Kuldhara: மனித வாடையே இல்லாமல் இருக்கும் ஓர் அமானுஷ்ய கிராமம் - கைவிடப்பட்டது ஏன்? ட்விட்டர்
இந்தியா

Kuldhara: மனித வாடையே இல்லாமல் இருக்கும் ஓர் அமானுஷ்ய கிராமம் - கைவிடப்பட்டது ஏன்?

Keerthanaa R

பாலிவுட் நடிகர்கள் சித்தார்த் மல்ஹோத்ரா கியாரா அத்வானி நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் நேற்று ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மாரின் சூர்யகர் கோட்டையில் நெருங்கிய பந்தங்கள் சூழ திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தை ஆட்கொண்டுள்ளன.

பண்டைய காலத்து வசீகரத்தையும், நவீன உலகின் ஆடம்பரத்தையும் ஒருங்கே கொண்ட இந்த ஜெய்சல்மார் கோட்டை வரலாற்று சிறப்புமிக்கது. ராஜாக்கள் காலத்தில் கோட்டைக்குள் மக்கள் வாழ்ந்து வந்தது போல இன்றும் கோட்டைக்குள் மக்கள் வசிக்கின்றனர். ஆனால், ஜெய்சல்மார் கோட்டைக்கு வெகு சமீபத்தில் அமைந்திருக்கும் குல்தாரா என்ற கிராமத்தை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கமாட்டோம்.

இந்த குல்தாரா கிராமத்தை பேய் கிராமம் என்கின்றனர் அந்த பகுதியில் வாழும் மக்கள். அதன் பின்னணி என்ன?

ஜெய்சல்மார் கோட்டைக்கு 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த குல்தாரா கிராமம். கதைகளின்படி இங்கு பலிவால் பிராமணர்கள் வெகு காலமாக வாழ்ந்து வந்தனர். கிராமமும் செல்வச் செழிப்புடன் திகழ்ந்தது.

அப்போது ஒருநாள், கிராமத்தின் பிரதம மந்திரி, சலீம் சிங் கிராமத் தலைவரின் மகளை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தெரிவித்தார். சலீம் சிங் மீது கிராம மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததே இல்லை. அவர் தனது பதவியை பயன்படுத்தி, மக்களிடம் கடுமையாகவே எப்போதும் நடந்துகொள்வார்.

இதனால், தனது மகளை அவருக்கு மணம் முடிக்க கிராம தலைவருக்கு விருப்பம் இல்லை. ஆனால் சலீம் சிங்கை எதிர்த்து கிராமத்தில் வாழவும் இயலாத நிலை. இதனால், மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, இரவோடு இரவாக கிராமத்தை விட்டு வெளியேற முடிவெடுத்தனர். அப்படி அவர்கள் இடம்பெயரும் போது, “இனி இந்த கிராமத்தில் மனிதர்கள் யாரும் வாழ முடியாது” என்று கடும் சாபம் ஒன்றைவிட்டுச் சென்றனர்.

இதனால், மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஒரு கிராமமாக கருதப்படுகிறது குல்தாரா. கிராமத்தில் யாரேனும் தங்க முயற்சித்தால் கூட ஒரு இரவை இங்கு கடப்பது சவால் தான். அமானுஷ்ய சக்திகள் அங்கு தங்க நினைத்த மக்களை விரட்டியடித்ததாக கூற்றுகள் இருக்கின்றன.

மற்றொரு புறம், பிரதம மந்திரி சலீம் சிங், ஊரில் வரிகளை கடடுக்கடங்காமல் விதித்ததால், பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் ஊரைவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. எனினும், முதல் கதையே பரவலாக நம்பப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?