ஆயுர்வேத மருத்துவம் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நம்மிடம் உள்ள மருத்துவம். ஆரோக்கியமாக வாழ, சரியாகச் சாப்பிட அறிவியல் அறிவோடு ஆயுர்வேதம் விளக்குகிறது. சில உணவுகள் சில உணவுகளோடு சேர்க்கவே கூடாது. அப்படிச் சேர்த்துச் சாப்பிட்டால் உடலில் பிரச்சனைகள் வரும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. உணவுதான் உடல்நல கோளாறுகளுக்கான முக்கிய இன்டிகேட்டர்… உணவால் உடல் கெட்டு நோயாக வெளிப்படுத்தும். பின் நோய் அறிகுறிகள் தென்படும்…
அப்படி என்னென்ன உணவுகள் எவற்றுடன் சேர்க்கக்கூடாது எனப் பார்க்கலாமா…
செரிமானம்தான் எல்லாமும்… செரிமான இயக்கம் மனிதனுடைய உயிர் வாழத் தேவையான ஒன்று. அப்படிச் செரிமானத்தைப் பெரும் அளவில் கெடுப்பதில் தவறான உணவு காம்போகளுக்கு பெரும் பங்கு உண்டு. வயிறு உயிர் வாழத் தேவையான உறுப்பு. உணவை உண்டு, அது செரித்து, சத்துகள் கிரகித்து உடலில் சேர்க்கிறது. உணவுதான் உடலாக மாறுகிறது. அத்தகைய உணவை உடலாக மாற்றுவது செரிமானத்தின் முதல் வேலைதான். வயிறுதான் நம் உயிரின் ஆதாரம். ஆனால், வயிற்றைப் பலர் குப்பைத்தொட்டியாக மாற்றி விடுகின்றனர்.
பார்ப்பதையெல்லாம் சாப்பிடுவது, தோன்றுவதையெல்லாம் சாப்பிடுவது, மிச்சம் வைக்கக் கூடாது என அள்ளி தெளிப்பது, சுவையாக உள்ளது என ஏதேதோ வெரைட்டிகளை விரும்பி உண்ணுவது. இது எல்லாமே வயிற்றைக் கெடுக்கும் கொடுஞ்செயல்கள்…
முதலில் பாலுடன் எதையெல்லாம் சேர்க்கவே கூடாது எனப் பார்க்கலாமா… அனைத்துப் பழங்கள், மெலான் வகைகள், புளிப்பு சுவையில் உள்ள பழங்கள், வாழைப்பழம் போன்ற எதனுடனும் பால் சேர்க்கவே கூடாது. அப்போ மில்க்ஷேக்குக்கு மூடுவிழா என்கிறீர்களா…? ஆம்… மில்க்ஷேக் மிகத் தவறான உணவுப் பட்டியலில் வருகிறது. அதேபோல, சமோசா, பராத்தா, கிச்சடி போன்றவற்றுடனும் பால் சேர்க்க கூடாது. ஒரு சமோசா ஒரு டீ எனக் குடித்துப் பழகி இருக்கோம். இதுவும் தவறுதான். டீ எனும் தேயிலையோடு பால் சேர்க்கவே கூடாது. மொத்தத்தில் ஊரில் உள்ள டீ கடைகள் எல்லாமே தவறான உணவை விற்கும் டீ கடைகள்தான். அதாவது தவறான காம்பினேஷன்ஸ் உணவுகளைத் தயாரித்துக் குடிக்கத் தருகிறார்கள். அப்ப, டீயை எப்படிக் குடிப்பது? பிளாக் டீயாக மட்டுமே… அல்லது கிரீன் டீயாக…
தானியங்களோடு பழங்களைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. சமைத்த உணவுடன் சமைக்காத இயற்கை உணவான பழங்களைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இரண்டும் வெவ்வேறு குணங்கள் உடையவை.
பால், காய்கறி மற்றும் பழங்கள், இது எதுவும் சேர்த்து உண்ணக் கூடாது. பாலுடன் பழங்களோ… பாலுடன் காய்கறிகளையோ சேர்த்து உண்ணக் கூடாது. நிறையப் பேர் யூ டியூப்பில், பாலை குக்கரில் ஊற்றி வெஜிடெபிள் மில்க் பிரியாணி செய்கிறார்கள். இது தவறான உணவு. தேங்காய்ப் பால் ஊற்றிச் செய்வதே சரியான முறை. பசும்பால் ஊற்றிச் செய்வது தவறு.
