Aaliya Mir: பாம்பு, சிறுத்தை, கரடி எதற்கும் அஞ்சாத பெண்- வனவிலங்குகளை காக்கும் இவர் யார்? Twitter
இந்தியா

Aaliya Mir: பாம்பு, சிறுத்தை, கரடி எதற்கும் அஞ்சாத பெண்- வனவிலங்குகளை காக்கும் இவர் யார்?

"பறவை, கரடி, சிறுத்தைகளை நெருக்கமாக இருந்து பார்த்திருக்கிறேன், அது எனக்கு சிறப்பான உணர்வைக் கொடுக்கும். எல்லாம் வல்லவர் எனக்கு விலங்குகளை பாதுகாக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார்" எனக் கூறியுள்ளார் ஆலியா.

Antony Ajay R

பெண்களால் என்ன செய்ய முடியும்? என கேட்டுக்கொண்டிருந்த பழமைவாத குரல்களுக்கு கடந்த சில தசாப்தங்களில் பலத்த பதிலடி கொடுத்துள்ளனர் பெண்கள்.

நம் கிராமங்களில் உள்ள பெண்கள் பாம்பு, பல்லிக்கு பயப்படாமல் இருப்பதைப் பார்த்திருப்போம். காஷ்மீரில் ஒரு பெண் விலங்குகளை காக்கும் அமைப்புடன் இணைந்து பாம்பும், கரடி, பறவைகள் போன்ற உயிர்களை எதற்கும் பயப்படாமல் அவற்றை மீட்டு வருகிறார்.

வீடுகளுக்கு புகுந்துவிடும் பாம்புகளை பிடித்து புகழ்பெற்ற வாவா சுரேஷ் போல பல பாம்புகளை அசால்டாக கையாண்டுள்ளார் ஆலியா மிர். காஷ்மீரில் மனிதர்கள்-விலங்குகளுக்கு இடையில் இருக்கும் உறவு மற்றும் அதில் ஆலியா மிர்ரின் பங்கு என்ன என்பது பற்றியும் பார்க்கலாம்.

ஆலியா மிர்

வைல்ட் லைஃப் எஸ்ஓஎஸ் என்ற தன்னார்வ அமைப்பின் கல்வி அதிகாரியாக இருக்கிறார் ஆலியா மிர்.

கணிதம் மற்றும் அறிவியலில் இரண்டு முதுநிலைப் பட்டங்கள் பெற்றிருக்கிறார் இவர்.

கல்லூரிக்காலம் முதலே விலங்குகளை மீட்கும் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.

இதற்கெல்லாம் காரணம் தனது கணவர் தான் எனக் கூறுகிறார் ஆலியா. கால்நடை மருத்துவரான ஆலியாவின் கணவர் அவருக்கு வைல்ட் லைஃப் எஸ்ஓஎஸ் குறித்து அறிமுகம் செய்துள்ளார்.

2004ம் ஆண்டு முதல் தன்னார்வ அமைப்புடன் இணைந்து முகாம்கள், பணம் திரட்டுதல், தெரு விலங்குகளை கவனித்துக்கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார்.

2006ம் ஆண்டு முழுநேர என்.ஜி.ஓ பணியாளராக இணைந்துள்ளார்.

அந்த காலத்தில் கரடிகள் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான உறவு மோசமாக இருந்திருக்கிறது. கரடிகள் வேட்டையாடப்பட்டன, மனிதர்கள் கொல்லப்பட்டனர்.

"2006 ஜனவரியில், மனித வசிப்பிடத்திற்குள் வழிதவறி வந்த கரடி ஒன்று கொல்லப்பட்டது. இந்த சம்பவம் என்னை உலுக்கியது. மனித-விலங்கு மோதல் அதிகரிப்பதற்கான காரணங்களைக் கண்டறியும் ஆய்வை மேற்கொண்டோம் மற்றும் அதனைக் குறைக்கும் வழிகளைத் தேடினோம். 2006 ஆம் ஆண்டில், காயமடைந்த விலங்குகளை மீட்டு மறுவாழ்வு செய்வதற்கான என் முழு அளவிலான பணியை தொடங்கினேன்" என்று அவர் கூறியிருக்கிறார்.

