பழைய புகைப்படங்கள் Twitter
சினிமா

கார்த்தி முதல் சியாம் வரை : இணையத்தில் வைரலாகும் பழைய புகைப்படங்கள் - அடடா சீக்ரெட்ஸ்

Antony Ajay R

நாம் திரையில் கொண்டாடும் ஹீரோக்கள் தான் நமக்கு ரோல் மாடல்கள், இன்ஸ்பிரேஷன்கள், காட் ஃபாதர்கள்…. சினிமாவுடன் ஒன்றியது நம் வாழ்க்கை. நமக்கு வாழ்கையை கற்றுக் கொடுத்த நம் சினிமா நாயகர்களின் ஆரம்ப வாழ்க்கையிலிருந்து இதோ சில பைட்கள்


கார்த்தி:

சித்தார்த்தைப் போலவே இயக்குநராவதில் தான் அதிக விருப்பம் கொண்டிருந்தார் கார்த்தி. அதனால் ஆயுத எழுத்து படத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். அப்போது சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் கார்த்தியை நடிக்கச் சொல்லியிருக்கிறார் மணிரத்னம். அப்போது மறுத்தாலும் பின்னாளில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து மணிரத்னம் இயக்கத்திலேயே “காற்று வெளியிடை” படத்தில் நடித்துவிட்டார் கார்த்தி.

கார்த்தி

சித்தார்த் :

கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு சித்தார்த்தை ஜெயேந்திரா என்ற விளம்பப்பட இயக்குநர் முன்னணி திரைப்பட இயக்குநர் மணிரத்னத்திடம் அறிமுகப்படுத்தினார். கன்னத்தில் முத்தமிட்டாள் திரைப்படத்தில் மணிரத்னத்தின் உதவி இயக்குநராக பணியாற்றினார் சிதார்த். அப்போது எழுத்தாளர் சுஜாதா மூலமாக சங்கருக்கு அறிமுகமாகி பாய்ஸ் படத்தில் நடித்தார். பிறகு குருவான மணிரத்னத்தின் ஆயுத எழுத்து படத்தில் நடித்தார். 2017ம் ஆண்டு ஆண்ட்ரியாவுடன் நடித்த அவள் படத்துக்கு மிலிந்த் ராவுடன் இணைந்து கதை எழுதிய சித்தார்த்துக்கு இயக்குநராக வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. மணிரத்னத்தின் உதவி இயக்குநராகக் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடித்த போது திரையில் தோன்றிய தருணம் தான் இந்த புகைப்படம்.

சித்தார்த்

சாய் பல்லவி:

சிறு வயது முதல் நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட சாய் பல்லவி, தீ 5, உங்களில் யார் அடுத்த பிரபு தேவா போன்ற தென்னிந்திய நடன நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார். 2015-ஆம் ஆண்டு வெளியாகி தென்னிந்திய மொழி திரைப்படங்களுள் பெரும் வெற்றி பெற்ற “பிரேமம்” திரைப்படம் மூலம் நிவின் பாலிக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக நம்ம மலர் டீச்சராக அறிமுகமான சாய்பல்லவிக்கு ரசிகர் பட்டாளம் குவிந்தது. இப்போது ஷ்யாம் சிங்கா ராய் வரை தென்னிந்தியாவின் முன்னணி நாயகிகளுள் ஒருவராக இருக்கிறார் சாய் பல்லவி. 14 வயதில் நடனக் கலைஞராகும் கனவோடு இருந்த சாய் பல்லவி 2008-ஆம் ஆண்டு தாம் தூம் திரைப்படத்தில் கங்கனாவின் தோழியாக ஒரு சீனில் தோன்றுவார். அந்த புகைப்படம் தான் இது.

சாய் பல்லவி

சமுத்திரக்கனி:

ஆரம்பக்காலத்தில் சினிமா, சீரியல் என வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் தன்னுடைய பெஸ்டை காண்பித்தவர் சமுத்திரக்கனி. இயக்குநராகும் ஆசை இவருக்கும் இருந்தது. இப்போது எல்லா முன்னணி இயக்குநர்களிடமும் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் விதைப் போட்டது கே.பாலசந்தர். அவரிடம் வேலை செய்யும் போது பார்த்தாலே பரவசம் படத்தில் ஒரே ஒரு சீனில் நடித்திருப்பார் கனி. அந்த படம் தான் இது.

சமுத்திரக்கனி

கௌதம் வாசு தேவ் மேனன்

மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்து முடித்த கையோடு சினிமா ஆசையில் சுற்றத் தொடங்கினார் கௌதம் வாசுதேவ் மேனன். ஆரம்பத்தில் சில விளம்பரப் படங்களை இயக்கிய இவர் ராஜிவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். இயக்குநராகும் இவரது கனவு திசை மாறாமல் வெற்றிகரமான இயக்குநராக வளர்ந்தார். ஆனால் காலம் இப்போது இவரை மீண்டும் திரையில் தோன்ற வைத்திருக்கிறது.

