ஜந்தர் மந்தர்: 300 ஆண்டுகள் பழமையான நினைவுச்சின்னம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்  ட்விட்டர்
இந்தியா

ஜந்தர் மந்தர்: 300 ஆண்டுகள் பழமையான நினைவுச்சின்னம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

Keerthanaa R

இந்தியாவின் பிரபலமான அடையாளச் சின்னங்களில் ஒன்று ஜந்தர் மந்தர் நினைவுச்சின்னம். இந்தியாவில் மொத்தம் ஐந்து இடங்களில், அதாவது டெல்லி, வாரணாசி, உஜ்ஜைன், மதுரா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் இந்த ஜந்தர் மந்தர் அமைந்திருக்கிறது.

ஜந்தர் மந்தரின் பெயர் சமஸ்கிருதத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஜந்தர் என்றால் கருவி எனவும், மந்தர் என்றால் கணிப்பு எனவும் பொருள்படுகிறது. ஜந்தர் மந்தரின் அர்த்தம் கணிப்பின் கருவி என்றாகிறது. இங்கு 19 வானியல் கருவிகள் உள்ளன ( astronaumical instruments).

நேரம் கணக்கிடுதல், கிரகங்களை அறிவது, சூரியன் மற்றும் பூமியின் பாதையில் விண்மீன்களின் இடத்தை அறிவது, கோள்களை பற்றி அறிவது நிலநடுக்கங்களை கணிப்பது உள்ளிடவை தொடர்பான கருவிகள் இந்த கண்காணிப்பு மையத்தில் இருக்கின்றன.

ஜெய்ப்பூர் ஜந்தர் மந்தர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு காணலாம்

  • ஜெய்ப்பூரை ஆண்ட ராஜ்புத் அரசன் சவாய் இரண்டாம் ஜெய் சிங் 1727ல் தொடங்கி 1734ல் கட்டிமுடிக்கப்பட்டது. அரசர் ஜெய்சிங் வானவியலாளர் மற்றும் ஒரு கணிதவியலாளர்.

  • மற்ற நான்கு நகரங்களை காட்டிலும், ஜெய்ப்பூரில் அமைந்திருக்கும் ஜந்தர் மந்தர் அளவில் பெரியது.

  • ஜெய்ப்பூர் ஜந்தர் மந்தரில் உலகின் மிகப் பெரிய சூரியக்கடிகாரம் இருக்கிறது

  • 2010ஆம் ஆண்டு ஜந்தர் மந்தர் யுனெஸ்கொவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது

  • இங்கு இருக்கும் வானியல் கருவிகள் கற்கள், மார்பிள், பித்தளை உள்ளிட்டவற்றால் செய்யப்பட்டவை. ஜந்தர் மந்தர் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது!

  • இங்குள்ள 19 வானியல் கருவிகளுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது. இவற்றில் சம்ராட் யந்த்ரா எனப்படும் கருவி மிகப் பெரியது. இது 27 மீட்டர் உயரமாகும். இக்கருவி மிக துல்லியமாக காலத்தை கணிக்க உதவுகிறது.

  • இந்த இயந்திரத்தில், உள்ளூர் நேரம் முதல் உலக நேரம் வரை கணிக்கலாம். ஜெய்ப்பூரில் இருக்கும்போது, ஜெய்ப்பூர் நேரத்தை அறிந்துகொள்ளலாம்

  • ஆய்வாளர்களின் கூற்றுபடி இங்குள்ள கருவிகளை பயன்படுத்தி வானியல் நிலைகளை சிறப்பு கண்ணாடிகள் அல்லாமல் நம் கண்களாலேயே காணலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?