Ambani Twitter
பிசினஸ்

Jio அம்பானி கதை: அம்பானிக்கு ஸ்கெட்ச் போட்ட சிலர் - துவம்சம் செய்த திருபாய் | பகுதி 12

பியர் ஆபரேட்டர்கள், அம்பானிக்கு விரித்த வலையை வைத்து, திருபாய் லாபம் சம்பாதித்ததாகவும் கூறப்பட்டது. அதெப்படி?

Gautham

பியர் ஆபரேட்டர்கள் லட்சக் கணக்கிலான ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளை ஷார்ட் செல் செய்து வந்த போது, திடீரென, மேற்கு ஆசியாவைச் சேர்ந்த என்ஆர்ஐ முதலீட்டாளர்கள் பலரும் பியர் ஆபரேட்டர்கள் விற்கும் ரிலையன்ஸ் பங்குகளை வாங்கிக் குவித்தனர். ஒரு கட்டத்தில் அந்த முதலீட்டாளர்கள், ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளை வாங்க மட்டும் சுமார் 10 கோடி ரூபாய் செலவழித்ததாக எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இன்றுதான் இந்தியப் பங்குச் சந்தைகளில் ஒரு பங்கை வாங்கினாலோ விற்றாலோ பரிவர்த்தனை செய்யப்பட்டு மூன்று நாட்களுக்குள் அது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு செட்டில் ஆகிறது. ஆனால் 1980களில் பிரதி வெள்ளிக்கிழமை தான் செட்டில்மெண்ட் பணிகள் நடைபெற்றன.

1982 ஏப்ரல் 30ஆம் தேதி, பியர் ஆபரேட்டர்கள் ஷார்ட் செல் செய்த பங்குகளை வாங்கிய என்ஆர்ஐ முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்குகளை செட்டில் செய்யுமாறு கூறினர்.

அதிகரித்த ரிலைன்ஸ் பங்குகளின் விலை

பிரச்சனை என்னவெனில் பியர் ஆபரேட்டர்கள் கருதியது போல ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளின் விலை குறையவில்லை. பியர் ஆபரேட்டர்களின் கையில் செட்டில் செய்யப் பங்குகள் இல்லை. எனவே, பியர் ஆபரேட்டர்கள் தங்களின் கைக்காசைப் போட்டு ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளைக் கூடுதல் விலைக்கு வாங்கி தான் அந்த முதலீட்டாளர்களுக்குப் பணத்தை செட்டில் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பியர் ஆபரேட்டர்கள் கையில் டெலிவரி கொடுக்க போதிய அளவுக்கு ரிலையன்ஸ் நிறுவனப் பங்கு இல்லாததால்,1982 மே 3, 4 ஆகிய இரு தேதிகளிலும் பங்குச்சந்தை செயல்படாமல் இருந்ததாக எகனாமிக் டைம்ஸின் ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 200 ரூபாயைத் தொட்டது. காரணம் பியர் ஆபரேட்டர்கள் எப்படியாவது எவ்வளவு பணத்தையாவது கொடுத்து ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளை வாங்கி அந்த முதலீட்டாளர்களுக்கு டெலிவரி கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்த டிமாண்ட் சப்ளை காரணமாக, ரிலையன்ஸ் பங்கு விலை தாறுமாறாக அதிகரித்தது.

பியர் ஆபரேட்டர்கள், அம்பானிக்கு விரித்த வலையை வைத்து, திருபாய் லாபம் சம்பாதித்ததாகவும் ஒருதரப்பில் கூறப்பட்டது.

அதெப்படி?

Ambani

மண்ணைக் கவ்விய பியர் ஆபரேட்டர்கள்

பாயிண்ட் 1: பியர் ஆபரேட்டர்கள் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளுக்காக அலைந்த போது, திருபாய் ரிலையன்ஸ் பங்குகளைச் சந்தையில் கசிய விட்டதாகக் கூறப்பட்டது. ஆக திருபாய் வைக்கும் விலைக்குத்தான் பியர் ஆபரேட்டர்கள் பங்குகளை வாங்க வேண்டி வந்தது. அதில் ஒரு லாபம் பார்த்தார் அம்பானி.

பாயிண்ட் 2: சரி யாரிடம் விற்றனர்?: பியர் ஆபரேட்டர்கள் ஷார்ட் செல் செய்த போது, திடீரென ரிலையன்ஸ் பங்குகளை வாங்கிய அந்த என்ஆர்ஐ முதலீட்டாளர்களால், ரிலையன்ஸின் பங்கு விலை சரியவில்லை, மாறாக அதிகரித்தது. அதோடு பியர் ஆபரேட்டர்கள் எப்படியாவது பங்கை வாங்கி செட்டில் செய்ய வேண்டிய கட்டாயத்தினாலும் விலை எகிறியது என்று பார்த்தோம். 1980களில் சுமார் பத்து கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்த, அந்த என்ஆர்ஐ முதலீட்டாளர்கள் யார் என்கிற கேள்வி எழுந்தது? அது இந்திய நாடாளுமன்றம் வரை மிகப்பெரிய அரசியல் அதிர்வலைகளைக் கிளப்பியது. திருபாய் அம்பானி இந்த ஏற்பாடுகளைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆகக் குறைந்த விலைக்கு ரிலையன்ஸ் பங்குகளை வாங்கி லாபம் பார்த்ததும் அம்பானி தான் என்று கூறப்பட்டது.

Ambani

சிறு முதலீட்டாளர்களை காத்த அம்பானி

சிவனே என வர்த்தகமாகி வந்த பங்குகளை விலை குறைத்து, அம்பானியின் முதலீட்டாளர்களிடமே விற்ற பியர் ஆபரேட்டர்கள், அவர்களுக்கு செட்டில் செய்ய, திருபாய் அம்பானி வெளியிட்ட பங்குகளையே அதிக விலை கொடுத்து வாங்கினர். இப்படித் தான் அம்பானி தனக்கு விரித்த வலையைக் கொண்டு, லாப மீன் பிடித்து பியர் கார்டெல்களைக் கதறவிட்டார்.

இதன் விளைவாக, ரிலையன்ஸில் முதலீடு செய்திருந்த சிறு முதலீட்டாளர்கள் விலை சரிவை எதிர்கொள்வதற்குப் பதிலாக விலை ஏற்றம் கண்டு மகிழ்ந்தனர்.

நாடாளுமன்றம் வரை சென்ற விவகாரம்

திருபாய் அம்பானி திடீரென பங்குச் சந்தையில் சகட்டுமேனிக்கு பங்குகளை வாங்க எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது என்கிற கேள்விக்கு 1982 - 83 காலகட்டத்தில் அப்போது இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி இந்திய நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.

பல வெளிநாட்டு இந்தியர்கள் ரிலையன்ஸ் குழுமத்தில் சுமார் 22 கோடி ரூபாய் முதலீடு செய்து இருந்ததாகவும் அந்த பணத்தை வைத்துத்தான் அந்நிறுவனம் ரிலையன்ஸ் பங்குகளை வாங்கியதாகவும் திருபாய் அம்பானி தொடர்பான பங்குச்சந்தை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரணாப் முகர்ஜி.

அந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் யார் எனப் பத்திரிகைகள் கேள்வி கேட்டுத் துருவினர். பின்னாளில் இது தொடர்பாக, மத்திய ரிசர்வ் வங்கியின் விசாரணை நடத்தப்பட்டது. இந்தப் பிரச்சனையில் ரிலையன்ஸ் எந்த முறைகேட்டையும் செய்யவில்லை என விசாரணை பிசுபிசுத்துப் போனது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?