Palm Jumeirah
Palm Jumeirah Twitter
இந்தியா

துபாயில் அம்பானி வீடு : 600 கோடி மதிப்பு, 10 படுக்கையறைகள் - வேறு என்ன சிறப்பு?

Antony Ajay R

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான அம்பானி, 630 கோடி மதிப்புடைய ஒரு வீட்டை வாங்கியிருக்கிறார். துபாயில் இதுவரை வாங்கப்பட்டதிலேயே அதிக விலை கொடுக்கப்பட்டது இந்த வீட்டுக்கு தான் என்றுக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாம் ஜுமேரா (Palm Jumeirah) பகுதியில் இது வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

யாருக்காக வாங்கப்பட்டது?

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரர் அம்பானி. அவருக்கு ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தான் அம்பானியின் 7.8 லட்சம் கோடி சொத்துக்கு வாரிசுகள். இதில் இளையமகனான ஆனந்த் அம்பானிக்காக இந்த வீடு வாங்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

பாம் ஜுமேரா என்பது துபாயில் செயர்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தீவுக்கூட்டமாகும். பனை போன்ற வடிவத்தில் இருக்கும் இந்த தீவின் வடக்குப்பகுதியில் உள்ள ஒரு வீடு தான் ஆனந்த் அம்பானிக்காக வாங்கப்பட்டுள்ளது.

என்னென்ன வசதிகள் உள்ளன?

10 படுக்கையறைகள், ஒரு தனியார் ஸ்பா மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற நீச்சல் குளங்கள் போன்ற பல வசதிகள் இந்த வீட்டில் இருப்பதாக உள்ளூர் செய்தி தளங்கள் கூறுகிறது. ஆனால் அந்த தகவல்களில் வாங்குபவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

65 வயது நபரான முகேஷ் அம்பானி சிறிது சிறதாக தனது குழந்தைகளை வியாபரத்தில் இறக்குவது தெரிகிறது. அவருக்கு அடுத்ததாக ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தை கவனித்துக்கொள்ள பிள்ளைகளை அவர் தயார்படுத்தி வரும் சூழலில் இந்த சொத்து வாங்கிய செய்தியும் வெளியாகியிருக்கிறது.

இதே நேரத்தில் ரிலைன்ஸ், க்ரீன் எனர்ஜி, தொழில்நுட்பம் மற்றும் இ-காமர்ஸ்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்த சொத்து ரிலையன்ஸின் கடல்சார் நிறுவனத்தால் இரகசியமாக வாங்கப்பட்டதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் கூறுகிறது.

இதன் பாதுகாப்பை உறுதிப்படித்துவதற்காக பல மில்லியன் டாலர்கள் செலவழித்து பல மாற்றங்கள் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

துபாயில் குடியேறுகிறாரா அம்பானி?

துபாய் பணக்காரர்கள் விரும்பி தங்கும் இடமாக மாறிவருகிறது. உலகம் முழுவதிலும் இருந்துப் பணக்காரர்கள் துபாய் சென்று குடியேறுகின்றனர்.

இந்த வீடு புதிதாக வாங்கப்பட்டிருந்தாலும் அம்பானி மும்பையில் உள்ள அவரது வீட்டில் தான் இருப்பார் என்று கூறப்படுகிறது.

பாம் ஜுமேரா ஆடம்பரமான ஹோட்டல்கள், பளபளப்பான கிளப்புகள், ஸ்பாக்கள், உணவகங்கள் மற்றும் அடுக்குமாடி கோபுரங்களைக் கொண்டிருக்கிறது. பெரிசன் கடற்கரையின் அழகை ரசித்தவாறு பணக்காரர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

பணக்காரர்களுக்கு துபாய் நகரை விற்பதற்காக கோல்டன் விசா போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அரசு. கால்பந்து வீரர் டேவிட் பெக்மன், பாலிவுட் நடிகர் ஷாருக் கான் ஆகியோர் பாம் ஜுமேராவில் குடியிருப்புகளை வாங்கியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?