சுய இன்பம் NewsSense
ஹெல்த்

சுய இன்பம் : இணையத்தில் அதிகம் தேடப்படும் கேள்விகளும் அதற்கான விடைகளும்

இன்டர்நெட் யுகத்தில் மொபைலில் சுய இன்பம் குறித்த தேடல் அதிகரித்திருப்பது நாம் அறிந்ததே. அப்படி மக்களால் அதிகம் தேடப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Antony Ajay R

சுய இன்பம் குறித்துப் பேசுவது இந்த காலத்திலும் Taboo -வாக கருதப்படுவது ஆச்சரியம் தான். ஒவ்வொரு தனி நபரும் காலம் காலமாகு கடைபிடித்து வரும் இந்த பழக்கம் குறித்த புரிதலை சமுகத்தில் ஏற்படுத்துவது அவசியமாகும். இதற்காக இந்த சமாச்சாரங்களை ஒதுக்கிவிடாமல் உடைத்துப் பேச வேண்டிய அவசியம் இருக்கிறது.

பொது வெளிகளிலும் வீட்டிலும் சுய இன்பம் குறித்து வெளிப்படையாக பேசும் காலம் வரும் போது தான் இது குறித்த தவறான கருத்துக்கள் அதிகம் பரப்பப்படாது.

நம் சமுகத்தில் நண்பர்களிடம் கூட வேடிக்கையாக அல்லது நக்கலாக தான் இது குறித்து பேச முடியுகிறதேத் தவிர இதன் சாதகபாதகங்களை குறித்து உரையாடும் சௌகரியம் எங்கும் இருப்பதில்லை. எனினும் இன்டர்நெட் யுகத்தில் மொபைலில் சுய இன்பம் குறித்த தேடல் அதிகரித்திருப்பது நாம் அறிந்ததே. அப்படி மக்களால் அதிகம் தேடப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சுய இன்பம் குறித்த கேள்விகள்

சுய இன்பம் குறித்த இந்தக் கேள்விகள் நம் எல்லோருக்கும் இருக்கும். அல்லது இருந்திருக்கும். கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்த கேள்விகளுக்கான விடைகளை கண்டறியலாம்.

Search Terms

Masturbation Effects on Kidney

உடல்கழிவுகளை, அதிகப்படியான நீரை சிறுநீராக மாற்றும் பணியை செய்கிறது சிறுநீரகம் (கிட்னி). இது உடலுறவுக்கு (சுய உறவாயினும்) தொடர்புடைய இனப்பெருக்க மண்டலத்துடன் எந்த வகையான தொடர்பும் இல்லாதது.

சுய இன்பம் சிறுநீரகத்தை பாதிக்கிறது என்பதற்கு எவ்வித அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை என்கிறது ஹெல்த்லைன் தளம்.

இதுவே பெண்களுக்கும் பொருந்தும் என்கிறது bebodywise.com. ஆனால், அந்த தளத்தில், "உடலுறவின் மூலமாகவோ அல்லது சுய இன்பத்தின் மூலமாகவே உச்சத்தை அடைந்த பின் சிறுநீர் கழிக்க கடினமாக இருப்பதை நாம் உணர்ந்திருக்கலாம். இது உச்சமடையும் போது நம் உடல் சுரக்கும் ஹார்மோனால் ஏற்படும் விளைவாகும். இதனால் சிறுநீரகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Masturbation Effects on Memory

சுய இன்பம் நேரடியாக நியாபகத்தை பாதிக்காது. நினைவிழப்பு போன்ற பிரச்னைகளுக்கு சுய இன்பம் காரணமாக இருக்கும் என்பதற்கு எந்த நிரூபனமும் இல்லை. ஆனால் தொடர்ச்சியான சுய இன்பம் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்கிறது manmatters.com என்ற இணையத்தளம்.

நேரடியாக இல்லாவிட்டாலும் சுய இன்பம் செய்யும் போது வெளியேறும் ஹார்மோன்கள் மூளையை பாதிக்கும். இது தொடரும் போது சில பிரச்னைகள் ஏற்படலாம்.

சுய இன்பம் ஒரு அடிக்‌ஷனாக மாறும் போதும் அது பிரச்னையாக மாறலாம். கட்டுப்பாடான சுய இன்பம் ஆரோக்கியமானது என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சுய இன்பம் செய்வதன் மூலம் ஒரு செயலின் மீதான கவனத்தை அதிகரிக்க முடியும் என்கிறது www.medicalnewstoday.com தளம். அத்துடன் நமது மனநிலையை மேம்படுத்தவும், உறங்கவும் சுய இன்பம் உதவும்.

Masturbation

Masturbation Effects on Bones

புத்துணர்ச்சி அளிப்பது, மன அழுத்தத்திலிருந்து விடுதலை தருவது என நன்மைகளைக் கொண்டிருக்கும் சுய இன்பத்தில் சில தீங்குகளும் இருக்கதான் செய்கிறது. அதிகப்படியாக சுய இன்பம் செய்து ஒருவகையில் எலும்புகளை பாதிக்கலாம்.

ஜிங்க் குறைபாடு

நமது விந்தணுவானது ஜிங்க், கால்சியம், காப்பர் மற்றும் மெக்னீசியம் ஆகிய தாதுக்களைக் கொண்டிருக்கும். இதில் ஜிங்க் எலும்புகளின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும். எனவே அதிகப்படியான சுய இன்பம் எலும்புகள் உருவாக்கத்தை பாதிக்கும்.

ஹார்மோன் சமநிலையின்மை

அதிகப்படியான சுய இன்பம் உடலில் DHEA, டெஸ்டோஸ்டிரோன் மற்றும் DHT ஆகியன குறைவதற்கு வழிவகுக்கும். இந்த நரம்பியல் ரசாயனங்கள் குறைவது, உடல் ஒரு அழற்சி ஹார்மோன், ப்ரோஸ்டாக்லாண்டின்கள் E2 (inflammatory hormone, prostaglandins E2) ஆகியவற்றைத் தூண்டும். இதனால் முதுகு வலி ஏற்படக் கூடும்.

வைட்டமின் டி குறைபாடு

ஒவ்வொரு முறை நாம் சுய இன்பத்தில் ஈடுபடும் போதும் குறிப்பிட்ட அளவு வைட்டமின் டி -ஐ இழக்கிறோம். இதனால் உடலில் வைட்டமின் டி குறைவு ஏற்பட்டு எலும்புகள் வலு இழக்க வாய்ப்பிருக்கிறது.

பெண்களுக்கு சுய இன்பம் முதுகு வலி ஏற்படுத்தும் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனால் தவறான பொஷிஷனில் செய்தால் முதுகு வலி ஏற்படலாம்.

Masturbation Effects on Stomach

சுய இன்பம் வயிற்று பிரச்னைகளை உருவாக்கும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. மோசமான பொஷிஷனில் செய்தால் ஒரு வேளை வயிற்று வலி ஏற்படலாம். அல்லது உங்களுக்கு ஏற்கெனவே வயிற்று வலி இருந்தால் அது கொஞ்சம் கூடுதலாகலாம்.

பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபட்டு உச்சத்தை அடையும் போது அவர்களின் கருப்பை தசைகள் சுருங்கும். பொதுவாக இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது ஆனால், மாதவிடாய் நேரத்தில் இது தீவிரமாக இருக்கலாம்.

Masturbation Effects on Testosterone Levels

சுய இன்பம் செய்வது டெஸ்டோஸ்டிரான் அளவை பாதிக்கிறதா என்ற கேள்விக்கு நேரடியாக இல்லை என்று தான் பதில் கிடைக்கும். ஆனால், சுய இன்பம் செய்யாமல் இருக்கும் போது டெஸ்டோஸ்டிரான் அளவானது அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என 2001ம் ஆண்டில் ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டதாக www.forhims.com வலைத்தளம் கூறுகிறது.

எனில், உச்சமடைவது குறைவாக இருந்தால் அதிக டெஸ்டோஸ்டிரான் சுரக்கும் அப்படித்தானே? என்றால் அது தான் இல்லை.

பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடாமலிருக்கும் அல்லது ஆண்மைக் குறைவு உள்ள நபர்களுக்கு டெஸ்டோஸ்டிரான் மிகக் குறைவாக இருக்கும்.

Masturbation

Masturbation Effects on Nerves

சுய இன்பம் நரம்பியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை பொதுவாக சொல்லிவிட முடியாது. கட்டிப்பாடான மென்மையான சுய இன்பம் எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. ஆனால் அதிகமாகும் போது அல்லது கடுமையாக சுய இன்பத்தில் ஈடுபடுவது நரம்பியல் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். வீரியத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது.

2009ம் ஆண்டு 2000 பெண்கள் கலந்து கொண்ட ஆய்வு முடிவுகள் சுய இன்பம் செய்ய வைப்ரேட்டர்களை பயன்படுத்துவதும் எவ்வித நரம்வியல் பாதிப்பையும் ஏற்படுத்தாது எனக் கூறுவதாக greatist தளம் கூறுகிறது.

Masturbation Effects on Liver

சுய இன்பத்துக்கும் கல்லீரல் செயல்பாடுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மது அருந்துவது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துமே தவிர, சுய இன்பம் இல்லை. உடலை சுத்தம் செய்யும் கல்லீரலின் பணி உங்கள் இன்பத்தால் பாதிப்படையாது.

ஒரு வேளை உங்கள் கல்லீரல் சரியாக செயல்படாததாக நீங்கள் உணர்ந்தால் மருத்துவரை அனுகி ஆலோசனைப் பெறுங்கள்.

Masturbation Effects on Running

சுய இன்பம் செய்வது உங்களின் உடற்பயிற்சி திறனை பாதிக்காது. ஆனால் உச்சமடைந்த உடனே டெஸ்டோஸ்டிரான் அளவில் மாற்றம் ஏற்படும். இது மிக தற்காலிகமானது தான்.

சுய இன்பம் அதிகமாக செய்யும் போது அதுவே மன உளைச்சல் மற்றும் பதற்றத்துக்கு வழி வகுக்கலாம். சமுகமாக மற்றவர்களுடன் இணைந்து பழகுவதை அது பாதிக்கும்.

தொடர்ந்து சுய இன்பம் செய்யும் போது பாலியல் செயல்பாடுகள் ஒருவர் மட்டும் ஈடுபடும் ஒன்றாக மூளையில் பதியக்கூடும். இதனால் இணையுடன் இணைந்து உடலுறவில் ஈடுபடுவது சில பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?