இந்தியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் நகரங்களில் 2வது இடத்தில் இருக்கிறதாம் பெங்களூரு. தினசரி இந்த நெரிசல், அலுவலக அழுத்தம், சுதந்திரமற்ற நகர வாழ்க்கையின் சலிப்பான சுழற்சியை எதிர்கொண்டு வரும் நாம் வீக் எண்ட்களிலாவது கூலன சுற்றுலா ஒன்றுக்கு செல்லத்தானே வேண்டும். அப்படி பெங்களூரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் நம்மால் செல்லக்கூடிய மலைப்பகுதிகள் இதோ…
பிலிகிரி ரங்கணா மலைகள் அல்லது பிஆர் ஹில்ஸ் என்று இவை அழைக்கப்படுகின்றன. கர்நாடகா, சமராஜநகர் மாவட்டத்தில் தமிழகத்தை ஒட்டி இந்த மலைகள் அமைந்திருக்கிறது. இங்குள்ள ரங்கநாத ஸ்வாமி கோவில் புகழ்பெற்றது.
அட்வென்சர் லவ்வர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது இந்த மலை. மலையேற்றம், ஆற்றில் பயணம், மீன் பிடித்தலில் ஈடுபட்டு ஒரு ஆற்றுக்குளியல் போட்டு எழுந்தால் ஒரு நாளில் சொர்க்கத்தைக் கட்டிவிடும் இந்த மலைகள்.
இங்குள்ள இயற்கைக் காட்சிகளுடன் பிஆர்டி வனவிலங்கு சரணாலயத்தையும் பார்வையிடலாம். வைல்டு லைஃப் போட்டோகிராப்பர்களுக்கு ஒரு ட்ரிப் செல்ல ஏற்ற இடம் இந்த பிஆர் மலை.
இது பெங்களூருவிலிருந்து 175 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
ஆந்திர மாநிலம், சித்தூரில் இந்த மலை இருக்கிறது. ஆந்திராவின் ஊட்டி என்று மற்றொரு பெயரும் இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 1,265 மீட்டர் உயரத்தில் இருக்கும் மலைத் தொடர் என்பதால், சில்லென்ற பயணத்துக்கு கேரன்ட்டி உண்டு.
இரண்டு பக்கமும் பச்சைப் பசேல் மரங்கள் சூழ, காட்டுக்கு நடுவே பைக்கில் போவது அலாதி அனுபவமாக இருக்கும். மதனப்பள்ளி என்பதுதான் இங்குள்ள நகரம். மலை மேலுள்ள ரெஸார்ட்களில் தங்குவதும் சூப்பர். குளியல் பார்ட்டிகளுக்கு மலைகளில் ஆங்காங்கே ஓடைகள் உண்டு.
பழமையான யூக்கலிப்டஸ் மரங்கள், பெரிய ஆலமரங்களை இங்குக் காணலாம். பெங்களூரிலிருந்து 143 கிலோமீட்டர் தொலைவில் இந்த மலை அமைந்திருக்கிறது. சென்னையிலிருந்தும் 260 கிலோமீட்டர் தான் தூரமென்பதால், சென்னை வாசிகளும் ட்ரை பண்ணலாம்.
பெங்களூரிலிருந்து விடுபட்டு ஒரு முறை ஏலகிரி செல்பவர்களுக்கு வாழ்க்கையை அப்படியே துண்டித்துக்கொண்டு ஏலகிரிக்கு இடம்பெயர்ந்து விடலாம் எனத் தோன்றுமளவுக்கு இயற்கைக்காட்சிகள் நிறைந்தது ஏலகிரி.
பழத்தோட்டங்கள், ரோஸ் கார்டன், ஜலகம்பரி நீர்வீழ்ச்சிகள், ஏரிகள் என ஏலகிரியில் சுற்றிப்பார்க்கப் பல இடங்கள் இருக்கின்றன. ஆங்கிலேயர்கள் ஓய்வெடுப்பதற்காகத் தயார் செய்து வைத்திருந்த மலைப்பிரதேசங்களில் ஏலகிரியும் ஒன்று.
பெங்களூரிலிருந்து 161 கிலோமீட்டர் தூரத்தில் ஏலகிரி மலை அமைந்திருக்கிறது.
பெங்களூரு நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது சவந்துர்கா மலை. பாறைகளால் உருவாக்கப்பட்ட இந்த மலை ஆசியாவிலேயே மிகப் பெரிய பாறைகளில் ஒன்று.
ட்ரெக்கிங் செல்பவர்களுக்கு மிகவும் ஏற்ற இடம் இந்த மலை. சவன்துர்கா-பிலிகுடா (வெள்ளை மலை) மற்றும் கரிகாட்டா (கருப்பு மலை) ஆகிய மலைகளைக் கடந்து சவன்துர்கா மலையை வந்தடைய வேண்டும்.
வீக் எண்டில் ட்ரெக்கிங் செய்து மலையேறி கோவில்களைப் பார்த்துவிட்டு குளத்தங்கரையில் ஓய்வெடுத்துத் திரும்புவது சாகச உணர்வையும் அமைதியையும் ஒரு சேர கொடுக்கக்கூடியது.
நந்தி மலை பெங்களூரு வாசிகளால் மிகவும் அரியப்பட்ட ஒன்றாகும். சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் கட்சிகளைக் காண்பதற்கு பெங்களூரியன்கள் பரிந்துரைக்கும் ஒரே இடம் நந்தி மலை தான்.
தென்னிந்தியாவிலிருக்கும் சிறந்த பாராகிளைடிங் மையம் நந்தி மலைதான். கர்நாடகா மாநிலத்தில் இந்த மலை அமைந்திருக்கிறது. இங்கு அனுபவம் வாய்ந்த பாராகிளைடிங் வீரர்கள் உள்ளனர்.
நந்தி மலை பெங்களூரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் தான் இருக்கிறது சாகசக்காரர்களே கிளம்பிவிட வேண்டியது தானே…
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust