எல் சாப்போ : தன் வாழ்க்கையை படமாக எடுக்க சிறையை விட்டு தப்பித்த கைதி | பகுதி 2

2014-ம் ஆண்டில் மீண்டும் மெக்சிகோ போலீசால் பிடிபட்ட குஸ்மான் மீண்டும் சிறையில் இருந்து தப்பிப்பாரா என்ற கேள்வி எழுந்தது
El Chapo

El Chapo

Twitter

Published on

(இரண்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த தொடரின் முதல் பாகத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும்)

மெக்சிகோ அதிபர் பீனா நீட்டோ “கடந்த முறை அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது மன்னிக்க முடியாத ஒன்று. சென்ற முறை நடந்தது மீண்டும் நடக்காது” என்று உறுதியளித்தார்.

ஆயினும் கூட, 18 மாதங்களுக்குள் குஸ்மான் சிறையில் இருந்து ஜூலை 2015-ல் தப்பிப்பதற்கு ஒரு விமானத்தையே ஏற்பாடு செய்தார். குஸ்மான் தனது அறையில் இருக்கும் குளியலறை திறப்பின் வழியாக வெளியேறி, முப்பது அடி ஏணியின் உதவியால் இறங்கி ஒரு மைல் தொலைவில் உள்ள வீடு ஒன்றிற்கு செல்லும் பொருட்டு அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை ஒன்றில் பயணித்தார். இப்படியாக அவரது தப்பித்தல் அதிரடியாக ஹாலிவுட் திரைப்படங்களில் வருவது போல அமைந்தது.

அக்டோபர் 17, 2015 அன்று வடமேற்கு மெக்சிகோவில் அவரைப் பிடிக்க இராணுவம் முயன்றபோது குஸ்மானுக்கு முகம் மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. இதே காலத்தில் அவர் அமெரிக்க நடிகர் சீன் பென்னுடன் ஒரு இரகசிய நேர்காணலையே நடத்தினார். மெக்சிகோவில் பெண் நடிகர் கேட் டெல் காஸ்டிலோ வழியாக குஸ்மான் அமெரிக்க நடிகரை தொடர்பு கொண்டார். மேலும் இந்த உரையாடலின் மூலம் குஸ்மான் தனது வாழ்க்கையைப் பற்றி ஒரு திரைப்படம் உருவாக்கவும் விரும்பினார்.

Kate del Castillo and Sean penn with El Chapo

Kate del Castillo and Sean penn with El Chapo

Twitter

மீண்டும் பிடிபட்ட குஸ்மான் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்!

ஜனவரி 8, 2016 அன்று, லாஸ் மோச்சிஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு மெக்சிகன் அதிகாரிகள் குஸ்மானை மீண்டும் கைப்பற்றியதாக ட்விட்டரில் அதிபர் பீனா நீட்டோ அறிவித்தார்.

அந்த டிவிட்டில் “நடவடிக்கை முடிந்தது. அவர் எங்களிடம் இருக்கிறார்” என்று ரத்தினச் சுருக்கமாக எழுதினார் அதிபர்.

ரோலிங் ஸ்டோனின் இணையதளத்தில் அமெரிக்க நடிகர் பென்னுடனான குஸ்மானது நேர்காணல் வெளியிடப்படுவதற்கு ஒரு நாள் முன்பேயே அவருக்கு நாம் பிடிபட்டுவிடுவோமா என்ற அச்சம் வந்தது. அமெரிக்க நடிகருடன் குஸ்மான் தொடர்பு கொண்டது அவரைப் பிடிப்பதில் பங்களித்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் மெக்சிகன் அதிகாரிகள் குஸ்மானது மின்னணு பரிமாற்றங்களை கண்காணித்தது அவரை பிடிப்பதற்கு உதவியாக இருந்தது என தெரிவித்தனர்.

குஸ்மான் முந்தைய கோடையில் தப்பித்த அதே சிறைக்கு திரும்பினார். பின்னர் அவர் மெக்சிகோவின் ஜுவாரெஸில் உள்ள அமெரிக்க எல்லைக்கு அருகிலுள்ள ஒரு சிறைக்கு மாற்றப்பட்டார். அக்டோபர் 2016 இல், குஸ்மானின் வழக்கை விசாரிக்கும் நீதிபதியான விசென்டே பெர்முடெஸ் ஜகாரியாஸ் அவரது வீட்டிற்கு அருகில் படுகொலை செய்யப்பட்டார். இது குஸ்மானது செல்வாக்கை வெளிச்சம் போட்டுக் காண்பித்தது.

ஜனவரி 2017 இல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள மெக்சிகோ அரசாங்கம் குஸ்மானை அமெரிக்காவிடம் ஒப்படைத்தது. அடுத்த நாள், குஸ்மான் நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும் ஒரு டஜன் குற்றச்சாட்டுகளுக்கு தான் குற்றமற்றவர் என்பதையும் தெரிவித்தார்.

மே 2018 இல், குஸ்மானின் வழக்கறிஞர்களில் ஒருவரான ஏ. எடுவார்டோ பலரேசோ, நீதிபதி பிரையன் எம். கோகனிடம் விசாரணையை புரூக்ளினில் இருந்து கீழ் மன்ஹாட்டனில் உள்ள பெடரல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டார். கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

El Chapo

செளதி அரசர் முதல் இங்கிலாந்து ராணி வரை: உலக அரச குடும்பங்களின் சொத்துமதிப்பு இவ்வளவா?

Ismael "El Mayo" Zambada

Ismael "El Mayo" Zambada

Facebook

எல் சாப்போவின் விசாரணை

நவம்பர் 13, 2018 அன்று புரூக்ளினின் ஃபெடரல் மாவட்ட நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வழக்கு விசாரணை தொடங்கியது. சினாலோவா கார்டலின் உண்மையான தலைவர் இஸ்மாயில் "எல் மாயோ" ஜம்படா என்ற நபர் தான் என்று கூறி அவரது வழக்கறிஞர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஆனால் அமெரிக்க அரசாங்கம் வேறு மாதிரி யோசித்தது.

ஜனவரி 2019 இல், முன்னாள் அதிபர் பெனா நீட்டோ, எல் சாப்போவிடம் லஞ்சம் பெற்றதாக சாட்சியமளித்த ஒரு சாட்சியை அமெரிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் குழு ஆஜர்படுத்தியது. போதைப்பொருள் தாதாவான எல் சாப்பாவோவின் மனைவி எம்மா கரோனல் ஐஸ்புரோ, 2015 ஆம் ஆண்டு சிறையிலிருந்து தப்பிக்கத் திட்டமிடுவதில் பெரிதும் ஈடுபட்டதாக மற்றொரு சாட்சி சாட்சியமளித்தார்.

El Chapo

El Chapo

Twitter

குற்றவாளி எனத் தீர்ப்பு மற்றும் தண்டனை

பிப்ரவரி 12, 2019 அன்று, 56 சாட்சிகளின் 200 மணிநேர சாட்சியத்திற்குப் பிறகு, எல் சாப்போ அவருக்கு எதிரான அனைத்து 10 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். இதில் தொடர்ச்சியான குற்றவியல் கார்ட்டலை நடத்தியது, போதைப்பொருளை பாடம் செய்து கடத்த சதி செய்தது, மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது போன்றவை அடக்கம்.

ஜூலை 17, 2019 அன்று, நீதிபதி கோகன், எல் சாப்போவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார். மேலும் குஸ்மான் 12.6 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டார்.

El Chapo

உடலுறவு : உங்கள் கூடல் சிறப்பாக இருக்க இதனை செய்யுங்கள்! | இது ச்ச்சீ விஷயமல்ல

El Chapo

உடலுறவு : 10 ஆச்சரியமூட்டும் ஆரோக்கிய நன்மைகள்

El Chapo

உடலுறவு : ‘ஃபிங்கரிங்’ செய்வது என்றால் என்ன? | Nalam 360

El Chapo series in Netflix

El Chapo series in Netflix

Facebook

தொலைக்காட்சி நிகழ்ச்சி

ஏப்ரல் 2017 இல், நெட்ஃபிளிக்ஸ் அதன் குற்றவியல் ஆக்சன் தொடர் வரிசையில் எல் சாப்போவின் முதல் சீசனை வெளியிட்டது. இது பிரபல போதைப்பொருள் மன்னனின் எழுச்சி மற்றும் இறுதியில் வீழ்ச்சியை சித்தரிக்கிறது. நடிகர் மார்கோ டி லா ஓ, குஸ்மானாக நடித்தார். இரண்டாவது சீசன் செப்டம்பர் 2017-லும் மூன்றாவது சீசன் ஜூலை 2018-இலும் வெளியிடப்பட்டது. சிறையிலிருக்கும் குஸ்மான் இந்த தொடரைப் பார்த்தாரோ இல்லையோ அவரது வாழ்க்கை திரைப்படமாக்கப்பட வேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேறியது.

Ivan Guzman el Chapo's son

Ivan Guzman el Chapo's son

குழந்தைகள்

குஸ்மான் குறைந்தது மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர் ஒன்பது, ஒருவேளை 13 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தந்தையின் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் பங்கு பெற்ற அவரது குழந்தைகளில், இவான் குஸ்மான் மிகவும் குறிப்பிடத்தக்கவர். கார்கள், காட்டு விலங்குகள், துப்பாக்கிகள் மற்றும் பார்ட்டிகள் நிறைந்த தனது ஆடம்பரமான பிளேபாய் வாழ்க்கை முறையை சமூக ஊடகங்களில் இன்றும் பகிர்ந்து கொள்கிறார்.

எல் சாப்பாவின் கதை உணர்த்துவது என்ன? அரசாங்கங்களை கையில் போட்டுக் கொண்டால் நீங்கள் சிறையில் இருந்து விமானத்திலேயே தப்பிக்கலாம். போதைப் பொருள் தொழிலில் புழங்கும் அளப்பறிய பணம் எல் சாப்போ எனும் போதைப் பொருள் கடத்தல் மன்னனை வெகுவாக ஆட்டம் போட வைத்தது. என்ன ஆடினாலும் இறுதியில் களிதான் என்பது ஒரு குற்றவாளிக்கு அதுவும் உலகம் அதிகம் தேடிய குற்றவாளிக்கு சரியான முடிவுதான்.

முற்றும்.

முந்தைய பகுதியைப் படிக்க

El Chapo

எல் சாப்போ: உலகை நடுங்க வைத்த போதை பொருள் மாஃபியாவின் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com