பெங்களூரு : அதிகரிக்கும் Work Hard - Party Hard கலாச்சாராம் - இளைஞர் உயிருக்கு ஆபத்து! Twitter
இந்தியா

பெங்களூரு : அதிகரிக்கும் Work Hard - Party Hard கலாச்சாராம் - இளைஞர் உயிருக்கு ஆபத்து!

பெரும்பாலான கார்பரேட்டுகளில் வெள்ளிக்கிழமை மாலைகளில் டீம் பார்டிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் ஊழியர்கள் கண்ணுமுன்னு தெரியாமல் குடிப்பது வழக்கமாக இருக்கிறது.

Antony Ajay R

சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா போன்ற நகரங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் பல கலாச்சார மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

பொருளாதார சுதந்திரம், பெண் சுதந்திரம் என இந்த நிறுவனங்கள் பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

மறுபக்கம் இளைஞர்களை அதிக வேலை வாங்கவும், நிறுவனத்துடன் பிணைப்பை அதிகரிக்கவும் பல வழிமுறைகளைக் கையாளுகின்றனர்.

பெரும்பாலான கார்பரேட்டுகளில் வெள்ளிக்கிழமை மாலைகளில் டீம் பார்டிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் ஊழியர்கள் கண்ணுமுன்னு தெரியாமல் குடிப்பது வழக்கமாக இருக்கிறது.

சிலர் மீன் போல தண்ணீரில் மிதக்கும் போது நிலைமை மோசமானதாகிறது.

கலெப் ஃப்ரீசென் என்ற ட்விட்டர் கணக்கில் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர், குழுவில் மற்றவர்கள் பார்டியில் ஈடுபட்டிருந்தபோது வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.

"கடின வேலை - கடின கொண்டாட்டம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஒரு நினைவூட்டல்: எந்த பார்டியும் ஒரு ஊழியரின் உயிரை இழக்கும் அளவு முக்கியமானது அல்ல"

கலெப் அவரது மனைவியுடன் மேல்தளத்தில் இருந்தபோது அந்த நபருக்கு வலிப்பு வந்ததை கவனித்திருக்கிறார். விரைவாக கீழே செல்வதற்குள் அந்த நபர் சோபாவில் சாய்ந்து மூச்சு விடத் தொடங்கியுள்ளார்.

உடனே அவரது குழுவில் ஒருவரை அழைத்து "இவரை கவனித்துக்கொள்ளுங்கள், யாராவது இவரை பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது அவசியம்" எனக் கூறியிருக்கிறார்.

ஆனால் அவர் அழைத்த நபரோ, "Bro, what a party animal, he's wasted!" என பொறுப்பற்ற முறையில் பதிலளித்திருக்கிறார்.

பின்னர் கலெப் மீண்டும் மேல் தளத்துக்கு வரும்போது மயங்கி கிடந்த நபரை நடனத்துக்கு பிரச்னை வராதவகையில் ஒதுக்கி படுக்கவைத்திருக்கின்றனர். அப்போது அவர் மீண்டும் அவர் மூச்சு திணறியிருக்கிறார்.

கலெப் மீண்டும் மயங்கிய நபருக்கு உதவ சென்று, அந்த குழுவில் இருந்த சில பொறுப்பான நபர்களிடம் கூறியுள்ளார். சிலர் அதீத போதை இல்லாமல் இருந்ததால் அவரை கவனித்துக்கொண்டுள்ளனர்.

பார்டிகளை ஒருங்கிணைக்கும் நிறுவனங்கள் குடிக்காத ஒரு மேலாளரையாவது கவனிக்க அனுப்பி வைக்க வேண்டும் என அந்த ட்வீட்டில் கலெப் கேட்டுக்கொண்டுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?