தயிர்
பீன்ஸ் வகைகளான பீன்ஸ், அவரை, துவரை, டபுள் பீன்ஸ் போன்றவை பால், முட்டை, மீன், பழங்கள், தயிர், சிக்கன், மட்டன், இறால், நண்டு, மீன் இவற்றுடன் சேர்க்கக் கூடாது. முட்டை கலந்து அவரைப் பொரியல், முருங்கை கீரை பொரியல் செய்யும் வழக்கம் பல பெண்களிடம் உள்ளது. இப்படிக் காய்கறிகளோடு முட்டையைச் சேர்க்கக் கூடாது. எந்த அசைவத்துடனும் காய்கறிகளைச் சேர்க்கக் கூடாது.
யோகர்ட்டை சீஸ், ஹாட் டிரிங்க்ஸ், புளிப்புப் பழங்கள், மாங்காய், மாம்பழம், பீன்ஸ், முட்டை, மீன் இவற்றுடன் சேர்க்கக் கூடாது. தயிர் பச்சடியும் தவறான உணவுதான். பிரியாணிக்குத் தயிர் பச்சடி தவறுதான். பிரியாணிக்கு வெறும் வெங்காயம் சேர்த்துச் சாப்பிடலாம்.
சீஸ்
அதாவது கொழுப்புச் சத்துள்ள அசைவ உணவுகளோடு புரதச் சத்துள்ள பருப்புகள், காய்கறிகள் ஆகியவை சேர்க்கக் கூடாது. ஏனெனில் புரதத்தைச் சுரக்கச் செரிமான நொதி வேறு மாதிரி இருக்க வேண்டும். கொழுப்பைச் செரிக்கச் சுரப்பு நீர் வேறு மாதிரி இருக்க வேண்டும். இரண்டும் ஒரே சமயத்தில் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை தலைதூக்கும். மீனும் மட்டனும், மீனும் சிக்கனும், முட்டையும் மீனும் இதெல்லாமே தவறான காம்போ… பருப்பும் அசைவமும்கூடத் தவறானவை.
சீஸூடன் முட்டை, பழங்கள், ஹாட் டிரிங்க்ஸ், பால், பீன்ஸ், தயிர் சேரக் கூடாது. அப்போ தெருவில் விற்கும் பிரெட் ஆம்லெட்டில் சீஸ் வைத்துச் சாப்பிடும் பழக்கம் சரியானது தானா? நிச்சயமாக இல்லை என்கிறது ஆயுர்வேதம்.
உருளைக்கிழங்கு
நிறைய மாவுச்சத்தும் நிறையப் புரதமும் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் செரிக்க மிக மிகச் சிரமப்படும். செரிமானச் செயல் தாமதமாகும். எனவே புரதச் சத்து குறைவாக மாவுச்சத்து அதிகமாக இப்படிச் சாப்பிடலாம். அல்லது புரதம் அதிகமாக மாவுச்சத்து குறைவாகச் சாப்பிடலாம். 70 : 30 ரேஷியோவில் சாப்பிட்டுச் செரிமானப் பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம். நாம் செய்யும் பொங்கல் சரியான காம்பினேஷன். அது 70:30 தான்.
இந்த இரண்டும் பழங்களோடும், வெள்ளரிக்காய், மெலான் வகைகள், எந்தப் பால் பொருட்களுடனும் சேர்க்கவே கூடாது.
தேன்
முள்ளங்கியுடன் அசைவம் சேர்க்கக் கூடாது. கிராமங்களில் மட்டன் குழம்பில், இறால் குழம்பில் முள்ளங்கி சேர்க்கும் பழக்கம் உள்ளது. இதுவும் தவறான காம்பினேஷன்ஸ்.
தேனுடன் சம அளவில் நெய் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. 70:30 என ரேஷியோவில் சாப்பிடலாம். மேலும், தேனைச் சூடு செய்யவே கூடாது.
பால், தயிர், மோர், தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றுடன் எலுமிச்சை சாற்றைச் சேர்க்கவே கூடாது. நார்த் இன்டியன் சாட் உணவுகளில் இதுபோல காம்பினேஷன்ஸ்தான் பெரும்பாலும்… எனவே, வயிறு பத்திரம் மக்களே…
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust