காதல், காமம், கொஞ்சம் உளவியல் : ஆணும் பெண்ணும் எதற்காக செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள்? - 26

எதற்காகத் தாம்பத்திய உறவில் இருக்கிறார்கள் என்பது, வெறுமனே ‘உடலின் இன்பத்துக்காக’ எனப் பலர் நினைக்கிறார்கள். ஆனால், அது மட்டுமே காரணம் கிடையாது.
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல்Pexels

ஒரு ஆணும் பெண்ணும் எதற்காக செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள்? ஒவ்வொருவருக்கும் மனசுக்குள் இந்தக் கேள்வி இருந்து கொண்டிருக்கும். நிஜமான பதிலை தேடி அலைவார்கள். உங்களுக்கு நீங்களே யோசித்துப் பார்த்தால் எதற்கு என்பது புரியும். அதில் உள்ள சரியும் தவறுகளும் தெரியும்.

எதற்காகத் தாம்பத்திய உறவில் இருக்கிறார்கள் என்பது, வெறுமனே ‘உடலின் இன்பத்துக்காக’ எனப் பலர் நினைக்கிறார்கள். ஆனால், அது மட்டுமே காரணம் கிடையாது.

Pexels

செக்ஸ் என்பது தகவல் தொடர்பு மொழியாக இருக்கிறது. ‘என்னுடைய அன்பை உன் மீது இப்படிக் காட்டுகிறேன்’ என ஆணோ பெண்ணோ தன் துணைக்கு உணர்த்துவது. செக்ஸ் என்பது உடலின்மொழி. வார்த்தைகள் இல்லாத மொழி. ஆணும் பெண்ணும் மிக அந்தரங்கமாகத் தகவல் பரிமாற்றம் நிகழ்த்துவது செக்ஸில் மட்டுமே சாத்தியம். உடல்கள் பேசிக்கொள்ளும் இடமாக செக்ஸ் இருக்கிறது.

புதிய அனுபவத்தைத் தேடிப் பெறுவதற்காகச் சிலர் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர். புகை, மது தரும் கிறக்கம், போதை ஒரு கட்டத்தில் அலுத்துப் போக இதையும் முயற்சி செய்து பார்க்கலாமே என புதிய அனுபவத்தைத் தேடுகிறார்கள்.

தினமும் ஒருவருடனே செக்ஸ் வைத்துக்கொண்டு அலுத்து போகும் ஆதலால் புதிய துணையைத் தேடி உறவு வைத்துக்கொள்கிறவர்கள், புதிய அனுபவம் தேடுபவர்கள்.

காதல், காமம், கொஞ்சம் உளவியல்
சீரக தண்ணீர் : இந்த 7 பலன்கள் தெரியுமா? | Nalam 360

சமூகத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திச் செய்யச் சிலர் செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள். திருமணம் ஆனதும் வாரம் மூன்று முறை அனைவரும் செக்ஸ் வைத்துக்கொள்கிறார்களே நானும் முயற்சி செய்கிறேன் என்றும்… அதுவும் என்னால் முடியவில்லையே… வெளியில் எங்காவது செய்து பார்க்கலாமா என்றும்… அப்போதாவது எல்லோரும் போல நானும் இருப்பேனா என்றும்… இது போலப் பரிசோதித்துப் பார்க்க சிலர் செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள்.

நடுத்தர வயதைத் தாண்டிய நிலையில் இன்னமும் என்னால் செக்ஸுக்கு துணையை ஈர்க்க முடிகிறதா என்பதை உறுதி செய்துகொள்வதற்காகப் பெண்களும், இப்போதும் என்னால் செக்ஸில் முழுமையாக என்னை வெளிப்படுத்த முடிகிறதா என்பதை உறுதி செய்துகொள்வதற்காக ஆண்களும் உறவில் ஈடுபடுகிறார்கள்.

நரைமுடி, முக சுருக்கம் வயதாவதை உணர்ந்ததும் முன்பு மாதிரி கவர்ச்சியாக இல்லை என்றும் பெண்களுக்குக் கவலை வரும். ஆண்களுக்கு இதைவிட அதிகக் கவலைகள். இதனால் செக்ஸில் ஆர்வம் குறையும். வாரத்தில் இத்தனை நாள் எனப் போய் எப்போதாவது ஒருநாள் செக்ஸ் வைத்துக்கொள்வார்கள். இந்த வயதில் அதிகபேர் மாத்திரை, மருந்து, மூலிகை, லேகியம் எனத் தேடி ஓடுவது இதனால்தான்.

காதல், காமம், கொஞ்சம் உளவியல்
Depression - மன அழுத்தம் தப்பிப்பது எப்படி? | Nalam 360
NewsSense

பழிவாங்குவதற்காகச் சிலர் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். மனைவி மீது அடக்க முடியாத கோபம். அவளைப் பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு சில ஆண்கள், வெளியில் வேறு பெண்களிடம் செக்ஸ் உறவில் ஈடுபடுகிறார்கள். இதேபோலப் பெண்களும் செய்யக்கூடும்.

