இந்தியாவில் டீ அதிகமாக எங்கு கிடைக்கும்? தேநீர் உற்பத்தியில் டாப் 7 இந்திய மாநிலங்கள்! canva
இந்தியா

இந்தியாவில் டீ அதிகமாக எங்கு கிடைக்கும்? தேநீர் உற்பத்தியில் டாப் 7 இந்திய மாநிலங்கள்!

Keerthanaa R

டீ குடிக்க காரணம் வேண்டுமா? போர் அடித்தால் கூட டீ குடிக்கலாம்.

தேநீர் நம் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. சோகம், சந்தோஷம், கோபம் என அனைத்து மூட்களுக்குமானது டீ.

பிளாக் டீ, தம் டீ, மசாலா டீ, க்ரீன் டீ என் அதேநீரில் பல வகைகளும் உள்ளன

தேநீர் இந்தியா, சீனா, இலங்கை போன்ற நாடுகளில் பிரதானமான பானம் ஆக இருக்கிறது. இந்தியா உலகளவில் டீ உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் சீனா இருக்கிறது.

மேலும் உலகின் முதல் 5 தேயிலை ஏற்றுமதியாளர்களின் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது. இது மொத்த ஏற்றுமதியில் சுமார் 10% ஆகும். 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் மொத்த மதிப்பு சுமார் 726.82 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

சரி இந்தியாவில் டீ அதிகமாக உற்பத்தியாகும் மாநிலங்கள் என்னென்ன?

அசாம்

இந்தியாவின் டாப் டீ உற்பத்தியாளராக இருக்கிறது (50 சதவிகித உற்பத்தி) அசாம் மாநிலம். பிரம்மபுத்ரா நதியின் இரு கரைகளிலும் பரந்து விரிந்திருக்கின்றன தேயிலை தோட்டங்கள்.

லக்கிம்பூர், கம்ரூப், சிவசாகர் உள்ளிட்ட அசாம் நகரங்கள் டீ தயாரிப்பில் முன்னோடியாக இருக்கின்றன. இங்கு பிளாக் டீ மிகவும் பிரபலம்.

அசாம் தேநீர் அதன் கசப்பான சுவைக்காக அறியப்படுகின்றன

டார்ஜிலிங், மேற்கு வங்கம்

அசாமுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய தேநீர் உற்பதியாளர்காக இருக்கிறது மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங். இந்தியாவின் 25 சதவிகித டீ டார்ஜிலிங் உடையது.

இங்கு பச்சை தேநீர், கருப்பு தேநீர், வெள்ளை தேநீர் மற்றும் ஊலாங் தேநீர் ஆகியவை ஃபேமஸ்.

தேநீர் ஏற்றுமதியிலும் அசாமுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது டார்ஜிலிங்

நீலகிரி, தமிழ்நாடு

நீலகிரி தேநீர் அதன் நறுமணத்துக்காக மிகவும் பிரபலமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் புவியியல் அமைப்பு இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

வைட் டீ, கிரீன் டீ, ஆரஞ்சு டீ, மற்றும் ஊலாங் டீ போன்ற கவர்ச்சியான தேயிலை வகைகளையும் இங்கு காணலாம்.

கர்நாடகா

இங்கு கிடைக்கும் க்ரீன் டீ இலைகள் மிகவும் பிரபலம். கர்நாடகாவின் சிக்மங்களூர், ஹசன், தக்ஷிண கன்னடா போன்ற இடங்களில் தேயிலைகள் விளைவிக்கப்படுகின்றன. கர்நாடகாவில் பெரும் அளவில் காபியும் விளைவிக்கப்படுகிறது

கேரளா

கேரளாவில் மூணார் தேநீர் உற்பத்தியில் பிரபலமாக இருக்கிறது. இந்தியாவில் அதிகபடியாக தேயிலை தோட்டங்கள் இருக்கும் இடமாக அறியப்படுகிறது மூணார். கிட்ட தட்ட 50க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் உள்ளனர், பெரும்பாலும், டாடா குழுமத்துக்கு சொந்தமானவை

Tea

இமாச்சல பிரதேசம்

இமாச்சல பிரதேசத்தின் காங்கரா பள்ளத்தாக்கில் தேயிலை தோட்டங்களை அதிகம் காணலாம். இங்கு உற்பத்தியாகும் தேயிலைகள் மிகவும் நறுமனத்துடனும், அதிக சுவையுடனும் இருக்கின்றன. இதனால், இந்த காங்கரா பள்ளத்தாக்கு கடவுள்களின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.

இமாச்சல பிரதேசத்தின் பிரதானமான தேநீர் வகைகளாக கிரீன் டீ மற்றும் பிளாக் டீ இருக்கிறது

த்ரிபுரா

இந்தியாவின் மிகப்பெரிய தேநீர் உற்பத்தியாளர்களில் த்ரிபுராவும் ஒன்று. இங்கு வெப்பநிலை 10 முதல் 35 டிகிரி வரை மாறுபடுவதால், தேநீர் உற்பத்திக்கு இது சிறந்ததாக இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?