லண்டனைச் சேர்ந்த முதலீடு இடம்பெயர்வு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ், உலகின் பணக்கார நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் ஒரு நகரத்தில் இருக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கையைக் கொண்டு பணக்கார நகரங்களை வகைப்படுத்தியுள்ளது.
இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணத்தில் உள்ள நியூ யார்க் நகரம் முதலிடம் பிடித்துள்ளது.
340,000 மில்லியனர்களுடன் நியூ யார்க் முதலிடம்
டாப் 10 இடங்களில்,
நியூ யார்க், அமெரிக்கா
டோக்கியோ, ஜப்பான்
வளைகுடா பகுதி, அமெரிக்கா
லண்டன், இங்கிலாந்து
சிங்கப்பூர்
லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா
ஹாங் காங், சீனா
பெய்ஜிங், சீனா
ஷாங்காய், சீனா
சிட்னி, ஆஸ்திரேலியா
ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் உள்ள 97 நகரங்கள் இடம் பெற்றிருக்கின்றன. 5 இந்திய நகரங்களும் அடக்கம்.
இந்தியாவிலேயே பணக்கார நகரமாக இருப்பது மும்பை. இங்கு 59,400 மில்லியனர்களும் 29 பில்லியனர்களும் இருக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் மும்பையில் 65 சதவீதம் பணக்காரர்கள் அதிகரித்துள்ளனர்
அடுத்தபடியாக டெல்லியில் 30,200 மில்லியனர்கள் இருக்கின்றனர். 16 பில்லியனர்கள் வசிக்கின்றனர்.
12,400 மில்லியனர்களுடன் பெங்களூரு இருக்கிறது. இங்கு 8 பில்லியனர்கள் வசிக்கின்றனர்.
கொல்கத்தாவில் 12,100 மில்லியனர்களும் 7 பில்லியனர்களும் இருக்கின்றனர்.
ஹைத்ராபாத்தில் 11,100 மில்லியனர்களும் 5 பில்லியனர்களும் இருக்கின்றனர்.
மும்பை உலக அளவில் 21வது இடத்தில் இருக்கிறது. டெல்லி 36வது இடத்தில் இருக்கிறது. பெங்களூரு 60வது இடத்திலும் கொல்கத்தா 63வது இடத்திலும் இருக்கின்றது. 65வது இடத்தில் ஹைத்ராபாத் இருக்கிறது.
இந்த பட்டியலில் இருக்கும் நகரங்களில் குறைந்தது ஒரு சென்டி மில்லியனராவது (100 மில்லியனுக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்) இருக்கின்றனர்.
அந்த அடிப்படையில் சென்னை உள்ளிட்ட நகரங்கள் இடம் பெறவில்லை.
2021 நிலவரப்படி, இந்தியா முழுவதும் மொத்தம் 7.96 லட்சம் மில்லியனர்கள் இருந்திருக்கின்றனர். 2023 அறிக்கை சொல்வதன்படி, டாப் 5 நகரங்களில் மட்டும் 1.25 லட்சம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust