Longwa: இந்திய-மியான்மர் எல்லையில் இரட்டை குடியுரிமை கொண்ட பழங்குடி கிராமம்-பின்னணி என்ன?
Longwa: இந்திய-மியான்மர் எல்லையில் இரட்டை குடியுரிமை கொண்ட பழங்குடி கிராமம்-பின்னணி என்ன?  ட்விட்டர்
இந்தியா

Longwa: இந்திய-மியான்மர் எல்லையில் இரட்டை குடியுரிமை கொண்ட பழங்குடி கிராமம்!பின்னணி என்ன?

Keerthanaa R

இந்தியாவில் வியக்கத்தக்க விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. அதன் பன்முகத்தன்மை, பின்பற்றப்படும் வெவ்வேறு கலாச்சாரங்கள், பல மொழிகள் என இந்தியாவின் சிறப்புகள் குறித்து நாம் நிறைய பேசியிருக்கிறோம்.

அப்படியிருக்க, இந்தியாவிலுருக்கும் இந்த கிராமத்தை குறித்தும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

நாகாலாந்தில் இருக்கும் லாங்வா என்கிற கிராமம் தான் அது. இது சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் இந்திய பகுதிகளில் ஒன்று

இந்த லாங்வா கிராமம் அப்படி என்ன ஸ்பெஷல்? சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குவிய என்ன காரணம்? இந்த கட்டுரையில்...

லாங்வா கிராமம்

நாகாலாந்தின் மான் என்ற மாவட்டத்தில் அமைந்திருக்கிறது லாங்வா கிராமம். இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 6,700 பேர் தான்.

இவர்கள் அனைவருமே இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய இரண்டு நாடுகளின் குடியுரிமையையும் பெற்றுள்ளனர்.

இந்தியாவில் மான் மாவட்டத்தின் 44சி பாம்சிங் தொகுதிக்கு உட்பட்டது லாங்வா. அதே போல மியான்மரில் யோச்சேன் லாஹே நகர தொகுதிக்கு உட்பட்டது லாங்வா

இரு எல்லைகளிலும் மிகச் சுதந்திரமாக, எந்த வித தடையும் இல்லாமல், பக்கத்து வீட்டிற்கு சென்று வருவதுபோல சென்றுவருகின்றனர் லாங்வா கிராமத்தினர்.

லாங்வா கிராமத் தலைவர்

லாங்வா நகரின் தலைவரை அங் என்று அழைக்கின்ரனர். இவர் மான் மாவட்டத்தின் 7 அங்களில் ஒருவர்.

இந்தியா மியான்மர் நாடுகளின் எல்லையானது கிராம தலைவரின் வீட்டை சரிபாதியாக பிரிக்கிறது. ஒரு பகுதி இந்தியாவிலும், ஒரு பகுதி மியான்மரிலும் அமைந்திருக்கிறது.

இந்த கிராம தலைவர் அங், மான், அருணாச்சல பிரதேசம் மற்றும் மியான்மரின் சில கிராமங்களை ஆழ்கிறார். இந்த கிராமத்தினர் அனைவருமே வலுவான பாரம்பரிய மற்றும் கலாச்சார பிணைப்புகளை கொண்டுள்ளனர், முறையாக தங்கள் வழக்கங்களை பின்பற்றி வருகின்றனர்.

கிராமத் தலைவர் இரு திருமணங்கள் செய்துகொள்வார். இந்தியாவில் வாக்குரிமை பெற்றவர்.

இவரது தலைமையில், இந்திய பகுதி நல்ல வளர்ச்சி கண்டுள்ளதாகவும், மியான்மரில் சொல்லிக்கொள்ளும்படியாக வளர்ச்சி இல்லை என்கின்றனர் கிராம மக்கள். மேலும் அங் தலைமையில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கூடத்தில் இரு நாடுகளை சேர்ந்த குழந்தைகளும் கல்வி கற்கின்றனர்

கொன்யாக் நாகா பழங்குடியினர்

லாங்வா கிராமத்தில் வசிக்கும் மக்கள் கொன்யாக் நாகா பழங்குடியை சேர்ந்தவர்கள். இவர்கள் தான் இந்தியாவில் தற்போது இருக்கும் கடைசி headhunters - அதாவது தலையை வேட்டையாடுபவர்கள்

எதிரி பழங்குடியினருடன் சண்டை புரியும் போது, வெற்றிபெரும் பழங்குடியினர் தோற்றவர்களின் தலையை வெட்டி எடுத்துவருவார்கள்.

இந்த செயல், வீரம், வலிமை, செழிப்பு, கருவுறுதல் போன்றவற்றின் அடையாளமாக பார்க்கப்பட்டது.

இந்த தலையை வெட்டும் வழக்கம் 1960ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. அதற்கு முன் இந்த வழக்கத்தில் ஈடுப்பட்டவர்கள் இன்றும் வேட்டையாடப்பட்ட மண்டை ஓடுகளை பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்

ஒரே வீடு இரு வேறு நாடுகள்

லாங்வா கிராமத்தில் வசிக்கும் மக்கள் முன்பே சொன்னது போல இந்தியா மியான்மர் ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையை பெற்றவர்கள். இவர்களின் வீடுகளும், கிராமத்தலைவருடைய வீட்டை போலவே இரு நாடுகளிலும் அமைந்திருக்கும்.

சிலரது வீட்டின் சமையலறை, சிலர் வீட்டின் படுக்கையறை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டில் இருக்கிறது.

இக்கிராமத்தில் இருக்கும் சிலர், மியான்மர் நாட்டின் ராணுவத்திலும் பணிபுரிகின்றனர்

சுற்றுலா தலம்

லாங்வா கிராமம் இந்தியாவின் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்று.

இவர்களின் கலாச்சாரம், இரு நாடுகளில் வாழும் அனுபவம் குறித்து தெரிந்துகொள்ள மக்கள் இங்கு வருகின்றனர்.

தவிர மெய்சிலிர்க்க வைக்கும் தோயாங் நதி, நாகாலாந்து அறிவியல் மையம் , ஹாங் காங் சந்தை, ஷில்லாய் ஏரி இவ்விடத்தின் சிறப்பம்சங்கள்.

கிராமத்திலிருந்து சில மைல்கள் தொலைவில், ஒரு மலையில், சர்வதேச எல்லையைக் குறிக்கும் ஒரு தூண் உள்ளது. அந்த தூணில், '154 பிபி 1971-72' என்று பொறிக்கப்பட்டிருக்கும்.

இரு வேறு நாடுகளில் அமைந்திருப்பதாலேயே இங்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?

”நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்” - கல்வி விருது விழாவில் விஜய் பேசியது என்ன?

அமெரிக்கா: வெப்பத்தால் உருகும் ஆபிரகாம் லிங்கன் மெழுகு சிலை!

Health: இதய பிரச்னைகளுக்கான முக்கிய அறிகுறிகள் என்னென்ன?

இந்தியாவில் இருக்கும் மிளகாய் வகைகள் என்ன? எதற்காக பயன்படுத்தப்படுகிறது?