Netflix

 

Twitter

சினிமா

Netflix : எல்லாம் தோல்வி, Amazon, Hotstar -உடன் மோத முடியாமல் திணறல் - என்ன காரணம்?

Antony Ajay R

இந்தியாவில் நாம் வெற்றிபெறவில்லை

உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் நிருவனமான நெட்ஃபிளிக்ஸ் சமீபத்தில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் இந்தியாவில் அவர்களால் வெற்றிபெற முடியாதது குறித்து பேசியிருக்கிறது.

படங்கள், சீரிஸ்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் மற்றும் தயாரிக்கும் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

நெட்ஃப்ளிக்ஸின் இணை நிறுவனரான ரீட் ஹேஸ்டிங்ஸ், “"நாம் முக்கிய சந்தைகள் அனைத்திலும் வெற்றிப்பெற்றோம் என்பது நல்ல செய்தி. இந்தியாவில் நாம் ஏன் வெற்றிபெறவில்லை என்பதுதான் நம்மை விரக்தியடைய வைக்கும் விஷயம். ஆனால், நாம் நிச்சயமாக இங்கு நிலைத்திருப்போம்," என்று அந்த கூட்டத்தில் பேசினார். மேலும் இந்தியாவில் நாம் வெற்றியடையவில்லை என வருத்தத்துடன் பேசினார்.

ரீட் ஹேஸ்டிங்ஸ்

நெட்ஃபிளிக்ஸ் 2016-ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக இந்தியாவில் சேவைகளை வழங்கிவருகிறது. 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம், டெல்லியில் நடந்த உலகளாவிய வணிக உச்சிமாநாட்டில் ஸ்ட்ரீமிங் நிறுவனத்தின் அடுத்த 100 மில்லியன் சந்தாதாரர்கள் "இந்தியாவிலிருந்து வருவார்கள்" என்று ரீட் ஹேஸ்டிங்ஸ் பேசியது குறிப்பிடத்தக்கது. அவரது மனக்கணக்கு தவறியதை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

லீடிங்கில் அமேசான், டிஸ்னி + ஹாட்ஸ்டார்

இந்திய ஸ்ட்ரீமிங் சந்தையின் மதிப்பு 1500கோடி ஆகும். இதில் 10 கோடி சந்தாக்கள் இருக்கின்றன.

நெட்ஃபிளிக்ஸ் சேவையை இந்தியா முழுவதும் 55 லட்சம் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி உபயோகிக்கின்றனர். ஆனால் இது அதன் போட்டியாளர்களை ஒப்பிடும் போது மிகக்குறைவே.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் 4.6கோடி வாடிக்கையாளர்களையும், அமேசான் நிறுவனம் 1.9 கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது.

Money Heist

சூரரைப் போற்று, கர்ணன் போன்ற படங்கள் அமேசான் பிரைமில் ஹிட்டாகின. இந்திய அளவில் ஃபேமிலி மேன், மிர்சாபூர் போன்ற சீரிஸ்களும் ரசிகர்களைக் கவர்ந்ததால் “பிரைம் திரைப்படம் விரும்பும் பார்வையாளர்களுக்கும் சரியான சேவையை வழங்குகிறது: இந்திய மொழிகளில் பெரும் வெற்றிபெற்ற படங்களில் சுமார் 40% இந்த சேவைக்குச் சொந்தமானது” என்கிறார் ஆர்மேக்ஸ் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஷைலேஷ் கபூர்.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளில் பெருமளவு வாடிக்கையாளர்களைச் சம்பாதித்துக்கொண்டது.

ஆனால் நெட்ஃபிளிக்ஸ் இன்றளவும் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்திய இணையத் தொடர்களான, ஸ்க்விட் கேம், மணி ஹீஸ்ட் மற்றும் நர்கோஸ், போன்றவற்றைக் கொண்டே அறியப்படுகிறது.

நெட்ஃபிளிக்ஸ் இந்தியர்களுடன் பிணைப்பை ஏற்படுத்தத் தவறிவிட்டது. இன்று அதனை விலையுயர்ந்த அந்நிய சேவையாகவே மக்கள் எண்ணுகின்றார்கள்.

நவரசா

தொடர் தோல்வியடைந்த முயற்சிகள்

நெட்ஃபிளிக்ஸின் தோல்விக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. கடந்த 2018ஆம் ஆண்டு, 'சேக்ரட் கேம்ஸ்' எனும் திரில்லர் தொடர் மூலம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றது நெட்ஃபிளிக்ஸ். பாலிவுட்டின் முன்னணி நாயகர்களை கொண்ட அந்த தொடர், இந்தியாவின் சிறந்த இயக்குநர்களாகக் கருதப்படும் அனுராக் காஷ்யப், விக்ரமாதித்ய மோத்வானே, நீரஜ் கெய்வான் ஆகியோரின் இயக்கத்தில் அசத்தியிருந்தது.

