இந்தியாவின் பிரபலமான, மிகவும் விரும்பப்படும் சுற்றுலா தலங்களில் ஒன்று கேரளா. இங்குள்ள வானிலை, நீர்நிலைகள், பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த தலங்கள், உணவு வகைகள் இயற்கை ஆகியவற்றை ரசிக்க உலகின் பல மூலைகளில் இருந்தும் மக்கள் குவிகின்றனர்.
கேரளாவை அதன் வளத்திற்காக “God's Own Country” எனக் குறிப்பிடுகின்றனர்.
கேரளாவில் அதிகம் சுற்றிப்பார்க்கப்படும் இடங்களில் ஒன்று கோழிக்கோடு நகரம். கோழிக்கோடு ஒரு அழகிய கடற்கரை நகரம் இது.
இங்குள்ள கடற்கரை அவ்வளவு சுத்தமாக இருக்கும், மற்றும் அமைதியான சுற்றுச் சூழல் நம் மனதை இலகுவாக்கும்.
கோழிக்கோடின் மேற்கே அரேபிய பெருங்கடலும், கிழக்கே வயநாடு மலைகளும் அமைந்துள்ளன.
இந்தியாவை கண்டறிந்த வாஸ்கோ ட காமா, கோழிக்கோடு வழியாக தான் இந்தியாவை அடைந்ததாக கூறப்படுகிறது. அரபு, சீனா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் முக்கிய வணிக மையமாகவும் இருந்தது கோழிக்கோடு.
இவ்வளவு சிறப்புகள் உள்ள கோழிக்கோடு நகரத்தில் நாம் நிச்சயம் பார்க்கவேண்டிய தலங்கள் பற்றிய தொகுப்பு தான் இந்த கட்டுரை
இது கோழிகோடின் சன்செட் பாயிண்ட். நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் சூரியன் மறைவதை காணவே இந்த கடற்கரையில் குவிகின்றனர்.
இங்கு ஒரு கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. நாம் லக்கியாக இருந்தால், காலை நேரங்களில் இங்கு டால்ஃபின்களையும் காண நேரிடலாம்!
கோழிக்கோடில் மிஸ் செய்துவிடாமல் பார்க்க வேண்டிய இடம் மனஞ்சிரா. இது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு நன்னீர் குளமாகும்.
இந்த குளத்தைச் சுற்றி பரந்து விரிந்த புல்வெளிகள் கொண்ட பாரம்பரிய கட்டிடங்கள், ஒரு மியூசிக் ஃபவுன்டெயின், மற்றும் ஒரு ஓபன் தியேட்டர் இருக்கிறது.
இந்த இடத்தை ஆட்சி புரிந்த சமோரி வம்சத்திற்கு பிரதான நீர் ஆதாரமாக விளங்கிய மனஞ்சிரா அல்லது மன விக்ரம தொட்டி, இன்றும் வலுவான நிலையில் உள்ளது.
நமக்கு பிடித்தவர்களுடன் கைக்கோர்த்து, அமைதியாக ஒரு ஈவினிங்க் வாக் செல்ல உகந்த இடம் இந்த மனஞ்சிரா குளக்கரை!
பெயருக்கு ஏற்றார்ப்போல இது கலையின் இருப்பிடம். இந்த கிராமத்தில் கைவினைப் பொருட்களை தயாரிக்கவும், அதனை சுற்றுலா பயணிகளுக்கு விற்கவும் கலைஞர்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இங்கு கேரளாவின் பெருமைகளை பறைச்சாற்றும் வகையில், மாநிலத்தின் கலையை எடுத்துரைக்கும் வகையில் நிறைய ஒர்க் ஷாப்கள் நடைபெறும். ஏதாவது ஒன்றில் பங்கேற்று உங்கள் திறனை நீங்கள் வளர்த்துக்கொள்ளலாம். இல்லை, ஒன்றுக்கு மேலான வகுப்புகலையும் நீங்கள் பெறலாம்.
ஆனால் கண்டிப்பாக ஏதேனும் ஒன்றில் சேர்ந்து கற்றுக்கொள்ளுங்கள், கற்றலுக்கு தான் எல்லைகள் இல்லையே?
விபத்தில் சிதிலமடைந்த ஒரு கப்பலின் மேல் கட்டப்பட்டது இந்த கலங்கரை விளக்கம்.
இந்த லைட் ஹவுஸின் மீதேறிப் பார்க்க முறையாக அனுமதி பெற வேண்டும். அப்படி பெர்மிஷன் கிடைத்தால் இதன் உச்சிக்கு சென்று, இயற்கையின் வனப்பை, பரந்து விரிந்த நீலக் கடலை கண்டு ரசிக்கலாம். தவிர இங்கு இடம்பெயர்ந்து வரும் அரிய வகை பறவைகளை காணலாம்
கோழிக்கோடின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வணிக தூறைமுகம் இந்த பேப்போர். இங்கிருந்து தான் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு பொருட்கள் வணிகம் செய்யப்பட்டன.
கேரளாவின் பழமையான துறைமுகங்களில் ஒன்று இந்த பேப்போர். அரபுகள், சீனர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் கேரளாவைக் கைப்பற்றிய பிறகு மூலோபாய ரீதியாக முக்கிய வணிக தலமாக இருந்தது.
அப்போதைய கட்டிடக் கலைஞர்களின் நிபுணத்துவத்தை பறைச்சாற்றும் விதமாக கட்டப்பட்ட சுமார் 15,000 ஆண்டுகள் பழமையான கப்பல் தளம் ஒன்று இங்கு உள்ளது.
வழிப்பாட்டு தலங்களுக்கு செல்லும் ஆர்வமுள்ளவர்கள் நிச்சயம் செல்லவேண்டிய புனித தலம் இந்த வலயநாடு தேவி கோவில்.
14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலானது, திராவிட கலைநயத்தோடு கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தைச் சுற்றி உள்ள எந்த கோவிலும், வலயநாடு கோவிலை போன்ற வடிவங்களோ, அமைப்பையோ பிரதிபலிக்காது. சமோரி வம்சத்தினரால் கட்டப்பட்டது இந்த கோவில், இங்கு சிவன், அய்யப்பன் மற்றும் விநாயக கடவுளர்களை பக்தர்கள் வழிபடலாம்.
குருதி தர்ப்பணம் இந்த கோவிலின் பாரம்பரிய சிறப்பு மிக்க விழாவாகும்
கோழிக்கோடின் மலைப் பகுதிகளில் ட்ரிப் செல்லும்போது உங்களை கட்டியிழுக்கும் ஓரிடம் துஷாரகிரி நீரூற்று. இங்கு அமைந்துள்ள சலிப்புழா நதி மிகவும் பிரபலம்.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து தொடங்கும் இரண்டு நீரோடைகள் ஒன்றிணைந்து தான் இந்த சலிப்புழா நதியை உருவாக்குகிறது.
இந்த நதியிலிருந்து மூன்று தனித்தனி நீரூற்றுகள் பிரிகின்றன. இந்த காட்சியே பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும், இரண்டு கண்கள் போதாது. மனித உலகின் சத்தங்களில் இருந்து சற்று அமைதியை பெற இந்த துஷாரகிரி வாட்டர் ஃபால்ஸ் ஒரு பெஸ்ட் சாய்ஸ்.
இங்கு டிரெக்கிங், ராக் கிளைம்பிங் போன்ற அட்வென்சர் செயல்களிலும் ஈடுபடலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust