அமெரிக்காவில் 12 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைவிட புட்டிப்பால் தருவதில்தான் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் இந்த சூழலில் பால் பவுடரைத் தயாரிக்கிற அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான அப்பாட் நியூட்ரிசன், பாதுகாப்புக் காரணங்களையொட்டி மூடப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக அமரிக்காவில் குழந்தைகளுக்குப் பால் பவுடர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அரசியல் ரீதியில் அழுத்தங்கள் ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாகக் கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் வழியாகக் கண்காட்சி நடந்தது. தற்போது தொற்று முழுவதும் குறைந்துவிட்ட சூழ்நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் 20 முதல் 24-ம் தேதி வரை ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி நடைபெறுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்குக் கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார்.
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. உலக நாடுகளின் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா சிறிதும் செவி சாய்க்கவில்லை. இதனால், உக்ரைன் பலத்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. உக்ரைன் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில், G7 கூட்டமைப்பு நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன. போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்கள் தங்களின் அடிப்படைத் தேவையை நிறைவேற்றுவதற்காக 18.4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை G7 கூட்டமைப்பு நாடுகள் வழங்க முடிவு செய்திருக்கின்றன.
பாகிஸ்தானில் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்திருக்கிறது. அமெரிகக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு நேற்று ரூ. 200 ஆக சரிந்துவிட்டது. வரலாற்றிலேயே முதல்முறையாக பாகிஸ்தான் இதை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது அந்த நாட்டு பொருளாதார நிபுணர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. பல பில்லியன் டாலர் கடன் திட்டத்தைப் புதுப்பிக்கும் நோக்கத்தில் உள்ளது பாகிஸ்தான். இதனால் தோஹாவில் உள்ள சர்வதேச நாணய நிதியத்துடன் பாகிஸ்தான் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் காரணமாக உள்ளூர் நாணயம் அதன் சரிவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெறும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust