How To Become Rich? இந்த 7 விஷயங்களை செய்தால் நீங்களும் மில்லியனர் ஆகலாம்! Twitter
பிசினஸ்

How To Become Rich? இந்த 7 விஷயங்களை செய்தால் நீங்களும் மில்லியனர் ஆகலாம்!

Antony Ajay R

இப்போது உலகம் முழுவதுமே கணினி மயமாகிவிட்டது. ஆனால் 1965ம் ஆண்டு உலகிலேயே சில இடங்களில் மட்டுமே கணினியைக் காண முடிந்தது. 

பள்ளிகளில் கணினிக் கற்றுக்கொடுக்கும் பழக்கம் வெகு சில இடங்களில் தான் இருந்தது. அப்படிப்பட்ட பழக்கம் உலகப் பணக்காரரான பில்கேட்ஸ் படித்த லேக் சைட் ஸ்கூலில் இருந்தது.

அந்த பள்ளியில் 300 பேர் அப்போது படித்தனர். அதில் இரண்டு பேருக்கு கணினி மீது ஆர்வம் வந்தது. ஒருவர் பில் கேட்ஸ் மற்றொருவர் அவரது நண்பரான பால் ஆலன். 

பில்கேட்ஸ் ஒரு நேர்காணலில் லேக் சைட் இல்லை என்றால் இன்றைக்கு மைக்ரோசாஃப்ட் என்ற நிறுவனம் இல்லை எனக் கூறியிருப்பார்.

பில்கேட்ஸ் போல ஏன் மற்றொரு நிறுவனம் உருவாகவில்லை என்பது இந்த தகவலின் படி நம்மால் புரிந்துகொள்ள முடியும். 

பில்கேட்ஸை விட அதிக திறமையும் சாமர்த்தியமும் உள்ள பலரும் இன்று பணக்காரர்களாகாமல் இருக்க அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை அல்லது அதிர்ஷ்டம் இல்லை என்பதேக் காரணம்.

ஆனால் பில்கேட்ஸுடன் படித்த மற்ற 298 பேரிலிருந்தும் மாறுபட்டு கம்பியூட்டரை ஆழ்ந்து கற்றார் பில்கேட்ஸ். இந்த தன்மை நம் அனைவரிடமும் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

Bill Gates

பில்கேட்ஸுக்கு கம்பியூட்டர் போல நம் வாழ்க்கையில் இருக்கும் எதைக் கொண்டு நாம் பணம் சம்பாதிக்கப் போகிறோம்? நம் அருகில் இருக்கும் கம்பியூட்டரை கவனிக்கிறோமா? பணம் சம்பாதிக்கும் வழிகளைப் பார்கிறோமா?

ஒரு மில்லியனர் ஆக வேண்டும் என நினைத்தால் நீங்கள் அதற்காக தயாராக இருக்க வேண்டும்.  எப்படித் தயார் படுத்திக்கொள்வது? 7 வழிகளை பார்க்கலாம்.

சீக்கிரமாக முதலீடு செய்யுங்கள்

முதலீடு செய்வது விதையை மண்ணுக்குள் புதைப்பதைப் போல எளிதான காரியமில்லை. அதற்காக அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல அனுபவம் தான் நல்ல முதலீடுகளை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்லும். 

எவ்வளவு சீக்கிரமாக முதலீடு செய்கிறோமோ அவ்வளவு சீக்கிரமாக நாம் அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியும். எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்கிறோமோ அவ்வளவு அதிக லாபத்தை பெற முடியும். 

5 ஆண்டு தாமதித்து பெரிய முதலீடு செய்வதை விட இன்றே சிறிய முதலீடுகளில் கவனம் செலுத்துவது நல்லது தானே. இன்றே கற்றுக்கொண்டு இன்றே முதலீடு செய்வது நல்லது!

பொருளாதார இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள்

நீங்கள் ஏன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். உங்களுடையத் தேவையைப் பொறுத்து உங்களது இலக்கை நிர்ணயிங்கள். இலக்கு தான் நீங்கள் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க உதவும்.

வருமானத்தை பெருக்க வேண்டும்

உங்கள் வருமானம் போதுமானதாக இல்லை என்றால் உங்கள் பணியிடத்தில் அதிக சம்பளம் பெரும் வழிகளைத் தேடுங்கள். இரண்டாவது வருவாய் மூலத்தை உருவாக்குங்கள். சொந்த நிறுவனத்தை உருவாக்குங்கள். வருமானம் பெற பல வழிகள் இருக்கின்றன.

செலவுகளை முறைப்படுத்துங்கள்

அதிகம் சம்பாதியுங்கள்; குறைவாக செலவு செய்யுங்கள் - மகிழ்ச்சியாகவும் கவலைகளின்றியும் இருக்க இது ஒரு எளிமையான வழி! நீங்கள் பணக்காரராகவும் இதுதான் வழி. இந்த வாழ்க்கை முறையில் நீங்கள் சேமிக்கவும் சேமித்த பணத்தை முதலீடு செய்யவும் முடியும்.

பொறுமையும் விடாமுயற்சியும்

பனை மரங்கள் வளர்ந்து பலன் தருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். பணமும் அப்படித்தான். நாம் உடனடியான பலன்களை எதிர்பார்க்கும் போது பல தவறுகளை செய்கிறோம். 

நல்ல பலனைப் பெற பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். நம் முதலீடுகள் தோல்வியடைந்தால் நாம் பின்வாங்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் நமக்கு உடனடியாக தெரிவது முழுமையான பலன் அல்ல. 

கடினமாக உழையுங்கள். உங்கள் இலக்கில் கவனமாக இருங்கள்!

கடனை ஏற்காதீர்கள்

கடன் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக இருக்கும். கடனை திருப்பி செலுத்துவது குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தால் பணக்காரராக முடியாது.

நேர்மறையாகவும் நம்பிக்கையாகவும் இருங்கள்

நீங்கள் உங்களது இலக்கை அடைய நேர்மறையாக இருக்க வேண்டியது அவசியம். நேர்மறையான நடத்தை உங்களது இலக்கை அடைய உதவும். நேர்மறையாக இருக்க எப்போதும் உங்கள் மீது முழுமையான நம்பிக்கை வையுங்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?