LEO : தளபதி விஜய் கடந்து வந்த 7 முக்கிய சர்ச்சைகள் - விரிவான தகவல்கள்| HBD Vijay Vijay in Varisu
சினிமா

LEO : தளபதி விஜய் கடந்து வந்த 7 முக்கிய சர்ச்சைகள் - விரிவான தகவல்கள்| HBD Vijay

Antony Ajay R

தளபதி விஜய் தமிழ் திரையுலகில் தசாப்த காலத்துக்கும் மேலாக முன்னணி நடிகராக திகழ்கிறார்.

அவரது மேடு பள்ளங்கள் நிறைந்த திரை வாழ்க்கையில் பல விமர்சனங்களைக் கடந்து வந்திருக்கிறார்.

பல முறை அவரைப் பற்றிய கிசுகிசுக்கள் பத்திரிகைகளில் இடம் பெற்றிருக்கின்றன. சில சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.

எனினும் அவரது ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு அளவிட முடியாத ஆதரவை அளித்து வருகின்றனர்.

எனவே சர்ச்சைகளை அமைதியாக கடந்து செல்லும் தன்மைக் கொண்டவராக இருக்கிறார் தளபதி விஜய். அவரது சினிமா வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் வந்த சில சர்ச்சைகளைப் பார்க்கலாம்.

விவாகரத்து வதந்திகள் :

சில நாட்களுக்கும் முன்னர் விஜய்யின் விக்கிபீடியா பக்கங்களில் அவரது மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து பெற்றதாக குறிப்பிடப்பப்பட்டிருந்தது.

இதனால் அவர் விவாகரத்து தொடர்பான வதந்திகள் பரவின.

ஆனால் விஜய்யின் நெருங்கிய வட்டாரங்கள் இந்த வதந்திகள் அர்த்தமற்றவை என மறுத்துள்ளனர்.

போக்குவரத்து விதி மீறல்

சென்னை போக்குவரத்து காவல்துறை கடந்த நவம்பர் மாதம் விஜய்யின் கார் ஜன்னலில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால் 1000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

கார் ஜன்னல்களில் கருப்பு ஸ்டிக்கர் இருக்க கூடாது, வெளிப்படையான கண்ணாடிகளே இருக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பு.

ரோல்ஸ் ராய்ஸ் வழக்கு

நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியபோது சரியாக வரி செலுத்தவில்லை எனக் கூறி 1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதி மன்றம்.

2012ம் ஆண்டு முதல் விஜய்யை வரி வழக்குகள் தொடர்ந்து வருகின்றன.

முழுமையாக தெரிந்துகொள்ள...

வருமான வரி ரெய்டு

விஜய் மாஸ்டர் பட பிடிப்பில் இருக்கும் போது வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டை மேற்கொண்டனர்.

ஏஜிஎஸ் சினிமா மற்றும் திரைப்பட ஃபைனான்சியர் அன்புச் செழியன் மீதான குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த ரெய்டு நடத்தப்பட்டது.

இதற்கு பிறகு நெய்வேலியில் விஜய் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி படு வைரலாக பேசப்பட்டது.

அப்பாவுக்கு எதிராக வழக்கு

விஜய் அரசியலில் ஈடுபட வேண்டும் என அவரது தந்தை எஸ்.ஏ.சி தொடர்ந்து பேசிவருகிறார்.

விஜய்யோ அவ்வப்போது அரசியல் கருத்துகள் பேசுவது மற்றும் மக்கள் இயக்கத்தினரின் அரசியல் நடவடிக்கைகளைப் பாராட்டுவதுடன் சரி.

இதனால் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் உருவானது.

எஸ்.ஏ.சி மனைவியுடன் ஆரம்பித்த கட்சியில் தனது பெயரையும் புகைப்படங்களையும் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் விஜய்

புலி வெளியீடு சர்ச்சை

2015ம் ஆண்டு தளபதி விஜய்க்கு மிகவும் கடினமான காலகட்டம் என்றே கூறலாம். புலி படம் வெளியீட்டுக்கு தயாராக இருந்த போது படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையை மேற்கொண்டனர்.

இதனால் முதல் நாள் காலை காட்சிகள் ரத்தாகின.படம் வெளியாகுமா என்ற பதட்டம் நீடித்தது. மதியம் படம் வெளியாக அனுமதிக்கப்பட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?