மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், "மத்திய அமைச்சரவையின் 70 சதவிகித நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 22,000-க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். 9 -ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் அடிப்படை அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக நாம் ஏற்க வேண்டும்" என்றார்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கி ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்டன. உக்ரைன் கடுமையாக இந்தப் போரால் பாதிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் பலவும் ரஷ்யாவின் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில்
உக்ரைன் - ரஷ்யா போரால் சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்ந்திருக்கிறது. சமையலுக்குப் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெய்யை உக்ரைன் நாடு அதிகளவில் உற்பத்தி செய்து வழங்குகிறது. இந்தியா உட்படப் பல நாடுகளுக்குச் சூரியகாந்தி எண்ணெய்யை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்தது. போரால் இது தடைப்படவே ரூ.100ஆக இருந்த ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் ரூ 200ஆக உயர்ந்திருக்கிறது.
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 2022-23-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தாக்கலானது. பொது, வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் கடந்த மாதம் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடந்தது. நேற்று முன்தினம் தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் இந்த வழக்குகளை விசாரித்தனர். பல்வேறு தரப்பின் வாதங்களைக் கேட்ட பிறகு தீர்ப்பை வழங்கினர். அதன்படி, இந்த சட்டம் செல்லும் எனத் தீர்ப்பு வழங்கினர். மேலும்,
5 ஆண்டுகளுக்குப் பின், இந்த இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்யவேண்டும். இந்த இட ஒதுக்கீட்டைத் தொடர்ந்து வழங்குவதை நிறுத்தும் விதமாக அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் டவுன்டவுனில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்தனர். ஆனால் பாலஸ்தீனியர்களால் நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
டெல் அவிவ் நகரைச் சுற்றியுள்ள பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேலின் அவசர சேவை மையம் தகவல் தெரிவித்தது. இந்நிலையில் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. புனித இஸ்லாமிய மாதமான ரமலானுக்கு முன்னதாக பாலஸ்தீனிய நடத்திவரும் தொடர் தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டதை அடுத்து அங்குத் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. இன்று நடைபெறும் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.