முசிறி : ஈராயிரம் ஆண்டுகள் பழமையான துறைமுகம் - திடீரென காணாமல் போனது எப்படி? Twitter
இந்தியா

முசிறி : ஈராயிரம் ஆண்டுகள் பழமையான துறைமுகம் - திடீரென காணாமல் போனது எப்படி?

Antony Ajay R

தென்னிந்தியாவின் பண்டைய நாகரீகச் சிறப்பை பிரதிபலிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது முசிறி துறைமுகம்.

விமானங்களோ, நவீன தொழில்நுட்பமோ இல்லாத காலத்தில் உலகின் பல பகுதிகளில் இருந்து இங்கு வணிகர்கள் கடல்பயணம் செய்து வந்திருக்கின்றனர்.

ஆனால் வரலாற்றில் இருந்து துறைமுகம் 14ம் நூற்றாண்டில் திடீரென காணாமல் போயிருக்கிறது. இந்த சேர துறைமுகம் எந்த இடத்தில் இருந்தது? இதன் சிறப்புகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

எங்கு இருந்தது முசிறி

முசிறி கேரளாவில் பெரியாறு அல்லது பேரியாறு என்று அழைக்கப்படும் சுள்ளி ஆற்றங்கரையின் கழிமுகப் பகுதியில் இருக்கிறது.

இப்போது பட்டணம் என்று அறியப்படும் ஊர் தான் முசிறி துறைமுகமாக இருந்திருக்கலாம் என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள்.

பட்டணம் பகுதியில் 12 கட்ட அகழ்வாராய்சிக்கு இயக்குநராக இருந்த டாக்டர் பி.ஜே.செரியன் அந்த பகுதியில் பண்முக பண்பாட்டுத் தன்மைக்கான ஆதாரங்கள் இருந்ததாக பிபிசி வலைத்தளத்தில் கூறியிருக்கிறார்.

பல பண்பாடுகள் மற்றும் கலாச்சாரங்களைக் கடைபிடிக்கும் மக்கள் வணிக நகரங்களில் இணைந்து வாழ்ந்திருக்கின்றனர். இதனால் முசிறியில் பல நாடுகளுடைய பண்பாட்டு தடையங்கள் கிடைக்கப்பெற்றிருக்கலாம்.

ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்காவைச் சேர்ந்த 37 பண்பாடுகளுடன் ஒத்துப்போகின்ற சான்றுகள் கிடைத்திருக்கின்றன என்றும், முசிறி நகரம் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்திருக்கலாம் என்றும் டாக்டெர் செரியன் கூறியுள்ளார்.

சில வரலாற்றாசிரியர்கள் பட்டணம் பகுதியில் தான் முசிறி இருக்கிறது என்பதை ஏற்க மறுக்கின்றனர்.

கருப்பு தங்கம்

கேரளாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குறிப்பாக ரோமானிய பேரரசுக்கு மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.

மிளகு அந்த காலத்தில் மிகவும் கிடைக்கப்பெறாத முக்கியமான பொருளாக இருந்திருக்கிறது. உணவில் காரத்துக்கென்று மிளகு தான் பெருமளவு உபயோகப்பட்டிருக்கிறது.

ஐரோப்பாவில் மிளகை வைத்து நாட்டில் வரிகள் செலுத்தி வந்ததாகவும் கூறுகின்றனர். இவ்வளவு சிறப்பு மிக்க மிளகை தங்கத்துக்கு இணையாக பாவித்து கருப்பு தங்கம் என்றும் கூறியிருக்கின்றனர்.

மிளகு மற்றும் மசாலா வர்த்தகத்தின் மையமாக இருந்திருக்கிறது முசிறி துறைமுகம். அப்போது குடக்கடல் என்று அறியப்பட்ட அரபிக் கடலின் வழியாக மாலுமிகள் வந்துசென்றிருக்கின்றனர்.

எவ்வளவு பழமையானது முசிறி துறைமுகம்?

13ம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்ததாக சொல்லப்படும் முசிறி துறைமுகம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சங்க பாடல்களில் கூட இடம்பெற்றிருக்கிறது.

தென்னிந்தியாவை பெர்சியா, மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா, ரோமானிய பேரரசுடன் இணைக்கும் துறைமுகமாக முசிறி இருந்திருக்கிறது.

2ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட ரோமானியப் பேரரசின் வரைபடங்களிலும் முசிறி நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

முசிறி துறைமுகத்துக்கு என்ன நேர்ந்தது?

14ம் நூற்றாண்டில் இந்த துறைமுகம் மர்மான முறையில் காணமல் போயிருக்கிறது. ஆனால் அதற்கான சரியான காரணம் தெரியவில்லை.

வரலாற்றாசிரியர்கள் சில கூற்றுகளை முன்வைக்கின்றனர்.

ரோமானிய நாகரீகத்தின் வீழ்ச்சிக்கு பிறகு இந்த துறைமுகம் மறைந்திருக்கலாம் என்கின்றனர்.

1341ம் ஆண்டு பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளம் தான் முசிறி நகரின் அழிவுக்கு காரணமாக இருந்திருக்கலாம் எனவும் சிலர் கூறுகின்றனர்.

முசிறியின் சிறப்பு

கடுகும் மசாலாக்களும் ஏற்றுமதி செய்த முசிறி மிகப் பெரிய வணிக நகரமாக இருந்திருக்கிறது. பெரியாற்றின் இருபுறமும் சேர்ந்து பெரிய நகரமாக இருந்திருக்கும் எனக் கருதுகின்றனர்.

முசிறியில் வாழ்ந்த மக்களுக்கும் கிரேக்க வணிகர்களுக்கு இடையில் வணிக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்கிறது யாழ் தளம்.

பாபிரஸ் ஒப்பந்தம் எனப்படும் இது கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

முசிறியில் ஆரம்பகாலத்தில் மத்திய கிழக்கு நாடுகள் அதிகமாக வணிகம் மேற்கொண்டாலும் பிற்காலத்தில் போர்த்துகீசியர்களும் டச்சுகாரர்களும் இங்கு வந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

முசிறியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் ரோமானிய நாட்டின் முத்திரை மோதிரம் கிடைத்திருக்கிறது.

சாதாரண மோதிரம் அல்ல, இதே போன்ற மோதிரம் அரசாவதற்கு முன்னர் அகஸ்டஸ் சீசரிடம் இருந்திருக்கிறது.

உலகில் வேறெங்கும் கிடைக்காத பொருட்கள் முசிறி அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கிறது. மேலும் முசிறி கொச்சியுடன் நெருங்கிய தொடர்புடைய நகரமாக இருந்திருக்கிறது.

முசிறிக்கு பிறகு குணக்கடலின் முக்கிய நகரமாக கொச்சி உருவானது. முசிறி இருந்த இடமே இப்போது சர்ச்சைக்கு உரியதாக இருக்கிறது.

நிலத்துக்கு அடியில் பல வரலாற்றுண்மைகள் புதைந்துகிடக்கின்ற என்பதே இதன் மூலம் தெளிவுபடுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?