ஆயுஷ்மான் குரானா NewsSense
சினிமா

ஆயுஷ்மான் குரானா அருந்தும் தாய்ப்பால் Milk Shake - Celebrities அட்டகாசங்கள்!

சாதாரண மக்களுடன் ஒப்பிடுகையில் பிரபலங்கள் தங்களைப் பிரபலமாக்குவதில் சற்று வித்தியாசமானவர்கள்தான். அவர்கள் என்னதான் நம்மைப் போலச் சாதாரண மனிதர்கள் என்று அவர்கள் வெறும் வார்த்தைகளால் கூறி கொண்டாலும், உண்மையில் அவர்கள் சாதாரணமானவர்களாக இல்லை. சற்று விசித்திரமானவர்கள் தான்.

NewsSense Editorial Team

சாதாரண மக்களுடன் ஒப்பிடுகையில் பிரபலங்கள் தங்களைப் பிரபலமாக்குவதில் சற்று வித்தியாசமானவர்கள்தான். அவர்கள் என்னதான் நம்மைப் போலச் சாதாரண மனிதர்கள் என்று அவர்கள் வெறும் வார்த்தைகளால் கூறி கொண்டாலும், உண்மையில் அவர்கள் சாதாரணமானவர்களாக இல்லை. சற்று விசித்திரமானவர்கள் தான்.

நஞ்சுக்கொடி நெக்லஸ்

இசைக்கலைஞர் கேஷா, நஞ்சுக்கொடியால் செய்யப்பட்ட நெக்லஸை அணிந்துள்ளார். ஏனெனில், அது அவரது மனநலத் திறன்களுக்கு உதவுவதாக வெளிப்படையாகக் கூறுகிறார். “இது என் நஞ்சுக்கொடி. என் அம்மா இதை பேஸ்மென்டில் கண்டுபிடித்துக் கொடுத்தார். நசுக்கப்பட்டு இருந்தது. அதை நான் நெக்லெஸாக அணிந்து கொண்டிருக்கிறேன். இதனால் தினமும் என்னுடைய மனநல திறன்கள் மேம்படுவதாகக் கருதுகிறேன்” என்கிறார்.

டயாப்பர் வாசம்

செக்ஸ் அண்ட் தி சிட்டி புகழ் சாரா ஜெசிகா பார்க்கருக்கு டயாப்பர்களின் வாசனை பிடிக்குமாம். அதிலும், ஈரமான டயாப்பர்களும் பிடிக்கும் என்கிறார். “நான் டயப்பர்களின் வாசனையை விரும்புகிறேன். அவை ஈரமாக இருக்கும்போது கூட எனக்குப் பிடிக்கும். நீங்கள் அதை முகர்ந்து பார்த்தால் ஏதோ மிதமான சூட்டில் பேக் செய்தவை போல இருக்கும். குழந்தை என்ன சாப்பிட்டு இருக்கும் என்பது பற்றித் தெரியவில்லை. ஆனால், டயப்பர்கள் குக்கீஸ்களைப் போல வாசனை இல்லை. எனினும் எனக்கும் மிகவும் பிடிக்கும்” என்கிறார்.

பெண்ணை ஸ்டாக் செய்தல்

ஜேமி டோர்னன் ஒரு படத்திற்குத் தயாராவதற்காகச் சுரங்கப்பாதையில் பெண்களைப் பின்தொடர்ந்தார். நிச்சயமாக, அது ஒரு குற்றம்தான்… “முதல் தொடரில், மனதில் உள்வாங்கிகொள்ள நான் இரண்டு விஷயங்களைச் செய்தேன். எங்கள் இடத்தில் உள்ள சுரங்கபாதை அமைப்பில், ரயிலில் இருந்து இறங்கிய பெண்ணை நான் பின் தொடர்ந்தேன். இது ஒரு விதத்தில் உற்சாகமாக இருந்தாலும், உண்மையில் நான் செய்யும் இந்த வேலை அசிங்கமான ஒன்று என்றும் உணர்ந்தேன்.” இதைப்பார்த்து நீங்களும் எந்தவித முயற்சிகளும் செய்யாதீர்கள். இந்த முறையெல்லாம் உங்களது நான்கு சுவற்றுக்குள்ளே வைத்துக்கொள்ளுங்கள். வெளியில் யாரையும் இதுபோலப் பயமுறுத்த நினைக்காதீர்கள் என்று சொல்கிறார்.

ஏஞ்சலினா ஜோலி

ரத்த காட்டேரிகளின் லாக்கெட்ஸ்

ஏஞ்சலினா ஜோலியும் அவரது முன்னாள் கணவர் பில்லி பாப் தோர்ன்டனும் இருவரது ரத்தத்தையும் ஒவ்வொரு குப்பிகளை (லாக்கெட்) அடைத்து அதை மாற்றி அணிந்துகொள்வார்கள். இது ஒரு ரொமாண்டிக்கான விஷயம் என அவர்கள் நினைத்தார்கள். ரத்த காட்டேரிகள் போல… ரேஸர் பிளேடை எடுத்து விரல்களை வெட்டி, கொஞ்சம் ரத்தத்தை எடுத்து லாக்கெட்டுகளில் தடவி நிரப்பி அதை அணிந்துகொண்டார்கள். இருவரும் அவர்களது கழுத்தில் ரத்தத்தால் நிரப்பப்பட்ட லாக்கெட்டுகளை அணிந்து இருக்கிறார்கள். மேலும் நாங்கள் ரத்த காட்டேரிகள் எனவும் நாங்கள் ஒரு நிலவறையில் வாழ்கிறோம் என நகைச்சுவையாக கிண்டல் செய்துகொள்கிறார்கள். ஏஞ்சலினா ஜோலியைப் பார்த்த இந்தத் தலைமுறையினருக்கு, ஏஞ்சலினா ஜோலி அந்தக் கால தெய்வம் என்று இத்தலைமுறையினருக்குத் தெரியாது.

பறவை போல மாறும் தாய்

க்ளூலெஸ் ஸ்டார் அலிசியா சில்வர்ஸ்டோன் ஒருமுறை தனது மகன் பியருக்கு எப்படி உணவளிக்கிறார் என்ற வீடியோவை வெளியிட்டார். இது நீங்கள் நினைப்பது போல ஒன்றும் கிடையாது. ஒரு பறவை தனது குஞ்சுக்கு எப்படி உணவு அளிக்குமோ அதுபோல, தன் மகனுக்குத் தன் வாயால் உணவை ஊட்டிவிட்டார். “ நான் என் மகனுக்கு சூப்பில் இருந்த காய்கறிகளை வாயால் ஊட்டிவிட்டேன். என் வாயில் இருந்து அவன் வாயுக்கு… இது எங்கள் இருவருக்குமே பிடித்தமான ஒரு விஷயம்” என்கிறார். அதிர்ஷ்டவசமாக அலிசியா ஒரு கோடீஸ்வரர், அதனால் குழந்தை வளரும்போது அவனுக்குத் தேவையான எல்லா உதவியும் கிடைக்கும்.

விசித்திரமான செல்லபிராணிகள்

புகழ்பெற்ற நிக்கோலஸ் கேஜ், தனது செல்ல பிராணிகளாக ஆக்டோபஸ்ஸையும் ஆல்பினோ கிங் கோப்ரா பாம்பையும் வைத்து வளர்த்து வந்தார். நிக்கோலஸ் எங்கே தனது செல்ல பிராணியான அவரது பாம்பு தன்னைக் கடித்துவிடுமோ என்றும் அதனால் அவர் இறக்க நேரிடுமோ என்று அவர் ஆன்டிடோட் மருந்தை ஏற்கெனவே தனக்குள்ளே செலுத்தி இருந்தார். “ஏய், நான் எந்தக் குறையும் சொல்ல மாட்டேன். கோஸ்ட் ரைடர் பணம் எல்லாம் என்னிடம் இருந்தால், நான் கரடிகளுடன் பழகுவேன்” என்கிறார் அவர். வித்தியாசமானவர்தான் இவர்.

செயலிலே பைத்தியக்காரத்தனம்

டூ அண்ட் ஏ ஹாஃப் மென்னின் நாயகன் சார்லி ஷீன், லோச் நெஸ் மான்ஸ்டரை நம்புவது மட்டுமின்றி, ஒருமுறை அதைப் பிடிக்கவும் முயன்றார். தண்ணீரின் மேல் ஒரு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் அவர் பைத்தியம் போல நடந்துகொண்டார். “ஏன் அப்படிச் செய்யக் கூடாது? 200 ஆண்டுகளாக மக்கள் எதையாவது பேச வேண்டுமென்றால், ஏன் அதை நான் செய்ததாக இருக்க வேண்டும், இல்லையா?” என்று அவர் சொல்கிறார். நியாயமாகச் சொல்லப்போனால், அவர் செய்தவை பைத்தியக்காரத்தனமான காரியம் அல்ல. உண்மையில், இது ஷீனின் குணம் அப்படி.

உடலுறவால் கிரியேட்டிவிட்டி நீங்கிவிடும் நம்பிக்கை

லேடி காகா சிறிது காலம் உடலுறவில் ஈடுபடவில்லை. காரணம் என்னவென்றால், உடலுறவின் மூலம் யாரோ ஒருவர் தனது திறமையைத் திருட முடியும் என்று அவர் நம்பியிருக்கிறார். “ நான் இப்போது பிரம்மச்சாரி. நான் யாருடானாவது உடலுறவு வைத்துக்கொண்டால், அவர்கள் என்னிடமிருந்து என் படைப்பாற்றல் திறனை எடுத்துவிடுவார்கள் என்ற விசித்திரமான ஒரு விஷயம் எனக்குள் தோன்றுவதால் நான் உடலுறவில் ஈடுபடவில்லை என்கிறார் லேடி காகா. இது அவரது தனிப்பட்ட விருப்பமே தவிர இதில் உண்மை இல்லை மக்களே…

மனைவியின் தாய்பாலில் புரோட்டீன் ஷேக்

ஆயுஷ்மான் குரானா தனது மனைவி தாஹிரா காஷ்யப்பின் தாய்ப்பாலை தனது புரோட்டீன் ஷேக்கில் கலந்து குடித்து வந்தார். “என் மகன் (ஆயுஷ்மான்) படுக்கையறையில் புரோட்டீன் ஷேக்கை எடுத்துக்கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். நான் அவரிடம் தாய்ப்பாலைக் காணவில்லை என்று கேட்டேன். அதற்கு வினோதமான அவர் தனது புரோட்டீன் ஷேக்கை குலுக்கியபடி தாய்ப்பால் ஒட்டியிருக்கும் மீசையைத் துடைத்துக்கொண்டே சிரித்தார்.” என்று அவரது மனைவி தாஹிரா கூறுகிறார்.

பல மணி நேரம் உற்றுப் பார்ப்பது

தீபிகா படுகோன் விமான நிலையத்தில் காத்திருக்கும் போது மக்களை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இது வித்தியாசமான ஒரு செயல் என அவருக்குத் தெரிந்து இருக்கிறது. எனினும், இதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். இப்போ நினைத்துப் பார்த்தாலும் அது எனக்குப் பயங்கரமானதாகவே தோன்றுகிறது. என்னுள் பல உணர்வுகள் வந்து போகின்றன என்கிறார் தீபிகா.

சுஷ்மிதா சென்

ஓபன் பாத்ரூம் விருப்பம்

சுஷ்மிதா சென்னிடம் பாம்பு இருப்பது மட்டுமின்றி, திறந்த வெளியில் அவர் குளிப்பதையும் மிகவும் விரும்புவதாகத் தெரிகிறது. சுஷ்மிதா சென் பாம்புகளை விரும்புகிறார். “ஏனெனில் பாம்புகள் மிகவும் அழகான உயிரினங்கள் குறிப்பாக அவை உங்கள் வீட்டிற்குள் இல்லை; வெளி இடங்களில் வாழ்கின்றன” என்கிறார். மேலும், சுஷ்மிதா சென்னுக்கு திறந்தவெளியில் குளிப்பதே விருப்பமான ஒன்றாக இருக்கிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?