Vijay

 

Twitter

சினிமா

தளபதி விஜய் சொந்தக் குரலில் பாடிய 15 சிறந்த பாடல்கள் | Video Playlist

சினிமாவில் நுழைந்தது முதல் இப்போது வரை விஜய் 40 பாடல்கள் வரை பாடியிருக்கிறார். அதில் கிட்டதட்ட எல்லாமே ஹிட் தான்.

Antony Ajay R

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவை ஆட்சி செய்யும் அரசனாகவே வளம் வருகிறார். விஜய்யாக அறிமுகமாகி இளைய தளபதி, தளபதி என மக்கள் மனதில் ஆழமாகவும் பிளெக்ஸ் பேனர்களில் உயரமாகவும் வளர்ந்து ஆலமரமாக நிற்கிறார். மக்களை மகிழ்விப்பதே தன் கடமை எனத் தீர்க்கமாகத் தொடர்ந்து இயங்கி வரும் விஜய், அதற்காக சில நேரங்களில் நடிப்பைத் தவிர வேறு சில அஸ்திரங்களையும் கையில் எடுப்பார். அரசியலைப் பற்றிப் பேசவில்லை, விஜய் பாடிய பாடல்களை எடுத்துக்கூருகிறேன். சினிமாவில் நுழைந்தது முதல் இப்போது வரை அவர் 40 பாடல்கள் வரை பாடியிருக்கிறார். அதில் கிட்டதட்ட எல்லாமே ஹிட் தான். தளபதி விஜய் பாடிய 15 சிறந்த பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

ரசிகன் படத்தில் வரும் பம்பாய் சிட்டி பாட்டில் தான் ஒரு பாடகராக அறிமுகமாகிறார் விஜய். இந்த படத்தில் தான் அவர் முதன் முதலாக "இளைய தளபதி" எனும் அடைமொழியையும் பயன்படுத்தினார்.

விஷ்னு திரைப்படத்தில் விஜய் அவரது அம்மாவுடன் இணைந்து பாடிய தொட்டபெட்ட ரோட்டு மேல பாடல் அப்போது பட்டி தொட்டியெல்லாம் எதிரொலித்தது.

இப்போதும் சில 80'ஸ் கிட்ஸ் ஸ்கூல் ரீயூனியனுக்கு போகும் போது காதலுக்கு மரியாதை படத்தில் வந்த இந்த பாடல் தான் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும். தமிழ் சினிமாவின் ட்ரேட் மார்க் சீனான ஒரே சமயத்தில் இருவரும் கிரீட்டிங் கார்ட் எடுக்கும் சீனில் ஆரம்பிக்கும் இந்த பாடல். இதற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பார்.

S.A.சந்திர சேகர் இயக்கத்தில் சூர்யா, விஜயகாந்த் நடித்த பெரியண்ணா படத்தில் "நான் தம்மடிக்கிற ஸ்டைல பாத்து" பாடலை விஜய் பாடியிருப்பார். இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

இன்றும் கிராமப்புற மினி பஸ்களில் கேட்டப்படும் பாடல் "தங்க நிறத்துக்கு" நெஞ்சிலே படத்தில் விஜய் மற்றும் ஸ்வர்ணலதா இணைந்து பாடிய பாடல்

விஜய் பாடியவற்றில் மிக வித்யாசமான கேலியான பாடல் என்றால் பத்ரி படத்தில் வரும் என்னோட லைலா படல் தான். விஜய்க்கே உரிய குறும்புத்தனம் இந்தப் பாட்டில் இருக்கும். "சிக்னலே கிடைக்கல கிடைக்கல" என்ற வரிகள் அந்த காலத்து ஒருதலைக் காதலர்களின் ஏந்தம் ஆக இருந்தது.

தமிழன் படத்தில் விஜய் மற்றும் பிரியங்கா சோப்ரா நடனத்துடன் ஹிட் ஆனது உள்ளத்தை கிள்ளாதே பாடல். இதற்கு டி.இமான் இசையமைத்திருப்பார்.

மெலடியான பெப்பியான பாடல்களை மட்டுமே பாடிவந்த விஜய் கானாவும் கலந்து ஒரு ஜாலியான பாடலாக பாடியது தான் சச்சின் படத்தில் வாடி வாடி பாட்டு.

விஜய் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து பாடிய கூகுள் கூகுள் பாடல் சச்சின் படத்திலிருந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு பாடப்பட்டது. அந்த ஆண்டில் விஜய் டிவி விருது நிகழ்சியில் "Favorite Song"-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது.

தலைவா படத்தில் குடித்துவிட்டு பாடுவது மாதிரியான வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலை விஜய் மிக அசால்ட்டாக பாடியிருப்பார்.

விஜய் பாடிய மெலடி பாடல்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் ஜில்லா படத்தில் வந்த கண்டாங்கி கண்டாங்கி பாடல்.

அனிரூத் இசையில் விஜய் பாடிய பாடல் "செல்ஃபி புள்ள". குழந்தைகள் முதல் பெரியவர் அனைவரும் முனுமுனுத்த பாடல் இது தான்.

விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் குத்தாட்டம் போடும் "பாபா பாபா" பாடல் கேட்பவர் எல்லாரையும் நடனமாடவைக்கும். சந்தோஷ் நாராயணன் இசையில், பைரவா படத்தில் இந்த பாடல் இடம் பெற்றிருக்ககும்.

விஜய் ஏஆர் ரஹ்மான் காம்போவில் வந்த "வெறித்தனம்" பாடல் தாறு மாறு ஹிட் ஆனது. இந்த பாடல் முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களுக்கானதாகவே இருக்கும். விவேக்கின் வரிகளும் அவ்வாறே அமைந்திருக்கும்.

கடைசியாக விஜய் பாடியது மாஸ்டர் படத்தில் குட்டிஸ்டோரி பாடல். மிக வித்யாசமாகவும் தன்னம்பிக்கை ஊட்டக்கூடியதாகவும் குட்டி ஸ்டோரி பாடல் இருக்கும்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?