2023 புத்தாண்டு : பணம் சேமிக்க உறுதிமொழி எடுக்கிறீர்களா? - இதோ ஈஸி டிப்ஸ்! Twitter
பிசினஸ்

2023 புத்தாண்டு : பணம் சேமிக்க உறுதிமொழி எடுக்கிறீர்களா? - இதோ ஈஸி டிப்ஸ்!

நிதானமாக நம் செலவீனங்களை சிந்தித்துப் பார்த்தால் நிச்சயமாக வீண் செலவு செய்திருப்போம். நாம் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் நமக்கு மீண்டும் பலன் தருவது அவசியம். அப்படி இல்லாத செலவுகள் வீணானதே!

Antony Ajay R

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு அன்று சில உறுதி மொழிகளை எடுப்பது நம் வழக்கம்.

ஆனால் அவற்றைக் கடைப்பிடிப்பது நம் எல்லாருக்கும் முடியாமல் போகிறது.

புத்தாண்டு அன்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு ஜிம்மில் ஒரு வருடத்துக்கு பணம் கட்டி இழப்பவர்கள் இந்த ஆண்டும் ஓயப்போவதில்லை.

மற்றொரு பக்கம் 2 மாதத்துக்கு பிறகு ஜிம்முக்கு பணம் கட்டுவது கடினமாவதால் உறுதிமொழியை பின்பற்ற முடியாமல் போகிறவர்கள்.

நமது திட்டங்களை சரியாக நிறைவேற்ற வேண்டுமென்றால் நிச்சயமாக நம் கையில் அதற்கான பணம் வேண்டும்.

ஆண்டு முழுவதும் பணத்தை சரியாக கையாள வேண்டும் என்றே நாம் முதலில் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.

அதற்காக சில டிப்ஸ்களை இங்கே கொடுக்கிறேன்.

செலவுகளை கண்காணியுங்கள்

நாம் செய்யும் தேவையில்லாத செலவுகளை குறைத்தாலே நம்மால் அதிக பணத்தை சேமிக்க முடியும்.

ஆனால் நாம் எங்கெங்கு என்னென்ன செலவு செய்கிறோம், அவற்றில் எவையெல்லாம் தேவையற்றது என்பதை நினைவில் வைத்துக்கொள்வதில்லை.

நாம் ஆன்லைனில் செய்யும் செலவுகள் தான் நமக்கு மிகப் பெரிய பிரச்னை. கையில் இருந்து பணம் போவதே தெரியவில்லை என சிலர் கூறுவதைக் கேட்க முடியும்.

இந்த செலவுகளை கணக்கில் வைக்க ஃபைனான்ஸ் ஆப்களை பயன்படுத்துங்கள்.

சேமிப்பு என்றாலே நாம் மாத தொடக்கத்தில் ஒரு பட்ஜெட் போட்டுவிடுவோம். ஆனால் அது பின்பற்றப்படுவதே இல்லை.

மாறாக மாத இறுதியில் நாம் என்னென்ன செலவுகளை செய்தோம் என்று பட்டியலிட்டால் நாம் செய்யும் தேவையற்ற செலவுகள் தெரிந்துவிடும்.

அதாவது ஜனவரிக்கு பட்ஜெட் போடும் முன் டிசம்பரில் செய்த செலவுகளை திரும்பி பாருங்கள்.

செலவுகளைக் குறைக்கலாம்

செலவுகளைக் குறைப்பது மிகக் கடிமானதாக பலருக்கு தெரியும்.

ஏனெனில் நாம் எப்போதுமே இறுக்கமாக போதிய பாணம் இல்லாதது போலவே உணர்கிறோம்.

ஆனால் நிதானமாக நம் செலவீனங்களை சிந்தித்துப் பார்த்தால் நிச்சயமாக வழி கிடைக்கும்.

நாம் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் நமக்கு மீண்டும் பலன் தருவது அவசியம். அப்படி இல்லாத செலவுகள் வீணானதே!

பட்ஜெட் அப்டேட்!

நாம் ஒரு முறை போட்ட பட்ஜெட்டை எப்போதுமே நம்பியிருக்க கூடாது.

அதிகம் பயன்படுத்தும் பொருட்களின் விலை குறைந்தாலோ, உயர்ந்தாலோ பட்ஜெட்டை அதற்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும்.

நம் சம்பளம் அதிகரிக்கும் போது பட்ஜெட்டை மாற்ற வேண்டியது அவசியம்.

