தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரின் தந்தை சுப்ரமணியம் இன்று காலை 3 மணி அளவில் காலமானார்.
சுப்ரமணியம் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் சென்னையில் உள்ள வீட்டில் இன்று காலமானார்.
அஜித்குமாரின் தந்தை பி. சுப்ரமணியம் இறந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அஜித் எப்போதும் தம் தனிப்பட்ட, குடும்ப விவகாரங்களை எங்கும் பெரிதாக பகிர்ந்தது இல்லை.
இப்போதும் கூட அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகளை ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம்.
எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.” எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சரி பி.எஸ். மணி என்று அழைக்கப்பட்ட அஜித்தின் தந்தை சுப்பிரமணின் குறித்தும் அஜித் குடும்பம் குறித்தும் இங்கே தெரிந்து கொள்வோம்.
அஜித் குமாரின் தந்தை பி. சுப்ரமணியம் கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர். இவர் மலையாளி என்று பரவலாக கருதபட்டாலும் இவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்தான். அவரது தாயார் மோகினி மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். தாயார் மோகினி குடும்பம் பாகிஸ்தான் கராச்சியில் இருந்து பிரிவினையின் போது இந்தியாவிற்கு வந்துள்ளது.
சுப்ரமணியம்- மோகினி தம்பதிக்கு அனுப் குமார், அஜித் குமார், அனில் குமார் என 3 மகன்கள் உள்ளனர். அதில் இரண்டாவது மகன் தான் அஜித் குமார்.
அனுப் குமார் மற்றும் அனில் குமார் இருவரும் நன்கு படித்து நல்ல வேலையில் சேர்ந்துள்ளனர்.
அஜித் பத்தாம் வகுப்பு படித்து முடித்து விட்டு பள்ளியிலிருந்து வெளியேறினார். இதனால் அஜித்தின் எதிர்காலத்தை எண்ணி அவரின் தந்தை சுப்ரமணியம் ஆரம்பத்தில் மிகவும் பயந்துள்ளார்.
அதன் பின்னர் என்ஃபீல்டு நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு குடும்ப நண்பர் மூலம், அஜித் ஒரு மெக்கானிக்காக ஆறு மாதங்கள் பயிற்சி பெற்றார்.
பின்னர் அஜித் ஒயிட் காலர் வேலையில் இருக்க வேண்டும் என்று தனது தந்தையின் வற்புறுத்தலின் பேரில் அதனை விட்டுவிட்டு ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பயிற்சியாளராக சேர்ந்தார்.
அதற்கு பின்னர் மேனேஜராக உயர்ந்தார், தனது தொழிலுக்காக நாடு முழுவதும் தொடர்ந்து பயணம் செய்தார், அவரது ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்தினார். இதனையெல்லாம் பார்த்த அஜித்தின் தந்தை பெருமிதம் கொண்டார், மகன் ஏதோ செய்து வாழ்க்கையில் முன்னேறி வருகிறான் என்று.
அதன் பின்னர் அஜித் விநியோகம் செய்யும் ஜவுளி வியாபாரத்தை தொடங்கினார். அதனுடன் சேர்த்து, அஜித் மாடலிங் பணிகளிலும் ஈடுபட தொடங்கினார்.
மோட்டார் சைக்கிள் நிறுவனத்திற்கான ஒரு விளம்பரத்தில் அஜித் நடித்தபோது பி.சி.ஸ்ரீராமால் அவர் கவனிக்கப்பட்டார்.
அவர் ஒரு நடிகராகும் தோற்றத்தைக் கொண்டிருப்பதாக உணர்ந்தார். அதன் பின்னர் திரையிலகிற்குள் நுழைந்துள்ளார் அஜித்.
"எங்க அப்பா ரொம்ப புத்திசாலி. அவரு பெருசா படிச்சது இல்ல, டிகிரி இல்ல, ஆனா very smart" என நேர்காணல் ஒன்றில் அஜித்தின் சகோதரர் கூறியிருந்தார்
சமீபத்தில் கூட வலிமை படத்தை எடுத்த பிறகு நான் ஒரு பெருமைமிக்க மகன் போல் உணர்கிறேன் என்பதால், இந்த படத்தை என் அம்மா மற்றும் அப்பா மற்றும் என் குடும்பத்தினருக்கு திரையிடப் போகிறேன் என அஜித் வலிமைப்பட இயக்குநர் ஹெச்.வினோத்திடம் கூறியுள்ளார்.
சிறு வயதில் படிப்பில் நாட்டம் இல்லாமல் நடிப்பு, பைக் என அஜித் சென்றாலும் அதற்கும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அஜித்தின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவரை வழிநடத்தினார் அஜித்தின் தந்தை சுப்ரமணியம்.
இவ்வாறு அஜித்திற்கு தந்தையாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த நண்பராகவும் இருந்து அவரை வழிநடத்திய தந்தையின் பிரிவை அஜித் எவ்வாறு ஏற்றுக்கொள்வார் என ரசிகர்கள் வருந்தி வருகின்றனர்.
அஜித் தன் குடும்பத்தை பற்றி அவ்வளவாக பேசியதில்லை என்றாலும், அவரின் தந்தை தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் என்றும், நானும் ஒரு தமிழன் தான் என்றும் அஜித் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust