பிரதமர் மோடி தான் குஜராத் கலவரத்துக்கு காரணமா? : பிபிசி ஆவணப்பட விவகாரம் - என்ன நடக்கிறது? News Sense
இந்தியா

பிரதமர் மோடி தான் குஜராத் கலவரத்துக்கு காரணமா? : பிபிசி ஆவணப்பட விவகாரம் - என்ன நடக்கிறது?

குஜராத் கலவரம் 790 முஸ்லிம்கள், 254 இந்துக்கள் உயிரைப் பறித்தது. மேலும் 223 காணாமல் போயினர். 2500 பேர் வரை படுகாயமடைந்தனர் என 2005ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த மோசமான விளைவுகளை ஏற்படுத்திய கலவரத்தில் பிரதமர் மோடிக்கு பங்கு உள்ளது என இந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

Antony Ajay R

பிரதமர் மோடியை குறிவைத்த பிபிசி ஆவணப்படம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து இங்கிலாந்து ஊடகமான பிபிசி எடுத்துள்ள ஆவணப்படம் சர்வதேச அளவில் பேச்சு பொருளாக உருவாகியிருக்கிறது.

2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்துக்கும் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக அந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டிருந்தது.

பிபிசி ஆவணப்படம்:

நரேந்திர மோடி பிபிசி ஆவணப்படம் | இந்தியா: மோடிக்கான கேள்விகள் | தொடர் 1: பகுதி 1 ( Narendra Modi BBC Documentary | India: The Modi Question | Series 1: Episode 1 ) என்பது அந்த ஆவணப்படம்.

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த 17ம் தேதி யூடியூபில் வெளியானது.

பிரதமர் மோடியின் ஆரம்பகால அரசியல் குறித்து பேசுவதே இந்த ஆவணப்படம். குஜராத் கலவரம் குறித்தும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலைக் குறித்தும் இது அலசியிருந்தது.

இதன் இரண்டாம் பாகம் வரும் 24ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் முதல் பாகம் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

குஜராத் கலவரம்

பிரதமர் மோடி முதலமைச்சராக குஜராத் மாநிலத்தை வழிநடத்தியக் காலத்தில் குஜராத் கலவரங்களும் நடந்தேறின.

2002 பிப்ரவரி 27ம் தேதி கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் கலவரம் வெடித்தது.

பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெற்ற இந்த கலவரத்தினால் 790 முஸ்லிம்கள், 254 இந்துக்கள் உயிர் பறிபோனது. மேலும் 223 காணாமல் போயினர். 2500 பேர் வரை படுகாயமடைந்தனர் என 2005ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மோசமான விளைவுகளை ஏற்படுத்திய கலவரத்தில் பிரதமர் மோடிக்கு பங்கு உள்ளது என இந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

அந்த காலத்தில் பிரதமர் மோடி அளித்த நேர்காணல்கள் மற்றும் அவரது பிரச்சார உரைகள் அந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றிருந்தன.

தவிர விசாரணைக்குழுவின் அறிக்கையும் அந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றிருந்தது.

இந்திய அரசின் நிலைப்பாடு

இந்த ஆவணப்படம் பிரதமர் மோடி குறித்து எதிர்மறைக் கருத்துக்களை பரப்புவதாகவும், இது வெறும் பிரச்சாரம் என்றும் கூறி இந்திய அரசு இந்த ஆவணப்படத்தை தடை செய்துள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், இந்த படம் ஒருசார்புடையதாகவும், நடுநிலை இல்லாததாகவும், காலனியாதிக்க மனநிலை உடையதாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

ரிஷி சுனக் கருத்து :

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மோடி ஆவணப்படம் குறித்து விவாதம் எழுப்பப்பட்டது.

அதில் பேசிய பிரதமர் ரிஷி சுனக், "குஜராத் கலவரம் தொடர்பான இங்கிலாந்து அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. உலகின் எந்த பகுதியில் அநீதி நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்போம். ஆனால் ஒரு தலைவரின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" எனப் பேசியுள்ளார்.

பிபிசி மீது வழக்கு

உச்சநீதிமன்ற வழக்கறிஞரான வினீத் ஜிந்தால் டெல்லி காவல் துறையில் பிபிசி மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில், அந்த ஆவணப்படம் இந்திய ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல் எனவும், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களை இந்துக்களுக்கு எதிராக திருப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?