நயன்தாரா முதல் தீபிகா வரை - புடவைக் கட்டிவிட ரூ.2 லட்சம் வாங்கும் Dolly Jain - யார் இவர்? இன்ஸ்டாகிராம்
சினிமா

நயன்தாரா முதல் தீபிகா வரை - புடவைக் கட்டிவிட ரூ.2 லட்சம் வாங்கும் Dolly Jain - யார் இவர்?

டாலி ஜெயின் ஒரு முறை புடவைக் கட்டிவிட ரூ.35,000 முதல் 2 லட்சம் வரை பெறுகிறார். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் திருமணத்திற்கு புடவை அணிவித்துவிட்டது இந்த டாலி ஜெயின் தான்!

Keerthanaa R

இந்தியாவின் பாரம்பரிய ஆடைகளில் ஒன்று புடவை. அதனை இந்தியா முழுவதிலும் உள்ள வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விதமாக, அவர்களின் கலாச்சாரத்திற்கு ஏற்றார்போல் அணிந்து பார்த்திருக்கிறோம்.

மேற்கத்திய கலாச்சாரங்கள் ஊடுருவ தொடங்கிய பின்னர், உடைகள் மீதான பார்வை நமக்கு மாறியது. காலநிலை, நாம் செல்லும் இடம் என ஒவ்வொன்றிற்கும் ஒரு ஒரு உடை அணியத் தொடங்கினோம்.

ஆனால், புடவை மீதான காதலோ, தேவையோ, மவுசோ குறையவில்லை. பாரம்பரிய முறைப்படி கட்டிக்கொள்ளும் புடவைகளிலிருந்து, ரெடி மேட் சாரி வரை தற்போது டிசைன்கள் வந்துவிட்டன.

புடவைக் கட்ட தெரியாதவர்களுக்கு யூடியூபில் டுட்டோரியல்கள், அல்லது நேரில் சென்று கற்றுக்கொள்ள பிரைடல் கிளாஸ்கள் வந்துவிட்டன. பிறருக்கு புடவை கட்டிவிடுவது ஒரு தொழிலாகவே மாறிவிட்டது.

தற்போது திருமணங்களில் மேக் அப் ஆர்டிஸ்ட்களுடன் புடவை கட்டிவிடும் எக்ஸ்பர்ட்களும் வந்துவிட்டனர். இவர்கள் புடவைக் கட்டிவிட சார்ஜும் செய்கின்றனர். அந்த வகையில், டாலி ஜெயின் என்ற பெண், ஒரு முறை புடவைக் கட்டிவிட 2 லட்சம் ரூபாய் வரை வாங்குகிறார்.

டாலி ஜெயின் ஒரு சாரி டிரேபிங் ஆர்டிஸ்ட். அதாவது புடவைக் கட்டிவிடும் கலைஞர். ஒரு முறை புடவைக் கட்டிவிட ரூ.35,000 முதல் 2 லட்சம் வரை பெறுகிறார். இவர் ஒரு செலிபிரிட்டி டிரேபிங் ஆர்டிஸ்ட். நடிகைகள் ஆலியா பட்டின் வெட்டிங் லுக், கத்ரீனா கைஃபின் லெஹங்கா இவர் அணிவித்தது தான்.

ஏன் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் திருமணத்திற்கு புடவை அணிவித்துவிட்டது இந்த டாலி ஜெயின் தான்

நியூயார்க்கின் பிரபல நிதி திரட்டும் நிகழ்வான மெட் காலாவுக்கு சென்றிருந்த நடாஷா பூனாவாலாவின் புடவை லுக்கையும் இவர் தான் வடிவமைத்தார்.

இன்று இரண்டு லட்சம் வரை புடவை அணிவித்துவிட சார்ஜ் செய்யும் டாலிக்கு ஒரு காலத்தில் புடவை என்றால் அரவே ஆகாது என்று சொன்னால் நம்பமுடிகிறதா?

புடவை என்றாலே கொஞ்சம் கூட பிடிக்காத டாலி, திருமணம் செய்துகொண்ட வீட்டில் புடவை அணிவது கட்டாயமான ஒன்றாக இருந்தது. தினமும் புடவைக் கட்டிக்கொள்ள குறைந்தது 45 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரமானது டாலிக்கு.

தன் மாமியாரை சுடிதார் அணியும் படி கேட்டுக்கொண்டார். ஆனால், காலப்போக்கில் டாலிக்கு புடவைகள் பிடிக்க தொடங்கின, புடவையே தினமும் அணிய ஆரம்பித்தார்.

எனினும், அவர் மாறிவிட்டிருந்த தருணத்தில், எல்லா வயதையொத்த பெண்களும் மாடர்ன் உடைகளுக்கு மாறத் தொடங்கியிருந்தனர்.

புடவை அணியும் வழக்கத்தை கைவிட்டுவிடக் கூடாது என்றெண்ணிய டாலி, அதனை ஒரு தொழிலாக மாற்ற நினைத்தார். மற்றவர்களுக்கு புடவை கட்டிவிடத் தொடங்கினார்.

அதில் ஏதாவது புதியதாக செய்யவேண்டும் என நினைத்தவர், வெவ்வேறு விதமாக எப்படி புடவைக் கட்டிக்கொள்ளலாம் எனத் தெரிந்துகொண்டார். மொத்தம் 325 டைப்களில் புடவைக் கட்டிவிடுகிறார் டாலி.

பெண்கள் மட்டுமல்லாது, சில ஆண்களுக்கும் புடவைக் கட்டிவிட்டிருக்கிறார் டாலி. அது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?