Bhangarh கோட்டை Twitter
இந்தியா

Bhangarh கோட்டை: அச்சத்தில் நடுங்க வைக்கும் அமானுஷ்யம் நிறைந்த ஒரு சுற்றுலாத்தலம்

NewsSense Editorial Team

தூரத்துல ஒரு நாய் ஊலை விடுவது, மல்லிகை பூ வாசம், சல சல கொலுசுச் சத்தமெல்லாம் கண்டு மிரளாமல்... சரிப்பா அடுத்த ஐட்டம் என்னவென ஜாலியாக கடந்து போகும் ஆசாமிகளா நீங்கள்.

உங்களை வரவேற்கிறது Bhangarh கோட்டை.

பேய் பிசாசு, அமானுஷ்யம் என்று பேசத் தொடங்கினால் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள Bhangarh கோட்டையையும் கட்டாயம் பேசியாக வேண்டும். இந்தியாவிலேயே மிகவும் திகில் கிளப்பக் கூடிய டக் டக் டக் என இதயத்தை நிமிடத்துக்கு 100 முறை துடிக்க வைக்கும் அம்சங்கள் கொண்ட கோட்டைகள் ஏராளமாக இருக்கின்றன.

16ஆம் நூற்றாண்டில் ராஜா பகவந்த் தாஸ் என்கிற மன்னரால் அவரது இளைய மகன் மாதோ சிங்குக்கு கட்டப்பட்ட அரண்மனைதான் இந்த Bhangarh கோட்டை.

Bhangarh கோட்டை

இக்கோட்டை, ராஜஸ்தான் மாநிலத்தில் அல்வார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஜெய்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 88 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த கோட்டைக்கு மிக அருகில் இருக்கும் மனித நடமாட்டம் இருக்கும் இடமே கோலா கா பாஸ்தான் என சில வலைத்தளங்கள் சொல்கின்றன. அது கோட்டையிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் நடந்து போக வேண்டி இருக்கும் என்கிறது கூகுள் மேப்ஸ்.

இந்த கோட்டைக்குள் சூரியன் அஸ்தமித்த பின் அனுமதி இல்லையாம். எனவே தயவு செய்து யாரும் மாலை நேரத்தில் கோட்டைக்குள் நுழைய முயல வேண்டாம்.

Bhangarh கோட்டை


என்ன ஸ்பெஷல்

பாபா பாலக்நாத் என்கிற சாமியார் அந்த கோட்டைக்குள்ளேயே வாழ்ந்ததாகவும், தன் வீட்டை விட எவருடைய வீடும் உயரமாக இருக்கக் கூடாது என அவர் விரும்பியதாகவும், எனவே தன் வீட்டின் மீது எந்த ஒரு வீட்டின் நிழல் கூட விழக்கூடாது என்று கூறியதாக நாடோடிக் கதைகளில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதை மீறி விழுந்தால் மொத்த நகரமே அழிந்துவிடும் என அவர் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இது போன்ற கோட்டைகளுக்கு ஒரு கதை மட்டும்தான் இருக்குமா என்ன? இதோ மற்றொரு கதை... சின்ஹாய் என்கிற மந்திரவாதி Bhangarh-ரின் ராணி ரத்னாவதியைக் காதலித்ததாகவும், ரத்னாவதி அவரைக் காதலிக்க, அந்த மந்திரவாதி ராணிக்கு ஒரு மந்திர திரவத்தைக் கொடுத்த போது அதை அவர் உட்கொள்ள மறுத்து தூக்கி எறிந்து விட்டதாகவும், அது ஒரு பாறையில் மோதியதாகக் கூறப்படுகிறது.

Bhangarh கோட்டை

அந்த திரவம் கொட்டிய பாறை திடீரென உருண்டு சென்று எல்லோரையும் அழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மந்திரவாதி ஒட்டுமொத்த நகரத்தையும் சபித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த கோட்டைக்கு லாஹூரி கேட், அஜ்மீரி கேட், பூல்பாரி கேட், டெல்லி கேட் என பல நுழைவு வாயில்கள் இருக்கின்றன. அதோடு பல இந்து மத வழிபாட்டு கோயில்களும் இருக்கின்றன.

இந்த கோட்டைக்குள் சென்ற பலரும், அதனுள் ஒருவிதமான எதிர்மறை சக்தியை உணர்ந்ததாகவும், அந்த கோட்டைக்குள் சென்றாலே வேறு ஒரு காலத்துக்குச் செல்வது போன்றதொரு உணர்வு ஏற்படுவதாகவும் பல்வேறு வலைதளங்களில் கூறியுள்ளனர்.

என்ன சொன்னாலும், நேரில் போய் ஒரெட்டு பார்த்து அனுபவித்துவிட்டு வர ஒரு பெரிய கூட்டம் தொடர்ந்து Bhangarh கோட்டைக்கு பறந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த திரில்லை உணர விரும்பினால் நீங்களும் Bhangarh கோட்டைக்கு ஒரு டிக்கெட்டைப் போடுங்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?