
இதுவல்லவா காதல்! ஹாரி முதல் எட்வர்ட் வரை- காதலுக்காக பட்டத்தை துறந்த அரச குடும்பத்தினர்

மலேசியாவின் மன்னருக்கு பிரதமரை தகுதிநீக்கம் செய்யவோ, அகற்றவோ அதிகாரமில்லை. ஆனால் தேர்தலில் யாரும் பெரும்பாண்மை வெல்லாத பட்சத்தில் புதிய பிரதமரைக் கைக்காட்டும் நபராக இருக்கிறார்.

கம்போடியாவில் கிமு 68 முதல் மன்னராட்சி செயல்பட்டு வருவதனால். உலகிலேயே மிகவும் பழமையான அரியணை அது.

உலகில் இருக்கும் ஒரே ஒரு தேர்தெடுக்கப்படும் மன்னராட்சி கம்போடியா தான். இங்கு மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் ஆன்மிக குருக்கள் இணைந்து ஒரு அரசரை தேர்ந்தெடுப்பர். அவர் வாழ்நாள் முழுவதும் நாட்டை ஆள்வார்.

சார்லஸ் முதல் சல்மான் வரை : இன்றும் ஆட்சி செய்யும் மன்னர்கள் - விரிவான தகவல்கள்!
செளதி மன்னர் தெரியும், உலகை ஆளும், ஆண்ட இந்த 9 அரசர்கள் குறித்து தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com