ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானிய பெண் ஒருவரை சில ஆண்கள் துன்புறுத்தும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இது நம் நாட்டுக்கே மிகவும் அவமானகரமானது என இணையத்தில் பலர் அந்த வீடியோவை பகிர்ந்து தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் அந்த வீடியோ குறித்து டெல்லி காவல்துறையினர், அந்த பெண்ணின் அடையாளம் உள்ளிட்டத் தகவல்களைப் பெற ஜப்பான் தூதரகத்தை அனுகியிருப்பதாக கூறியுள்ளனர்.
ஆனால் ஜப்பான் தூதரகம் இந்த சம்பவம் குறித்து எந்த தகவலும் தங்களிடம் இல்லை எனக் கூறியதாக டெல்லி காவல் துறையினர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.
காவல்துறையினர் கூறுவதன் படி, அந்த பெண் ஜப்பானில் இருந்து வந்த ஓர் சுற்றுலாப்பயணி. டெல்லியில் தங்கியிருந்தவர் இப்போது பங்களாதேஷ் சென்றுவிட்டார்.
வீடியோவில் தென்படும் 3 ஆண்கள் (ஒரு சிறுவன் உட்பட) காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
"எந்த புகாரும், அழைப்பும் பெண் துன்புறுத்தப்பட்டது குறித்து கொடுக்கப்படவில்லை. ஜப்பானிய தூதரகத்தில் விவரங்களைப் பெற இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது" என காவலர்கள் கூறியுள்ளனர்.
ஹோலி கொண்டாட்டத்தில் ஒரு பெண்னை பிடித்து இழுத்து சில ஆண்கள் கலர் பூசுவதும், ஒருவர் அந்த பெண்ணின் தலையில் முட்டையை உடைப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. அந்த பெண் மிகவும் மோசமாக உணருவதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது.
இதுகுறித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால், "ஹோலி பண்டிகையன்று வெளிநாட்டவருக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பது போல சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்ய டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன்! முற்றிலும் வெட்கக்கேடான நடத்தை!" என ட்வீட் செய்துள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust