Man Canva
ஹெல்த்

அதிகமாக ஆபாசப்படங்கள் பார்த்தால் என்னவாகும்? அறிவியல் கூறுவது என்ன?

திரைமறைவாக நடக்கும் இதைப் பற்றி பேசுவது இப்போதும் ஒதுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. இந்த நிலை மாறி இது குறித்து மனம் விட்டுப் பேசும் வெளியை உருவாக்க வேண்டும்.

NewsSense Editorial Team

ஆபாசப்படங்கள் பார்க்கப்படுவது இன்றைய உலகில் மிகவும் சாதாரணமாக நிகழ்கிறது.

பொதுவாக இளைஞர்கள் மற்றும் பதின் பருவத்தினர் மட்டும் குற்றம் சாட்டப்படும் இந்த விவகாரத்தில் வயதானவர்களுக்கும் பெண்களுக்கும் கூட பங்கிருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

அத்துடன் திரைமறைவாக நடக்கும் இதைப் பற்றி பேசுவது இப்போதும் ஒதுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. இந்த நிலை மாறி இது குறித்து மனம் விட்டுப் பேசும் வெளியை உருவாக்க வேண்டும்.

அதுவே இது பற்றி நல்ல, தீய விளைவுகளை புரிந்து கொள்ளவும் இதற்கான எல்லைகளை வரையறுக்கவும் உதவும். ஆம் எதற்கும் ஒரு எல்லை வேண்டாமா?

ஆபாசப் படங்கள் குறித்து அறிவியல் சொல்வதென்ன?

பலர் தினசரி ஆபாசப்படங்களைப் பார்ப்பவர்களாக இருக்கின்றனர். இது மிகவும் ஆபத்தான பழக்கம் என்று நிபுணர்கள் கூறினாலும், அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதிலும் இதற்கான எல்லை துல்லியமாக விளக்கப்படவில்லை.

சோசியாலஜி என்ற இதழில், "நீங்கள் ஓய்வாக இருக்கும் போது பொழுதுபோக்காக ஆபாசப்படங்களை பார்த்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. அது ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க உதவும்" எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் எவ்வளவு நேரம் ஆபாசப்படங்களைப் பார்க்கலாம் என்பது குறித்து எந்த ஆறிவியல் பூர்வமான தகவலும் கொடுக்கப்படவில்லை.

நிபுணர்கள் ஒரு வாரத்துக்கு 4 மணிநேரம் ஆபாசப்படங்களுக்காக செலவழிப்பது தீங்கற்றது எனக் கூறுகின்றனர்.

ஆனால், 4 மணி நேரம் மொத்தமாக அதற்காக செலவழிக்காமல் நேரத்தை பிரித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

ஆபாசப்படங்கள் பார்ப்பதன் தீய விளைவுகள்

அதிகமாக ஆபாசப்படங்களைப் பார்ப்பது உங்கள் மனநலத்தை பாதிக்கும் என்பதை நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கலாம்.

இது உங்களை உறவையும் சிக்கலில் தள்ளிவிட வாய்ப்பிருக்கிறது. ஆபாசப்படங்களைப் பார்ப்பவர்களின் பாலியல் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதனால் அவர்களது இணைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும்.

சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் பொது சுகாதாரத்தின் சர்வதேச இதழ், "தொடர்ந்து ஆபாசப்படங்களைப் பார்த்து சுய இன்பம் செய்பவர்கள் பாலியல் செயலிழப்புக்கு ஆளாகலாம். அது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி." என்கிறது.

ஆபாசப்படங்கள் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தலாம்

தொடர்ந்து ஆபாசப்படங்களைப் பார்ப்பவர்களின் நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும். இது உறவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆபாசப்படங்களை ஆரோக்கியமாக அணுகுவதற்க்கு சில டிப்ஸ்

எப்போது நிறுத்த வேண்டும் எனத் தெரிந்துகொள்ளுங்கள். அதிகாமாக ஆபாசப்படங்களைப் பார்ப்பவர்கள் இணையுடனான பாலியல் உறவில் மோசமான நிலையில் இருப்பது தான் உண்மை.

பாலியல் படங்கள் பார்ப்பதைக் கொல்லைக்குற்றம் மாதிரி எண்ணாதீர்கள். உங்கள் இணையுடன் அதுகுறித்துப் பேசுங்கள். அப்போது தப்பதிக்கு இடையிலான உறவு மேம்படும்.

மீண்டும் மீண்டும் ஆபாசப்படங்கள் பார்க்கத் தோன்றினால் அது தான் உங்களுக்கான சிகப்பு குறியீடு. நீங்கள் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று அர்த்தம்.

அள்வோடு இருந்தால் உங்கள் மனதுக்கும் உடலுக்கும் அரோக்கியமான பழக்கமாக ஆபாசப்படங்கள் இருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?