"நான் மோடியின் ரசிகன்" பிரதமர் குறித்தும் இந்தியா குறித்தும் எலான் மஸ்க் பேசியது என்ன? Twitter
பிசினஸ்

"நான் மோடியின் ரசிகன்" பிரதமர் குறித்தும் இந்தியா குறித்தும் எலான் மஸ்க் பேசியது என்ன?

Antony Ajay R

பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகப் பெரிய பணக்காரரும் டெஸ்லா, ட்விட்டர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்கை நியூயார்கில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் எரிபொருள் முதல் ஆன்மிகம் வரை பன்முகமான விவாதங்களை நிகழ்த்தியதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

"பிரதமர் மோடியுடன் உரையாற்றியது சிறப்பானதாக இருந்தது. அடுத்த ஆண்டு நான் இந்தியா வர திட்டமிட்டுள்ளேன்" என எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.

இந்திய பிரதமர் மோடி குறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டரில், “மீண்டும் சந்திப்பது கௌரவமாக இருந்தது” என ட்வீட் செய்துள்ளார். மேலும் அவர் “வேறெந்த பெரிய நாடுகளையும் விட இந்தியா பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கிறது. இந்தியாவின் எதிர்காலம் குறித்து மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறேன்” எனவும் கூறியுள்ளார்.

இந்தியாவில் முதலீடுகளை செய்ய எலான் மஸ்க் தயராக இருப்பதாகவும் முடிந்த வரை விரைவாக டெஸ்லாவை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

எலான் மஸ்க், “உண்மையாகவே இந்தியாவின் நலனை மோடி விரும்புகிறார். ஏனெனில் அவர் எங்களை தொடர்ந்து இந்தியாவில் முதலீடு செய்ய அழைக்கிறார். நான் மோடியின் ரசிகன்” எனக் கூறியுள்ளார்.

இந்தியாவில் முதலீடு செய்ய சரியான தருணத்துக்காக காத்திருப்பதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.

இந்தியாவில் முதலீடு செய்ய சரியான தருணத்துக்காக காத்திருப்பதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ள பிரதமர் மோடி, எழுத்தாளர்கள், பொருளாதார நிபுணர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சில தலைவர்களை சந்தித்துள்ளார்.

நியூயார்கில் புதன் கிழமை சர்வதேச யோகா தினத்தை தொடங்கி வைத்த பிறகு மோடி வாஷிங் டன் புறப்படுவார் எனக் கூறப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்கவுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?