வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? canva
ஹெல்த்

Health: வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

வெல்லம், கரும்புச் சர்க்கரை போன்றவை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டும் வருகிறது. உணவில் வெல்லம் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

Keerthanaa R

சுவைகளில் அனைவரும் அதிகமாக விரும்புவது இனிப்பு தான். பொதுவாக நாம் பயன்படுத்தும் வெள்ளை நிற சக்கரையை விட வெல்லம், கரும்புச் சர்க்கரை போன்றவை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

உணவில் வெல்லம் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

சரும பாதுகாப்பு:

வெல்லத்தில் வைட்டமின்கள் சி, இ, ஏ, பி5 உள்ளிட்டவை நிறைந்துள்ளது. மேலும் இதில் மினரல்களும் அதிகம். இதனால், வயது முதிர்வை தடுக்கிறது, மேலும் சருமத்தில் கொப்பளங்கள், டார்க் ஸ்பாட்ஸ் வராமல் தடுக்கிறது.

நோய் தடுப்பு:

வெல்லத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம். இதனால் நோய் ஏற்படாமல் நமது உடலை பாதுகாக்கிறது. இதிலுள்ள செலெனியம், நோய் எதிர்ப்பை உண்டாக்கி, வயது முதிர்வையும் தடுக்க உதவுகிறது

ரத்த சுத்தீகரிப்பு:

ரத்ததின் சிவப்பு நிறத்துக்கு காரணமான ஹீமோக்ளோபின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வெல்லம், ரத்ததை சுத்தீகரிக்கவும் உதவுகிறது. இதனால், இரும்புச் சத்தும் அதிகரித்து, ரத்த சோகை போன்ற நோய்களை தடுக்கிறது வெல்லம்

சளி இருமலுக்கு சிறந்த மருந்து:

வெல்லத்தை நேரடியாக உட்கொள்வது சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வளிக்கிறது. ஒரு வேளை அதனை நேரடியா உட்கொள்வது தித்திப்பாக இருந்தால், தேநீர் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்கலாம். தவிர தலைவலி, மைக்ரேன் போன்றவற்றையும் தடுக்கிறது

ரத்த கொதிப்பு:

வெல்லத்தில் உள்ள பொட்டசியம் மற்றும் சோடியம் உடலில் உள்ள அமிலங்களின் அளவை கட்டுக்குள் வைத்து, ரத்தகொதிப்பு ஏற்படாமல் உதவுகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?