புகைப்பழக்கம் : விந்தணுக்களின் தரத்தை எப்படி பாதிக்கிறது | Explained Twitter
ஹெல்த்

புகைப்பழக்கம் : விந்தணுக்களின் தரத்தை எப்படி பாதிக்கிறது | Explained

NewsSense Editorial Team

இன்றைய சூழலில், ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள தேவையான நல்ல உடல் நலத்தை பல்வேறு விஷயங்கள் பாதிக்கின்றன பாதித்துக் கொண்டிருக்கின்றன. இதில் பல பிரச்சனைகளும் வாழ்வியல் சார்ந்த பிரச்சனைகளாகவே இருக்கின்றன.

உதாரணத்திற்கு அதிக உடல் எடையோடு இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உடல் மற்றும் மனதளவில் கடும் அழுத்தத்தோடு இருப்பது, மது, போதை பொருட்கள் போன்றவைகளை சகட்டுமேனிக்கு எடுத்துக் கொள்வது, கண்ட நேரத்தில் கண்ட உணவு வகைகளைச் சாப்பிடுவது, ஊட்டச்சத்து நிறைந்த நல்ல உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது என பிரச்சனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

இதில் புகை பிடிப்பதும் ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள தேவையான உடல் நலத்தையும், விந்தணு தரத்தையும் குறைக்கும் மிக முக்கிய விஷயங்களில் ஒன்று. சிகரெட் போன்ற புகையிலை பொருட்களில் 4,000க்கும் மேற்பட்ட கேடு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள், கார்சினோஜின்ஸ் போன்ற புற்றுநோயை உண்டாக்கக் கூடிய உடலுக்கு தீங்கும் விளைவிக்கும் முக்கிய பொருட்கள் இருப்பதும் நம்மில் பலரும் அறிந்திருப்போம்.

புகைப்பிடித்தால், ஆண்களின் விந்தணுவின் தரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதிகம் புகைபிடிக்கும் ஆணின் விந்தணுவால் முறையாக பெண்களின் பிறப்புறுப்பு திரவத்தில் நீந்தி செல்ல முடியாமல் போகலாம், அப்படியே நீந்திச் சென்றாலும் கருமுட்டையை கண்டுபிடித்து அதனோடு இணைய முடியாமல் போகலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

சமீபத்திய ஆய்வு ஒன்றில், புகைபிடிக்கும் பழக்கம் உள்ள ஆண்களுக்கு, 23 சதவீதம் விந்தணு அடர்த்தி குறைவாக இருப்பதாகல் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல புகை பிடிப்பவர்களின் விந்தணு இயக்கம் 13 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் அவருக்கு கீழ் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சரி புகை பிடிப்பதால் ஆண்களுக்கு விந்தணு சார்ந்த விஷயங்களில் என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை இங்கு பார்ப்போம்...

செமினல் ஃப்ளுயிட் (seminal fluid)

ஆண்களின் விந்தணு உயிர்ப்போடு இருக்கவும், பெண்களின் கருமுட்டையில் சரியாகவும் பாதுகாப்பாகவும் சென்றடைய செமினல் ஃப்ளுயிட் என்கிற திரவம் பயன்படுகிறது. இந்த திரவம் இல்லை என்றால் மேற்கூறிய விஷயங்கள் சிக்கலுக்கு உள்ளாகும். புகை பழக்கம் உள்ளவர்களுக்கு செமினல் ப்ளாஸ்மா ஃப்ளுயிட் குறைவதாகச் சொல்கிறார்கள். அதே போல விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறைவதாகச் சொல்லப்படுகிறது.

male fertility - Mumbai IIT

விந்தணுவின் தரம் (Sperm quality)

12 வயதிற்கு மேற்பட்ட 2,500 பேரிடம் நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில், புகை பழக்கம் இல்லாத நபர்களை விட, புகை பிடிப்பவர்களின் விந்தணுவின் தரம் மற்றும் எண்ணிக்கை குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

விந்தணு இயக்கம் மற்றும் வேகம் (Sperm Motility/Sperm speed)

ஒரு நபரின் விந்தணு நல்ல தரத்தோடு இருக்கிறதா இல்லையா என்பது, அதன் இயக்கம் மற்றும் வேகத்தைப் பொருத்தது. ஆர் ஓ எஸ் - ரியாக்டிவ் ஆக்சிஜன் ஸ்பீசிஸ் என்கிற விஷயம் அதிகம் புகைபிடிப்பதால் உருவாகிறது. இது டி என் ஏ மரபணுவையே பாதிக்கும் வல்லமை கொண்டது. மேலும் ஆண்களின் விந்தணு செல்களையும் அழிக்கும் சக்தி கொண்டது. இப்படி டி என் ஏ மரபணுவே பாதிக்கப்பட்டால், அது விந்தணுவின் இயக்கத்தை பாதித்து, விந்தணுக்களின் நீந்தும் திறனையும் பாதிக்கும்.

விந்தணு டி என் ஏ (Sperm DNA)

புகை பழக்கம் உள்ள ஒரு நபரின் விந்தணு, அதிக அளவில் டி என் ஏ மரபணு சிதைவை அதிகரிப்பதாக இந்தியா டைம்ஸ் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், ஐ வி எஃப் போன்ற தொழில்நுட்ப ரீதியிலான மருத்துவ சிகிச்சைகளை செய்து கொண்டால் கூட, புகை பழக்கம் கொண்ட ஆண்களின் விந்தணுவைக் கொண்டு கர்பம் தரிப்பது மிகவும் கடினமாகிவிடுமாம்.

ஆண்குறி விரைப்புத்தன்மையில் பிரச்சனை (Erectile Dysfunction)

ஒருவரின் ஆண்குறி போதிய அளவுக்கு விரைப்புத்தன்மையோடு இல்லை என்றால், அவரால் சிறப்பாக உடலுறவில் ஈடுபட முடியாது. அவருடைய மனைவி கர்பம் தரிக்கும் சாத்தியக்கூறுகளும் குறைந்துவிடும். ஒரு ஆண் புகை பிடிக்கிறார் என்றாலே அவருக்கு ஆண்குறி விரைப்புத்தன்மை இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என செய்திகளில் கூறப்படுகிறது.

40 - 70 வயதுக்கு உட்பட்ட 52 சதவீத ஆண்களுக்கு ஆண் குறி விரைப்புத்தன்மை பிரச்சனை இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருவர் புகைப்பிடிக்கும் போது நுரையிரலுக்குச் செல்லும் நச்சுத்தன்மை கொண்ட விஷயம், நேரடியாக ஆண் குறியை பாதிக்கிறது. இதனால் ஆண் குறிக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது, கடைசியில் அது ஆண் குறி விரைப்புத்தன்மைக்கு வழிவகுக்கிறது.

இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், ஒரு ஆண் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டால் 70 - 90 நாட்களுக்குள் புதிய விந்தணு செல்கள் உருவாகிவிடும். சுமார் 3 மாத காலத்துக்குள் விந்தணுவின் தரம் அதிகரிப்பதையும் பார்க்கலாம். ஒருவேளை உங்களுக்கு புகை பழக்கம் இருந்தால் அருகிலுள்ள மருத்துவமனையை அணுகி, புகை பழக்கத்திலிருந்து வெளியேற ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுவோம், உடல்நலத்தைக் காப்போம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?