விமர்சன ரீதியிலும் சேக்ரட் கேம்ஸ் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவில் கால் தடத்தை பதித்துவிட்டதாக நம்பப்பட்டது.

ஆனால் அப்படி நடக்கவில்லை இந்தியா ஒரு பரந்துபட்ட பொழுதுபோக்கு தளம். இங்கு 20 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொலைகாட்சி வைய்த்துள்ளன. 4 டாலருக்கும் குறைவான மாத சந்தாவில் திரைப்படங்கள், விளையாட்டுகள் மற்றும் செய்திகளை பார்த்து விட முடிகிறது.

ஓடிடி என்றாலே காமமும் இரத்த வாடையும் தூக்கலாக இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை தாண்டி உண்மை நிகழ்வுகள் அடிப்படையிலான படங்கள், தொடர்கள் பார்வையாளர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன. உதாரணமாக “ஸ்கேம் 1992”. இது போன்ற படைப்புகளை உருவாக்க நெட்ஃபிளிக்ஸ் தவறிவிட்டது.

இத்துறை வல்லுநர்கள் கூறுகையில், நெட்ஃபிளிக்ஸ் மில்லியன் கணக்கான டாலர்களைக் குவித்து, அதன் உலகளாவிய வெற்றிக்கு உதவிய "சர்வதேச வியாபார உத்தியை" இந்தியாவில் பயன்படுத்தப் பரிசீலித்து வருகிறது. திரைப்படங்களையும், நிகழ்ச்சிகளையும் உருவாக்க, பாலிவுட்டின் சிறந்த தயாரிப்பு நிறுவனங்களுடனும், தயாரிப்பாளர்களுடனும் இந்த நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது. என்றனர்.

ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இணையத் தொடர்களை உருவாக்கிய அனுபவமில்லாத இந்திய இயக்குநர்கள் சந்தையில் தோல்வியைத் தான் கண்டனர்.

OTT

மீண்டு வர வழி?

2016-ம் ஆண்டு முதல் தாங்கள் தயாரித்த படைப்புகளுக்காகப் பெருமை கொள்வதாக நெட்ஃபிளிக்ஸ் கூறுகிறது.

ஆனால் அது பிராந்திய ரீதியிலான தொடர்களிலும் புதிய உள்ளடக்கங்களை உருவாக்குவதிலும் நெட்ஃபிளிக்ஸ் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள்.

மின்னல் முரளி, ஷ்யாம் சிங்க ராய் போன்ற சிறந்த படங்களை தற்போது வாங்கத் தொடங்கியிருக்கும் நெட்ஃபிளிக்ஸ், "நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பலதரப்பட்ட கதைகளில் முதலீடு செய்து, பல்வேறு மொழிகளைப் பேசும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்ற நோக்கில் நெட்ஃபிளிக்ஸ் செயல்பட்டு வருகிறது" என அதன் செய்தி தொடர்பாளர் கூறுகின்றார்.

இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சந்தை, தொழில்துறை மதிப்பீடுகளின்படி, 2026 ஆம் ஆண்டிற்குள் இருமடங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்கு நெட்ஃபிளிக்ஸ் மிக நுட்பமாகச் செயல்பட்டுப் பரந்த அளவிலான உள்ளடக்கங்களை அளிக்க வேண்டும்.

ஏற்கனவே 75க்கும் மேற்பட்ட ஸ்ட்ரீமிங் சேவைகள் உள்ளன. சில வெற்றி பெற்றன; பல தோல்வி அடைந்தன. கடந்த ஆண்டு ஸ்ட்ரீமிங் சேவைகளில், இந்திய மொழிகளில் தொடங்கப்பட்ட 225 நிகழ்ச்சிகளில் - அவற்றில் 170 இந்தி மொழியில் உள்ளன - 15-20 மட்டுமே வெற்றி பெற்றன என்கிறார் கபூர்.

"ஒவ்வொருவரும் அதன் அளவு அடிப்படையில் தயாரித்து வருகின்றனர்; பல்வேறு வகையில் முயற்சி செய்கின்றனர். ஆனால், நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இந்தியா ஒரு சிக்கலான சந்தையாகும்." என்று முடிக்கிறார் அவர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?