கௌதம் வாசு தேவ் மேனன்

சூரி

சூரிக்கு முதல் படம் வெண்ணிலா கபடிக்குழு என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் முன்னரே 'நினைவிருக்கும் வரை', 'காதல்', 'ஜி', 'வின்னர்' போன்ற படங்களில் தோன்றிய சூரியை யாரும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். ஏன் கவனித்திருக்க கூட மாட்டார்கள். ஆனால் இப்போது சூரி சூப்பர் ஸ்டார் வரை உச்ச நட்சத்திரங்களுடன் நடித்துப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராகத் திகழ்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக கோடம்பாக்கத்துக்குக் குருட்டு நம்பிக்கையுடன் வருபவர்களில் ஒருவராயிருந்தவர், சூரி இருக்குறதால படம் போரடிக்காது எனச் சொல்லும் ரசிகர்களைச் சம்பாதித்து வைத்திருக்கிறார். அதான் பங்கு வளர்ச்சிங்கிறது….!

சூரி

சந்தானம்

லொல்லு சபா சந்தானமே செம ஃபேமஸ். சந்தானத்தை காமடியில் யாராலும் டாமினேட் செய்ய முடியாது என்பது அப்போதே எல்லாருக்கும் தெரிந்தது. ஆனால் சினிமா இதுவரை பல காமடியன்களை டாமினேட் செய்திருக்கிறது. இந்த காட்டாற்றில் எதிர் நீச்சல் போட்டு ஹீரோவாக இன்று எழுந்து நிற்கும் சந்தானம், சன் டீவியில் சூப்பர் டென், வின் டீவியில் வெட்டி மன்றம், ஜெயா டீவியில் பிச்சாதிபதினு டீவியில் கலக்கிய காலத்தில் சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படத்தில் சில நிமிஷம் காட்டிய தலை தான் இந்த புகைப்படம்.

சந்தானம்

ஷாம்

இந்த மே 19 வந்தால் 20 இயர்ஸ் ஆஃப் குஷி என விஜய் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். எஸ்.ஜே சூர்யாவின் ரசிகர்கள் கூட கொண்டாட்டத்துக்கு வீடியோக்கள் எடிட் செய்ய ஆரம்பித்திருப்பார்கள். ஆனால் உங்களுக்குத் தெரியுமா அன்று தான் 20 இயர்ஸ் ஆஃப் ஷாம் என்று? 12பி படத்தில் அறிமுகமாகும் முன்னர் ‘குஷி’ படத்தில் விஜயின் நண்பராக அரும்பு மீசையுடன் துள்ளலாக சில காட்சிகளில் வந்து போவார் ஷாம். அந்த புகைப்படம் தான் இது.

ஷாம்

அதிதி பாலன்

தமிழ் சினிமாவில் முக்கியமான 100 படங்கள் லிஸ்ட் எடுத்தால் அதில் நிச்சயம் இடம் பிடிக்கும் அருவி திரைப்படம். அந்த படத்தின் நாயகி அதிதி ஒரு சென்னை பெண் தான். பெங்களூரில் சட்டம் படித்தார். அருவி பட வாய்ப்பு கிடைப்பதற்கு முன் தியேட்டர் ப்ளேவில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் என்னை அறிந்தால் படத்தில் அதிதி வந்து போகும் காட்சி தான் இது. முதல் படமே அருவி போன்ற வலிமையான கதாபாத்திரத்தில் நடித்துவிட்ட அதிதி இப்போது வரை சிறந்த பாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதிதி பாலன்

அட்டகத்தி தினேஷ்

அட்டகத்தி படத்தில் நாயகனாக அறிமுகமாகும் முன்பு தினேஷ் பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறார் தினேஷ். அட்டகத்தியில் லவ் பாயாக திரிந்ததை விட அதிகம். மிகவும் உற்சாகமான கல்லூரிமாணவனாக அட்டகத்தி, அந்த துள்ளல் குறையாமல் பார்வையற்றவராக குக்கூ, அந்த துள்ளலை அடக்கி ஒடுக்கப்பட்ட விசாரணை கைதியாக விசாரணை எனப் பல படங்களில் கலக்கியிருக்கிறார். அதற்கெல்லாம் முன் டாப்ஸிக்காக தனுஷுடன் போட்டிப் போடும் பையனாக ஆடுகளத்தில் நடித்திருப்பார் தினேஷ்.

அட்டகத்தி தினேஷ்

இந்த படங்கள் எல்லாம் நமக்கு ஒரே ஒரு விஷயத்தைக் கற்றுக்கொடுகின்றன. நாம் மெய் சிலிர்த்து வியந்து பார்க்கும் எந்த மரமும் ஒரே நாளில் வளர்ந்தது அல்ல. சினிமாவோ வேறெந்த துறையோ விதைப் போட்டு தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வளர்க்க காலம் எடுக்கும். இன்றே ஒன்னு செய்யலாம், விதைக்கலாம். விதையுங்கள்… உங்களுக்குள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?