சவுதி அரேபியா: பாலைவன நாட்டில் செழிக்கும் பெண்கள் - IMF அறிக்கை சொல்வதென்ன?

சில ஆண்டுகளுக்கு முன்பு வரைக் கற்பனைக் கூட செய்துபார்க்க முடியாத துறைகளில் இன்று பெண்கள் பணியாற்றி வருகின்றனர். "பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை நான் அளவிடுகிறேன்" என அம்பேத்கர் கூறியது சௌதியின் விஷயத்தில் பலித்திருக்கிறதா?
சௌதி அரேபியா: பாலைவன நாட்டில் செழிக்கும் பெண்கள் - IMF அறிக்கை சொல்வதென்ன?
சௌதி அரேபியா: பாலைவன நாட்டில் செழிக்கும் பெண்கள் - IMF அறிக்கை சொல்வதென்ன?Twitter

"பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை நான் அளவிடுகிறேன்" என அம்பேத்கர் கூறியிருக்கிறார்.

பெரிய அளவில் மாற்றங்களையும் வளர்ச்சியையும் கண்டு வருகிறது சவுதி அரேபியா. இஸ்லாமிய நாடான சவுதியில் பெண்களின் முன்னேற்றம் எப்படிப்பட்டதாக இருக்கிறது?

நாட்டையே நவீனப்படுத்திவரும் சவுதி, பெண்களின் விஷயத்தில் பழமைவாத சமூகமாகவே பார்க்கப்பட்டு வந்தது. சமீப காலத்தில் பெண்களின் உடை, பாலின பாகுபாடு, பெண் ஓட்டுநர்கள் மீதான கட்டுப்பாடு ஆகிய விஷயங்களில் சவுதி கொண்டுவந்துள்ள மாற்றங்கள் புரட்சிகரமானதாக பார்க்கப்படுகிறது.

முகமது பின் சல்மான் தனது நாடு எண்ணெய் வளத்தை மட்டும் சார்ந்திருக்கும் ஒன்றாக இல்லாமல், நவீன பொருளாதாரத்துக்கு மாற வேண்டும் என நினைத்தார்.

ஆண் துணை இல்லாமல் பெண்கள் வெளியே வரக் கூடாது என்ற சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரைக் கற்பனைக் கூட செய்துபார்க்க முடியாத துறைகளில் இன்று பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

பல தசாப்தங்களாக தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்த நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று!

2012ம் ஆண்டு பெண்கள் வீட்டுக்கு வெளியில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் அழகு சாதனப் பொருட்கள் விற்பனையகத்திலும் துணிக்கடைகளிலும் பெண்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

2018ம் ஆண்டு ஒட்டுமொத்த தொழிலாளர் எண்ணிக்கையில் பெண்கள் 19.7 விழுக்காடாக இருந்தனர்.

2016ம் ஆண்டு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தனது ’விஷன் 2030’ திட்டத்தின் படி பெண்களின் பங்களிப்பை 30 விழுக்காடாக உயர்த்த நினைத்தார்.

சௌதி அரேபியா: பாலைவன நாட்டில் செழிக்கும் பெண்கள் - IMF அறிக்கை சொல்வதென்ன?
ஈரான் : பாலைவனம், தீவிரவாதம், போர் - நூற்றாண்டுகளாக நிம்மதியின்றி தவிக்கும் நாட்டின் கதை

பெண்கள் வேலைக்கு செல்வதிலும் பொருளாதார சுதந்திரத்தை எட்டி, முன்னேற்றம் அடைவதிலும் ஆர்வம் காட்டினர். 2022ம் ஆண்டே இளவரசரின் லட்சியத்தை நிறைவேற்றினர்.

இப்போது சவுதியில் உள்ள மொத்த தொழிலாளர்களில் பெண்களின் பங்கு 36 விழுக்காடாக உள்ளது.

முகமது பின் சல்மான் தனது நாடு எண்ணெய் வளத்தை மட்டும் சார்ந்திருக்கும் ஒன்றாக இல்லாமல், நவீன பொருளாதாரத்துக்கு மாற வேண்டும் என நினைத்தார்.

இதன் விளைவாக அங்குள்ள பெண்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றம் நிகழ்ந்திருப்பதை சர்வதேச செலாவணி நிதியம் (IMF) அறிக்கையில் பார்க்க முடிகிறது.

சௌதி அரேபியா: பாலைவன நாட்டில் செழிக்கும் பெண்கள் - IMF அறிக்கை சொல்வதென்ன?
Qatar : பாலைவனம் டூ 'பணக்கார நாடு' - கத்தார் வளர்ச்சியின் 3 ரகசியங்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சவுதியின் விதிகளின்படி, ஆண்கள் இல்லாத துறையில் மட்டுமே பெண்கள் வேலை செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.

மருத்துவத்துறையில் ஆண்களும் பெண்களும் இணைந்து வேலை செய்தபோதும் பெண்கள் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. மருத்துவமனைகளில் பெண்கள் வேலை செய்வது நெறிமுறையற்றதாக கருதப்பட்டது.

இப்போது எல்லாத்துறையிலும் பெண்கள் வேலை செய்வதனால் இந்த நிலை மாறியுள்ளது. ஐடி துறையில் அதிகமாக பெண்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

சௌதி அரேபியா: பாலைவன நாட்டில் செழிக்கும் பெண்கள் - IMF அறிக்கை சொல்வதென்ன?
சவுதி அரேபியா : உலகில் சக்தி வாய்ந்த நாடாக உருவான பாலைவனம் - எப்படி?

அரசியல், விளையாட்டு, சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் பிற துறைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தனியார் துறைகளில் மட்டுமில்லாமல் அரசப் பதவிகளிலும் பெண்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

வேறு நாடுகளுக்கு தூதர்களாக பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 150 பேர் கொண்ட ஷூரா கவுன்சிலில் 30 பெண்கள் நியமிக்கப்பட வேண்டும் என சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்ளூர் அரசப்பதவிகளிலும் பெண்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

சௌதி அரேபியா: பாலைவன நாட்டில் செழிக்கும் பெண்கள் - IMF அறிக்கை சொல்வதென்ன?
சௌதி அரேபியாவின் பிரமாண்ட இரட்டை கட்டடம்: 120 கி.மீ நீளம், 488 மீ உயரம் - படஜெட் எவ்வளவு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com