அன்பளிப்பாகச் சிலர் செக்ஸை எதிர்பார்க்கிறார்கள். ஒரு வேலை நடக்க வேண்டும் அல்லது ஏதோ ஒரு காரியம் ஆக வேண்டும்.

சிலர் தண்டனையாக செக்ஸை கருதுவார்கள். பெண்ணைக் கட்டாயப்படுத்தியோ அல்லது துளியும் விருப்பமில்லாமல் பலாத்காரம் செய்தோ செக்ஸில் ஈடுபடுகிறார்கள். இது உலகின் உச்சமான கொடூரத்தனம். மன்னிக்க முடியாத குற்றம்.

தனிமையைக் காரணம் காட்டி சிலர் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள்.

<div class="paragraphs"><p>காம உணர்வை பெருக்கும் உணவுகள்</p></div>

காம உணர்வை பெருக்கும் உணவுகள்

Pexels

அழுத்தம் தரும் சூழலில் இருந்து விடுபடச் சிலர் செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள். வேலை நெருக்கடி அழுத்தும்போது செக்ஸ் வைத்துக்கொள்வது வழக்கம். இதைப் புகழ்பெற்ற ஓவியர் எம்.எஃப்.ஹுசைன் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். அதன்பிறகு அவர் புத்துணர்வோடு வேலைகளில் ஈடுபடுவாராம்.

குழந்தைப்பெற்றுக் கொள்வதற்காகவே சிலர் செக்ஸ் உறவில் ஈடுபடுகிறார்கள். தங்கள் மகிழ்ச்சிகாக இல்லாவிட்டாலும் குழந்தை பிறக்க வேண்டுமே என்ற நிர்ப்பந்தத்துக்காக உறவு கொள்வார்கள்.

<div class="paragraphs"><p>Sex</p></div>

Sex

Twitter

இப்படி செக்ஸ் உறவு கொள்வதற்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன. வெறும் உடல் இன்பம், சுகம் என்பதில்லை. அது இல்லாமலும் நிறையச் சந்தர்ப்பங்களில் பலர் செக்ஸ் உறவு கொள்கிறார்கள். வாழ்க்கையின் முதல் பாதியில் ஆரோக்கியத்தைச் செலவழித்து பணத்தை சம்பாதிப்பதும், வாழ்க்கையின் பின் பாதியில் பணத்தைச் செலவழித்து உடல் ஆரோக்கியத்தைப் பெறுவதுமே இப்போதைய நடைமுறையாக இருக்கிறது. இது மாற வேண்டும். வாழ்க்கையின் அர்த்தம் பணம் மட்டுமல்ல குடும்பம், நிறைவு, அன்பு, ஈகை, நல்ல உறவுகள், நண்பர்கள், பயணங்கள் என வாழ்வதும் நேசிப்பதும் முக்கியம்.

- தொடரும்

காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : நீடித்த உடலுறவு, நீடிக்காத உடலுறவு எது? - 25
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவுக்கு பின் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? - 24
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: திருமணம் செய்த உடனே கலவி -காமசூத்திரம் சொல்வது என்ன? - 23
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: திருமணம் தாண்டிய உறவை தடுக்க காமசூத்திரம் சொல்லும் வழி - 22
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : வலியில்லாத செக்ஸூக்கு என்ன வழி? - 21
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: உச்சக்கட்டம் அடையவில்லை - கண்டுபிடிப்பது எப்படி? - 20
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காமம் போரடிக்காமல் இருக்க என்ன தேவை? - 19
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : அந்தக் காலத்திலும் செயற்கை கருவிகள் - பகுதி 18
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உணர்வுகளை தூண்டும் காம விளையாட்டுகள் - 17
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : செக்ஸ் உறவுக்குத் தேவையான ஒரு பயிற்சி! - 16
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : பெண்களுக்கு ஈடுபாடு எந்த ஆண்களின் மீது வரும்? | பகுதி 15
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காம இச்சை பெருகுவதை எப்படிக் கண்டுபிடிப்பது ?- பகுதி 14
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : பெண் எப்போது கலவிக்கு தயாராகிறாள்| பகுதி - 13
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவு எத்தனை வகை திருப்தி? - பகுதி 12
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காம உணர்வை பெருக்கும் உணவுகள் - 11
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : எது சிறந்த செக்ஸ்? - 10
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : யாருக்கு இன்பம் அதிகம் ? - 9
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : வசப்படுத்த முடியாத நேரம் - 8
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : செயற்கை இன்பமும் இயற்கை இன்பமும் 7
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : இன்பங்களில் பல வகை! - 6
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உறுப்பு அளவு, ஆழம் பற்றி நவீன அறிவியல் சொல்வது என்ன? - 5
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவு - சில வகைகள்! - இது ச்ச்சீசீ விஷயம் அல்ல| பகுதி 4
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : 4 நிலைகளைக் கடப்பதே ‘செக்ஸ்’ - பகுதி 3
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காமத்தில் நீங்க எந்த வகை? - பகுதி 2
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்! - 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on


Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com