Nitin Gadkari Twitter
இந்தியா

"வரதட்சணையை ஊக்குவிக்கும் விளம்பரம்" - சர்ச்சையில் சிக்கிய நிதின் கட்கரி டிவிட்டர் பதிவு

இந்நிலையில், மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு விளம்பரத்தை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அது ஏர் பேக்குகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் விளம்பரம். பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்திருந்தார்.

Keerthanaa R

சமீபத்தில் விளம்பரம் ஒன்றை மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பகிர்ந்த நிலையில், கடும் விமர்சனங்களை அவர் சந்தித்து வருகிறார்.

கவனமாக வாகனம் ஓட்டினாலும், சமயங்களில் சாலை விபத்துகள் ஏற்படத் தான் செய்கின்றன. காரில் பயணிக்கும்போது, விபத்து ஏற்படும் சமயத்தில், காரில் உள்ள ஏர்பேக் வெளிவந்து உயிர் பிழைத்தவர்கள் ஏராளம். முன்பு கார் ஓட்டுநர்களுக்கு மட்டுமே இருந்த ஏர்பேக் வசதி தற்போது அனைத்து பயணிகளுக்கும் கிடைக்குமாறு பல கார் நிறுவனங்கள் மேம்படுத்தி வருகின்றன.

மத்திய அரசும் தொடர்ந்து சாலை விபத்துகளை தவிர்க்க பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு விளம்பரத்தை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஏர் பேக்குகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் அந்த விளம்பரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்திருந்தார்.

விளம்பரத்தில், திருமணம் முடிந்து பெண் பிறந்த வீட்டை பிரிந்து செல்கிறார். அவர் ஒரு காரில் ஏறி புறப்பட தயாராக, காவல் அதிகாரியாக வரும் அக்ஷய் குமார் காரில் ஏர்பேக் வசதி குறித்து விசாரிக்க வருகையில், மணப்பெண்ணின் தந்தை காரின் அம்சங்கள் குறித்து விளக்குகிறார்.

அவர் இவ்வாறு கூறியுள்ள விஷயம் தான் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மகள் கணவன் வீட்டில் நன்றாக இருக்கவேண்டும் என தந்தை செய்துகொடுத்துள்ள வசதிகள் வரதட்சணை தரும் முறையை ஊக்குவிப்பதாக உள்ளது என சாடி வருகின்றனர்.

இதனால் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி. சிவ சேனா கட்சி தலைவர் பிரியங்கா சதுர்வேதி, "இது போன்ற விளம்பரங்களுக்கு யார் அனுமதி தருகிறார்? அரசாங்கம், காரில் இருக்கும் பாதுகாப்பு வசதி குறித்து விளம்பரம் செய்கிறதா அல்லது வரதட்சணை கொடுக்கும் கொடூர பழக்கத்தை ஊக்குவிக்கிறதா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.


திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சாகேத் கோகலே, "அரசு வரதட்சணையை ஊக்குவிக்கும் விதமாக நடந்துகொள்வது வருத்தம் அளிக்கிறது" எனக் கூறியிருந்தார். மேலும் சைரஸ் மிஸ்த்ரி இறந்தது மோசமான சாலை அமைப்பினால். சாலைகளை சீர் செய்வதை விட்டுவிட்டு விலை உயர்ந்த கார்களுக்கு விளம்பரம் செய்வது பொறுப்பை தட்டிக் கழிப்பது போன்று தோன்றுகிறது எனவும் அவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி இறந்த பிறகு கார்களில் ஆறு ஏர் பேக் கட்டாயம் இருக்க வேண்டும் என அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார். இந்த வருடத்தின் துவக்கத்திலேயே, கார்களில் ஏர் பேக் எண்ணிக்கையை அதிகப்படுத்த விதிகள் வகுக்கப்பட்டது. ஆனால், இது கார்களின் விலையை உயர்த்தக் கூடும் எனக் கூறி, நிறுவனங்கள் மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?