குதிரையில் சென்ற நபர்  Twitter
இந்தியா

Swiggy : 'அது டெலிவரி பாய் இல்லை' - குதிரையில் சென்ற நபர் குறித்து ஸ்விங்கி விளக்கம்

Antony Ajay R

சில நாட்களுக்கு முன் ஒரு நபர் குதிரையில் ஸ்விங்கி பேக்குடன் சாலையில் செல்லும் வீடியோ வைரலானது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆகா குதிரை வண்டியிலும் ஸ்விங்கி டெலிவரி தொடங்கிவிட்டதா? என அந்த வீடியோவை வைரலாக்கினர்.

மும்பையில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் கனமழையின் நடுவிலும் அவர் டெலிவரிக்காக செல்லுவது பதிவாகியிருந்தது. வீடியோ நிறுவனத்தின் கண்களுக்கு எட்ட இந்த நபரை முதலில் அடையாளம் காட்டுபவர்களுக்கு 5000 ரூபாய் தருவதாக ஸ்விங்கி அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து ஜூலை 8ம் தேதி அந்த நபரைத் தேடிச் செல்வதாக ஸ்விங்கி ஒரு பதிவை வெளியிட்டது.

இந்த பதிவில் மும்பையின் அந்த குறிப்பிட்ட சாலையில் அந்த குதிரை ஆசாமியின் புகைப்படத்தை ஒருவர் வைத்திருப்பது தெரிந்தது.

ஒரு வழியாக அந்த நபரை ஸ்விங்கி ஊழியர்கள் கண்டடைந்தனர். இது குறித்து ட்விட்டரில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளது ஸ்விங்கி.

இந்த அறிக்கையில் அந்த நபர் ஒரு ஸ்விங்கி டெலிவரி எக்ஸிக்யூடிவ் அல்ல என்று ஸ்விங்கி நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம் குதிரையை விட வேகமகாம பரவிய வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது ஸ்விங்கி நிறுவனம்.

குதிரையை ஓட்டிச் சென்றது 17 வயது சிறுவன் என்று ஸ்விங்கி நிறுவனம் கூறியுள்ளது.

அந்த சிறுவன் கல்யாண குதிரையைப் பராமரிக்கும் வேலையைச் செய்து வருவதாகவும், குதிரையின் பொருட்களை அந்த பையில் எடுத்து வந்ததாகவும் ஸ்விங்கி கூறியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?