காஷ்மீரின் முதல் பெண் பாம்பு மீட்பவர்

முதலில் ஆலியா ஆசிய கருப்பு கரடிகள், இமாலய பழுப்பு கரடிகள், சிறுத்தைகள், பிற பாலூட்டிகள் மற்றும் பறவைகளை மீட்டுவந்தார்.

ஆனால் பாம்புகளைப் பிடிக்கத் தொடங்கிய பின்னர் தான் அவர் பிரபலமடைந்தார். வீடுகள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் வாகனங்களின் டயர்களில் சிக்கியிருக்கும் பாம்புகளை அவர் துணிச்சலாக மீட்டார்.

காஷ்மிர் முதல்வரின் இல்லத்தில் பதுங்கிய விஷம் மிகுந்த பாம்பான லெவண்டைன் வைப்பர் எனும் பம்பை ஒரு மணி நேரத்தில் மீட்டார் ஆலியா. அந்த சம்பவத்தினால் காஷ்மிர் முழுவதும் அறியப்பட்டார்.

விலங்குகளுடன் நெருக்கமாக இருந்து அவற்றைக் குறித்து அதிகமாக தெரிந்துகொண்டபின்னர் தனக்கு பயம் விலகியதாக தெரிவித்திருக்கிறார் ஆலியா.

"கரடி, பறவைகள் மற்றும் சிறுத்தைகளை நெருக்கமாக இருந்து பார்த்திருக்கிறேன், அது எனக்கு சிறப்பான உணர்வைக் கொடுக்கும். எல்லாம் வல்லவர் எனக்கு விலங்குகளை பாதுகாக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார்" எனக் கூறியுள்ளார் ஆலியா.

காஷ்மீரில் பாம்புகள்

பாம்புகள் அடிக்கடி வரும் விருந்தாளிகள் இல்லை என்பதனால் மக்களுக்கு பாம்பு குறித்த விழிப்புணர்வு இல்லை என்கிறார் ஆலியா.

அவர் கூறியதன்படி, விரைவான நகரமயமாக்கல் மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக அதிகமான பாம்புகள் மக்கள் வசிக்கும் பகுதியில் காணப்படுகின்றன.

காஷ்மீரில் சிறுத்தைகள்

2022ம் ஆண்டு காஷ்மீரில் அதிக அளவில் சிறுத்தைகள் நடமாட்டம் கண்டறியப்பட்டது.

காஷ்மீரின் நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் தான் சிறுத்தை மற்றும் கரடிகளையும் பாதிக்கின்றன என்கிறார் ஆலியா.

இதனால் சிறுத்தைகள் வாழ்விடம் தேடி நகரங்களில் கூட தென்படுவதாக ஆலியா கூறுகிறார். நகரங்களில் பல நாட்கள் தெருநாய்களை உண்டு சிறுத்தைகள் வாழ்ந்திருக்கின்றன.

இந்த விலங்குகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை எனக் கூறிய ஆலியா. அதற்காக முகாம்களை நடத்தி வருவதாகவும் கூறியிருக்கிறார்.

2021 மே மாதம் ஆலியாவின் தலைமையில் வைல்ட் லைஃப் எஸ்ஓஎஸ் வனவிலங்கு மீட்பு உதவி எண் வழங்கியிருக்கிறது.

"வன விலங்குகள் மீட்பு, மறுவாழ்வு, கள ஆய்வுகள் மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள் என எல்லாவற்றிலும் ஆண்களைப் போலவே செயல்பட்டிருக்கிறேன். இந்த துறை ஒரு ஆண்களுக்கான துறை என்ற கண்ணோட்டம் மாறிவிட்டது." எனக் கூறியுள்ளார் ஆலியா மிர்.

இந்த ஆண்டு சர்வதேச காடுகள் தினத்தில் தனது பணிக்காக ஜம்மு காஷ்மிர் கவர்னரின் கைகளில் விருதையும் பெற்றார் ஆலியா மிர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?