Elon Musk - Parag Twitter
பிசினஸ்

எலான் மஸ்க் : "ட்விட்டரின் எதிர்காலம் என்னவென்று தெரியவில்லை" - CEO பராக்

NewsSense Editorial Team

உலகின் நம்பர் 1 பணக்காரர் மற்றும் டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் ட்விட்டரை விலை கொடுத்த வாங்குவதற்கு வகுத்த திட்டத்தை, ட்விட்டர் இயக்குநர் குழு ஏற்றுக் கொண்டனர். கூடிய விரைவில் எலான் மஸ்க் ட்விட்டரின் உரிமையாளர் ஆகப் போகிறார்.

இந்த செய்திக்கு இணையத்தில் ஆதரவாகவும், எதிராகவும் வாத பிரதிவாதங்கள் நடந்து வருகின்றன. மறுபக்கம் ட்விட்டர் ஊழியர்கள் அந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி பராக் அகர்வாலிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

நேற்று (25 ஏப்ரல், திங்கட்கிழமை) நடைபெற்ற ட்விட்டர் நிறுவன ஊழியர்கள் அடங்கிய ஒரு கூட்டத்தில் பேசிய பராக் அகர்வால் "எலான் மஸ்க் பொறுப்பேற்ற பின் ட்விட்டரின் எதிர்காலம் என்னவென்று தெரியவில்லை" எனப் பேசியுள்ளார்.

அக்கூட்டத்தில், ட்விட்டர் நிறுவனத்தில் லே ஆஃப் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா?, ட்விட்டர் இயக்குநர் குழு எடுத்த இந்த முடிவுக்குப் பின்னிருக்கும் அடிப்படை லாஜிக் என்ன? எலான் மஸ்க் ட்விட்டரில் என்ன செய்யவிருக்கிறார் என பல கேள்விகளை எழுப்பினர். பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்காமல் தவிர்த்தார் பராக். சில கேள்விகளுக்கு இதை எலான் மஸ்கிடம் தான் கேட்க வேண்டும் என்று தவிர்த்தார் அல்லது திசை திருப்பினார் எனலாம்.

கருத்துச் சுதந்திரத்தை ஆழமாக நம்பக் கூடியவன் நான் என எலான் மஸ்க் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது.

எலான் மஸ்க் பொறுப்பேற்ற பின், ட்விட்டர் தளத்திலிருந்து நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், மீண்டும் ட்விட்டர் தளத்தில் அனுமதிக்கப்படுவாரா என்றும் ஊழியர்கள் பராக் அகர்வாலிடம் கேள்வி எழுப்பினர்.

"எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கும் திட்டம் நிறைவடைந்த பின், இத்தளம் எந்த திசையை நோக்கிச் செல்லும் என்பது நமக்குத் தெரியாது" எனப் பதிலளித்தார் பராக். "எலான் மஸ்கோடு சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைக்கும் போது, இந்த கேள்வியைக் கேட்டுத் தெளிவு பெற வேண்டும் என்று நான் நம்புகிறேன்" என்றும் கூறினார்.

அதே போல தற்போதைக்கு ட்விட்டரில் லே ஆஃப் திட்டங்கள் இல்லை என்று கூறி ஊழியர்களைக் கொஞ்சம் ஆறுதல் படுத்தியுள்ளார் பராக்.

ட்விட்டர் மற்றும் எலான் மஸ்க் இருதரப்பும் ஒன்றாக அமர்ந்து சமாதானமாகப் பேசிக் கொண்டிருக்கும் செய்தியைக் கேட்டு, அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் ட்விட்டரின் பங்கு விலை 51.70 அமெரிக்க டாலரில் நேற்றைக்கான வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

இன்று வர்த்தகம் தொடங்கினால் ட்விட்டரின் பங்கு விலை சிறப்பாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகப் பங்குச் சந்தை நிபுணர்கள் ஆரூடம் கூறுகின்றனர். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனப் பங்குகளுக்கு தலா 54.20 டாலர் மட்டுமே விலை கொடுக்க உள்ளார் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?