அம்மா - மகன் Twitter
இந்தியா

மகனுடன் ஆல் இந்தியா டூர் செல்லும் 63 வயது தாய் - ஒரு அடடே குடும்பம்

"என் வயதிலிருக்கும் பலர் தங்களது துணையுடன் பயணம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் என் பயணங்களுக்கு ஏற்ற துணை என அம்மா தான். நாங்கள் பயணம் செய்யத் தொடங்கியதிலிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்" எனவும் வெங்கடேஷ் கூறியிருக்கிறார்.

Antony Ajay R

இன்றைய இளைஞர்கள் பலருக்கும் ஊர்சுற்றுவதில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது. பயணங்கள் தான் வாழ்வைத் திறக்கும் சாவி என நம்புகின்றனர். அதீத மன அமைதிக்காக பயணங்களுக்கு நடுவில் தொலைந்துவிட எண்ணுகின்றனர். தங்கள் குழுவுடன் புதுப் புது இடங்களுக்குச் சென்று புதிய விஷயங்களை செய்து பார்ப்பதில் பேரார்வம் உள்ளவர்களாக இருக்கின்றனர்.

உண்மையில் இளைஞர்கள் மட்டுமின்றி எல்லா வயதினருக்கும் இந்த ஆர்வமும் ஆசையும் இருக்கிறது. ஆனால் இந்திய சமூக கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு ஒரு பயணத்தை மேற்கொள்வது எல்லாருக்கும் எளிதானது அல்ல.

இதனால், தானே தன் அம்மாவைப் பயணங்களுக்கு கூட்டிச் செல்லலாம் என முடிவு செய்தார் டெல்லியைச் சேர்ந்த இளைஞர் வெங்கடேஷ்.

வெங்கடேஷும் அவரது தாயாரான சுபா சூர்யநாராயணனும் இணைந்து பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். சுபாவிற்கு வயது 63!

இரண்டு பேர் சேர்ந்து செல்லும் பயணங்களில் இருவருக்குமான பிணைப்பும் ஆதரவும் மிக முக்கியம். அப்படி ஒரு அம்மாவும் மகனும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து பயணங்களை மேற்கொள்ள முடியும் எனக் காட்டியிருக்கிறார்கள் இவர்கள்.

இதுவரை வெங்கடேஷும் அவரது தாய் சுபாவும் சிம்லா, தர்மசாலா, ஜிபி, கோவா, ரிஷிகேஷ், ஜெய்ப்பூர், சண்டிகர், அமிர்தசரஸ் மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

சாதாரண பயணமாக மட்டுமில்லாமல் பல சாகசங்களையும் இவர்கள் செய்திருக்கின்றனர்.

8 கிலோமீட்டர் நீளமுள்ள பிரஷர் ஏரி ட்ரெக் மற்றும் 5 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் செரோல்சர் ஏரி ட்ரெக் போன்ற கடினமான பயணங்களை இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த பயணங்கள் மேற்கொள்ளும் போது தனது தாயின் ஆர்வத்தையும் தைரியத்தையும் பாராட்டியுள்ளார் வெங்கடேஷ்.

"குடும்பத்துடன் அல்லது பெற்றோருடன் சிறந்த பயணத்தை மேற்கொள்வது கடினமானது என கூறுபவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். உண்மையின் நான் அம்மாவுடன் பயணம் செய்வது ஒரு தெரப்பி போன்றது. இது மிக அழகானதாக இருக்கிறது. அம்மா இது வரை எந்த சாகசத்தையும் மறுத்ததில்லை. புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் அவர் எப்போதும் ஆர்வத்துடன் இருந்திருக்கிறார்" என்று தனது பயணம் குறித்து கூறியுள்ளார் வெங்கடேஷ்.

"என் வயதிலிருக்கும் பலர் தங்களது துணையுடன் பயணம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் என் பயணங்களுக்கு ஏற்ற துணை என அம்மா தான். நாங்கள் பயணம் செய்யத் தொடங்கியதிலிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்" எனவும் வெங்கடேஷ் கூறியிருக்கிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் வெங்கடேஷின் தந்தை சூர்யநாராயணன் இறந்து விட்டார். இந்த இழப்பு அவர்கள் இருவருக்கும் மீண்டுவர முடியாததாக இருந்திருக்கிறது. உண்மையில் இதுவரை அவர்கள் மீண்டுவரவில்லை. எனினும் இந்த பயணங்கள் அவர்கள் இருவருக்கும் மிகப் பெரிய ஆதரவாக இருக்கிறது.

தனது தாயின் இழப்பையும் வலியையும் புரிந்து கொண்டு அவருடன் உலகைச் சுற்றிவரும் வெங்கடேஷ் அவர்களின் அடுத்த பயணத்தை ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளாராம்.

"இளைஞர்கள் தங்கள் பெற்றோருக்கும் உரிய முக்கியத்துவமும் அதிக நேரமும் ஒதுக்கி அன்பாக இருக்க வேண்டும்" என்பது தான் வெங்கடேஷ் அவரைப் போன்ற மற்றவர்களுக்கு வைக்கும் வேண்டுகோளாக இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?