அந்த நேரத்தில் செலவு செய்வதை விட சேமிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

கடமைகளும் இலக்குகளும்

நாம் சம்பாதிக்கும் பணத்தில் செய்ய வேண்டிய கடமைகளும் இலக்குகளும் நமக்கு இருக்கின்றன.

படிப்பு, திருமண செலவு எல்லாம் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள்.

வீடுகட்டுவது, கார் வாங்குவது போன்றவை நமது இலக்குகள்.

இவற்றில் கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சேமிக்க வேண்டும்.

இது தவிர நமது க்ரெடிட் கார்ட் கடனை அடைக்க வேண்டும் என்ற கடமைக்கு முக்கியத்துவமும், இந்த ஆண்டுக்குள் 1,00,000 ரூபாய் சேமிக்க வேண்டும் போன்ற இலக்குகளுக்கு இரண்டாம் கட்ட முக்கியத்துவமும் கொடுக்கலாம்.

50/30/20 Rule

பட்ஜெட் ஒதுக்குவதிலே பலருக்கு பிரச்னை இருக்கிறது. எந்தெந்த தேவைகளுக்கு எவ்வளவு பணம் ஒதுக்குவது எனத் தெரியாது.

இதற்கு சர்வதேச அளவில் 50/30/20 விதி உதவுகிறது.

வருமானத்தில்,

50% - அத்தியாவசியத் தேவைகள் (உணவு, மருத்துவம், கல்வி, வாடகை...)

30% - விருப்பங்கள் (தொலைக்காட்சி, ஓடிடி, மொபைல், பயணங்கள்)

20% - சேமிப்பு மற்றும் அவசரகால நிதி

அவசர கால செலவுகள்

அவசர கால செலவுகள் ஒவ்வொரு மாதமும் ஒதுக்கீடு செய்வது அவசியம்.

50/30/20 விதியில் மூன்றாவதாக இருக்கும் 20ல் 10% சேமிக்கலாம், நமக்கென்ன அவசர செலவு வந்துவிடப் போகிறது என நினைத்திருப்பீர்கள்.

ஆனால் அவசரமான மருத்துவ செலவுகள் வரவில்லை என்றாலும் திருமணத்துக்கான மொய் எழுதுவது, அன்பளிப்பு வழங்குவது, வாகனப் பராமரிப்பு செலவுகள் ஆகியவை எப்போது வரும் எனக் கூற முடியாது.

இந்த செலவுகள் மொத்தமாக குவியும் போது திக்கு முக்காடிப் போகிறோம். அப்படி ஆகாமல் இருக்க நம் பணத்தை சரியாக அவசர செலவுகளுக்கு ஒதுக்கி வைப்பது அவசியம்.

கடன்களை முடித்துவிடுங்கள்

கடன் வாங்குவது குறிப்பாக க்ரெடிட் கார்டைப் பயன்படுத்தும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நமக்கு அவசியத் தேவை என்றால் மட்டுமே க்ரெடிட் கார்டைப் பயன்படுத்த வேண்டும்.

தேவையில்லாமல் க்ரெடிட் கார்ட் வாங்கி அதில் பெறும் கடனை கட்ட முடியாமல் போனால் சம்பாதிப்பதில் பெரும்பகுதியை இழக்க நேரிடும்.

எந்த பொருளையும் கடனில் வாங்குவதற்கு முன் பலமுறை யோசித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் வட்டியாக தேவையில்லாமல் பணத்தைக் கொடுக்கிறொம் அல்லவா!

சாத்தியமான வழியில் செயல்படுங்கள்

எதாவது தொழிலில் அல்லது ஷேர் மார்கெட்டில் முதலீடு செய்ய விரும்பினால் இருக்கும் பணத்தில் செய்ய வேண்டாம்.

உங்கள் பட்ஜெட்டில் வராத, காணாமல் போனாலும் பரவாயில்லை என்ற நிலையில் இருக்கும் பணத்தை மட்டுமே முதலீடு செய்யுங்கள்.

உடனடியாக முதலீடு செய்ய வேண்டிய தேவை இல்லை, முதலீட்டுக்காக தனியாக பணத்தை சேமியுங்கள்.

பணத்தை சேமிக்க படிப்படியாக பயிற்சி எடுங்கள். ஆபிஸ் நேர டீயைக் குறைப்பது முதல் பொது போக்குவரத்தை பயன்படுத்துவது வரை சேமிக்க பல வழிகள் இருக்கின்றது.

இதில் உங்களுக்கு சாத்தியப்படும் அனைத்தையும் மேற்கொள்ளுங்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?