இளையராஜா Twitter
இந்தியா

Morning News Today: இளையராஜாவுக்கு எம்பி பதவி - வேறு யாரெல்லாம் பதவி பெறுகின்றனர்?

இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன பதவி வழங்கியிருப்பதைப் பிரதமர் மோடி நேற்று தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். முன்னதாக ஒரு புத்தகத்தில் பிரதமர் மோடி மற்றும் அம்பேத்கரை ஒப்பிட்டு இளையராஜா எழுதியது சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

NewsSense Editorial Team

இளையராஜா, பி.டி.உஷா நாடாளுமன்ற நியமன எம்.பிக்களாக நியமனம்


ஜனாதிபதி நேரடியாக 12 உறுப்பினர்களை நாடாளுமன்ற மாநிலங்களவையில் நியமன எம்.பி.க்களாக நியமிக்கிறார். விளையாட்டு, சட்டம், கலை, அறிவியல், இலக்கியம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பைச் செலுத்தியவர்களுக்கு இந்த நியமன எம்.பி பதவியை மத்திய அரசு வழங்கி கௌரவிக்கிறது. தற்போதைய சூழலில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராகேஷ் சின்கா உள்பட 5 பேர் நியமன எம்.பி.க்களாக உள்ளனர். இந்நிலையில், இளையராஜா, பி.டி.உஷா, தர்மஸ்தலா கோயில் நிர்வாகி வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதையாசிரியரான விஜயேந்திர பிரசாத் உள்ளிட்டவர்கள் நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன பதவி வழங்கியிருப்பதைப் பிரதமர் மோடி நேற்று தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இளையராஜாவுக்கு பலதரப்பிலிருந்து வாழ்த்துகள் பகிரப்பட்டது. வாழ்த்துகளுக்கு தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்திருந்தார் இளையராஜா.

முன்னதாக ஒரு புத்தகத்தில் பிரதமர் மோடி மற்றும் அம்பேத்கரை ஒப்பிட்டு இளையராஜா எழுதியது சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

முகக் கவசம்

கொரோனா எச்சரிக்கை: சென்னையில் மெட்ரோ பயணிகள் முகக் கவசம் கட்டாயம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கும் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையம் வந்து செல்லும் பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

OPS-EPS

இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கு - சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை

அ.தி.மு.க. முன்னாள் உறுப்பினரும், ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனருமான ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், "ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருக்கு இடையே நடைபெறும் மோதலினால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுவர். எனவே, அ.திமு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்குக் கடந்த மாதம் 28-ந்தேதி மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, என் மனுவைப் பரிசீலித்து அ.தி.மு.க.வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது

போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்து: சிக்கலில் போரிஸ் ஜான்சன் அரசு; ராஜினாமா செய்யும் அமைச்சர்கள்!

இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்தக் கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் கேளிக்கை விடுதியில் இரண்டு ஆண்களிடம் பாலியல் ரீதியாக அநாகரிகமாகச் செயல்பட்டதாக கிறிஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கிறிஸ் கட்சியின் துணை கொறடா பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து பழமைவாத கட்சி எம்.பி. பதவியிலிருந்து கிறிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையே, இங்கிலாந்து நிதி அமைச்சர் ரிஷி சுனக், சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அரசின் மீதான நம்பிக்கையை இழந்ததால் சட்டத்துறை அமைச்சர் லாரா டிராட், குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான அமைச்சர் வில் குயின்ஸ் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது, ஒரே நாளில் இங்கிலாந்தின் 4 முக்கிய அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா எனத் தொடர் சிக்கல்களால் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

விம்பிள்டன்: கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி அரையிறுதியில் தோல்வி!

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி, டெசிரே கிராசிக் - நீல் குப்ஸ்கி ஜோடிகள் மோதின. இதில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது. விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த நிலையில் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?