Autism : நோயா? குறைபாடா? - தடுக்க வழிகள் இருக்கிறதா? Canva
ஹெல்த்

Autism : நோயா? குறைபாடா? - தடுக்க வழிகள் இருக்கிறதா?

Antony Ajay R

சர்வதேச அளவில் ஏப்ரல் 2ம் தேதி ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது. 2007 முதல் ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டாலும் நம் மக்களிடையே ஆட்டிசம் குறித்த தெளிவு இன்னும் பிறக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

ஆட்டிசம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? ஆட்டிசத்தை எப்படிக் கையாள வேண்டும்? என பல விஷயங்களைப் பார்க்கலாம்.

ஆட்டிசம் ஒரு நோய் அல்ல ஒரு குறைபாடு என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆட்டிசம் ஒரு நரம்பியல் தொடர்பான வளர்ச்சி குறைபாடு ஆகும். இது குழந்தைகளில் தொடர்பாற்றலை (Communication) பாதிக்கும்.

இந்த குழந்தைகள் அடுத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள சிரமப்படுவார்கள். அதேப்போல தங்களது உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தவும் தவறுவார்கள்.

ஆட்டிசத்தை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் மருத்துவ நடவடிக்கைகள் மூலம் குழந்தைகளை ஓரளவு மேம்படுத்தலாம்.

ஆட்டிசம் மரபணு, கர்ப காலத்தில் சரியான மருத்துவ சிகிச்சை பெறாதது, வயதான காலத்தில் குழந்தை பெறுவது, கர்ப்ப காலத்தில் தவறான மருந்து உட்கொள்வது, கர்ப்ப காலத்தில் வைரஸ் நோய் ஏற்படுவது, குழந்தை பிறக்கும் போது எடைகுறைவாக இருப்பது போன்ற காரணங்களால் ஏற்படுவதாக கூறப்பட்டாலும் தீர்மானமான காரணம் அறியப்படவில்லை.

இந்தியாவில் உள்ள 125 குழந்தைகளில் ஒருவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் 59 குழந்தைகளில் ஒருவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

பெண் குழந்தைகளை விட ஆண்குழந்தைகளே அதிகமாக ஆட்டிசம் குறைபாட்டுக்கு உள்ளாகின்றனர்.

ஆட்டிசம் உள்ள குழந்தைகள் அதிகமாக தனிமையை விரும்புவார்கள். ஒரு முறை பெயரைக் கூப்பிட்டதும் திரும்பமாட்டார்கள்.

சூழலில் கவனம் இல்லாமல் தனி உலகில் இருப்பார்கள். எதிரில் பேசுபவரின் கண்ணைப் பார்த்து பேசமாட்டார்கள். குழந்தைகள் நம் உணர்வுகளுக்கு உடனடியாக ரியாக்ட் செய்ய மாட்டார்கள்.

ஆட்டிசம் இருக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக மூட்ஸ்விங்ஸ் இருக்கும். பெரும்பாலான குழந்தைகள் சொன்ன வார்த்தையையே திரும்ப திரும்ப சொல்வார்கள்.

ஆட்டிசம் இருக்கும் குழந்தைகள் ஆரம்ப காலத்தில் நடக்கவும் பேசவும் அதிக காலமெடுக்கும்.

ஆட்டிசம் இருப்பதைக் கண்டறிய பிரதான முறைகள் எதுவும் கிடையாது. குழந்தைகளின் செயல்பாடுகளை வைத்து தான் அறிய வேண்டும். நரம்பியல் ஆட்டிச குறைபாட்டை சிடி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் அறியலாம்.

ஆட்டிசம் இருக்கும் குழந்தைகளை பெற்றோர் அதிக கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். சில குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள், சரியான நேரத்துக்கு தூங்க மாட்டார்கள். இந்த குழந்தைகளுக்கு பெற்றோர் பக்க பலமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு விஷயத்தையும் அவர்களுக்கு புரியவைக்க பலமுறை விளக்க வேண்டும். ஸ்பீச் தெரப்பி எனும் பேச்சு பயிற்சி அளிக்க வேண்டும். மற்ற குழந்தைகளுடன் பழக ஊக்கப்படுத்த வேண்டும்.

அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை ஆர்வமாக செய்வார்கள். அந்த விஷயத்தைக் கண்டறிந்து அதில் பயிற்சி அளிக்கலாம்.

ஆட்டிசம் அறிகுறிகள் இருக்கும் குழந்தைகளை முடிந்தவரை விரைவாக கண்டறிந்து பயிற்சி அளிக்க வேண்டும். எவ்வளவு சிறிய வயதில் கண்டறிகிறோமோ அவ்வளவுக்கு குழந்தைகளை மேம்படுத்த முடியும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?