நாட்டு நாட்டு: எப்படி உருவானது இந்த ஆர் ஆர் ஆர் பாடல்? ஒரு சுவாரஸ்ய பின்னணி twitter
சினிமா

நாட்டு நாட்டு: எப்படி உருவானது இந்த ஆர் ஆர் ஆர் பாடல்? ஒரு சுவாரஸ்ய பின்னணி

பாடலின் பெரும் பகுதி இரண்டே நாட்களில் முடிந்துவிட்டாலும் பாடல் முழுமையாக, ஒரு கோர்வையாக அமைய மொத்தம் 19 மாதங்கள் ஆகியுள்ளது.

Keerthanaa R

95வது அகாடமி விருதுகளில் சிறந்த ஒரிஜினல் சாங் என்ற பிரிவில் விருதினை வென்றுள்ளது ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற (நாட்டு நாட்டு) நாட்டு கூத்து பாடல்.

இசையமைப்பாளர் கீரவாணி மேடையிலேயே பாடல் பாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “நான் கார்பெண்டர்ஸ் பாடல்களை கேட்டு வளர்ந்தேன். இன்று எனது கையில் ஆஸ்கர் விருது இருக்கிறது” என்று பெருமிதத்தோடு பேசியிருந்தார்.

தி கார்பெண்டர்ஸ் என்பது ஆங்கில பாப் உலகின் மிக பிரபலமான பாடகர்கள் இணையின் பெயராகும்.

நாட்டு நாட்டு பாடல் வெளியான 24 மணி நேரத்திலேயே தெலுங்கில் 17 மில்லியன் வியூக்களை பெற்றது. இதுவே தெலுங்கில் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாகும். மேலும் திரைப்படம் வெளியான 5 மொழிகளிலும் 35 மில்லியன் பார்வைகளை பெற்றிருந்தது இப்பாடல்.

இப்பாடல் தெலுங்கில் நாட்டு நாட்டு, தமிழில் நாட்டு கூத்து, இந்தியில் நாச்சோ நாச்சோ என வெளியானது.

பாடலின் வரிகள், முக்கியமாக அந்த பாடலின் நடன அமைப்பே அதிக ரசிகர்களை ஈர்க்க காரணமாக அமைந்திருந்தது. ஆங்கிலேயர்களின் நடனங்களை விட எங்கள் நாட்டு நடனம் யாரையும் எழுந்து ஆட வைக்கும் என்கிற பாணியில் தொடங்கும் நாட்டு நாட்டு பாடல்.

மொழி, நாடு, வயது பேதங்களின்றி அனைவரது கவனத்தையும் பெற்று 145 மில்லியனுக்கும் அதிக பார்வைகளை கடந்த நாட்டு நாட்டு பாடல் உருவான கதை உங்களுக்கு தெரியுமா?

நாட்டு நாட்டு பாடல்:

ஆர் ஆர் ஆர் படத்திற்கு பின்னணி இசையமைத்தவர் கீரவாணி. நாட்டு நாட்டு பாடலை தெலுங்கில் எழுதியவர் பாடலாசிரியர் சந்திரபோஸ். இந்த பாடலை பாடியது ராகுல் சிப்லிகுஞ்ச் மற்றும் யாசின் நிஸார்.

மூலப்பாடல் அல்லது ஒரிஜினல் சாங்:

ஒரிஜினல் சாங் அல்லது மூலப்பாடல் என்பது இதுவரை வேறு எங்கும் இடம்பெறாத, எந்த பாடலின், இசையின் சாயல் இல்லாத பாடல். இது ஒரு திரைப்படத்திற்காக பிரத்தியேகமாக புதிதாக உருவாக்கப்படுவதாகும்.

இந்த பிரிவில் தான் நாட்டு கூத்து பாடல் தேர்வு செய்யப்பட்டிருந்தது.

நாட்டு நாட்டு: ஆஸ்கரை தட்டிச் சென்ற ஆர் ஆர் ஆர் பட பாடல்!

”என்ன வேண்டுமானலும் எழுதிக்கொள்”

நாட்டு நாட்டு என்ற தெலுங்கு வார்த்தை நடனம் என்ற சொல்லை குறிப்பதாக இருக்கிறது.

இயக்குநர் ராஜமௌலிக்கு ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரது நடன திறமையும் தெரிந்திருந்தது. இருவரும் ஒரு சேர ஒரு பாடலுக்கு நடனமாடினால் ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கும் என சிந்தித்தாகவும் அதற்கு ஏற்றார்போல ஒரு பாடல் வேண்டும் எனவும் இசையமைப்பாளரிடம் கேட்டிருக்கிறார்

“இரண்டு சிறந்த டான்சர்களும் தங்களது முழு திறனையும் காட்டக்கூடிய பாடலாக இது வேண்டும்” என ராஜமௌலி கேட்டதாக இசையமைப்பாளர் கீரவாணி பிபிசியிடம் தெரிவித்தார்

பாடல் இறுதியான கதை:

இரு முன்னணி நடிகர்களும் தங்களது நடனத்தால் மக்களை பரவசமடைய செய்யவேண்டும், அதனால் என்ன வேண்டுமானலும் எழுதிக்கொள்ளுங்கள் என பாடலாசிரியர் சந்திரபோஸிடம் கூறியுள்ளார் கீரவாணி.

“கதைக்களம் 1920ஐ ஒட்டியிருப்பதால், அந்த காலத்திற்கு ஏற்ற சொல்லாடலாக இருக்கவேண்டும்” என்பது மட்டுமே நிபந்தனையாக இருந்துள்ளது.

கீரவாணிக்கு மிகவும் பிடித்தமான ஃபாஸ்ட் பீட்டின் பாணியில் முதலில் வரிகளை எழுதினார் சந்திரபோஸ். தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் மெட்டில் உருவாக்கப்பட்டது. தெலங்கானாவில் தனக்கு கிடைத்த சிறுவயது அனுபவங்களையும் வரிகளில் இணைத்தார் பாடலாசிரியர்.

வெகுஜன மக்களை கவரும் விதத்தில் நாட்டு நாட்டு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

19 மாதங்கள்:

பாடலின் பெரும்பகுதி இரண்டே நாட்களில் முடிந்துவிட்டாலும் பாடல் முழுமையாக, ஒரு கோர்வையாக அமைய மொத்தம் 19 மாதங்கள் ஆகியுள்ளது.

பாடலின் 95 சதவிகித நடன அசைவுகளை நடன ஆசிரியர் பிரேம் ரக்‌ஷித் புதிதாக அமைத்திருந்தார். “இருவருக்குமே தனித்துவமான நடன பாணி இருப்பதால் இருவருக்கும் ஒத்துப்போகும் வகையில் நடன அசைவுகளை கண்டறியவேண்டி இருந்தது” என்கிறார் நடன ஆசிரியர்

பாடலின் சிக்னேச்சர் ஸ்டெப்பிற்காக மொத்தம் 30 வகையான அசைவுகளை ரக்‌ஷித் முயற்சித்திருக்கிறார். அதன் பிறகு, நடிகர் ராம் சரண் அப்பாடலில் அவர்கள் அணிந்திருக்கும் உடையை பயன்படுத்தி ஏதேனும் செய்ய முடியுமா எனக் கேட்ட பிறகு இந்த ஸ்டெப் இன்னும் மெருகேற்றப்பட்டது

பாடல் தான் படத்தின் மொத்த கதை:

இயக்குநர் ராஜமௌலி, நாட்டு கூத்து பாடலை படத்தின் முக்கிய பாடலாக கருதியிருக்கிறார்.

ஆங்கிலேயர்களின் பார்ட்டியில் கூடியிருப்பவர்களுக்கு மத்தியில் ஒரு நடனப்போட்டியாக உருவாகிறது பாடல். ஒவ்வொருவராக நம் ஹீரோக்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கீழே விழ, கடைசியில் போட்டி ராம் மற்றும் பீம் இருவருக்கிடையில் உருவாகிறது.

நட்பு போட்டி மற்றும் ஒற்றுமையை மையமாக கொண்ட படத்தின் கதைக்களத்தை இந்த ஒரு பாடலில் ராஜமௌலி சொல்ல நினைத்ததாக அவர் பிபிசியிடம் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?