மேகாலயா Twitter
இந்தியா

மேகாலயா முதல் லடாக் வரை : பெண்கள் பயணம் செய்ய ஏற்ற 8 இடங்கள்!

தனியாக நாடு முழுக்க பயணம் மேற்கொள்வதென்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால், பாதுகாப்பு காரணமாகப் பெண்கள் பலருக்கும் சோலோ ட்ராவல் என்பது வாய்ப்பதில்லை. ஆனால், பெண்கள் தனியாகச் செல்ல பாதுகாப்பான சில இடங்கள் உள்ளன. அவற்றைக் காண்போம்.

NewsSense Editorial Team

ஷில்லாங் - மேகாலயா

மேகாலயாவில் உள்ள ஷில்லாங். இயற்கை எழில் சூழ்ந்த இந்த இடம் பெண்கள் தனியாக ட்ராவல் செய்ய ஏற்ற இடங்களில் ஒன்று.

காணவேண்டிய இடங்கள்: யானை நீர்வீழ்ச்சி, உமியம் ஏரி, ஷில்லாங் சிகரம், லைட்லம் பள்ளத்தாக்கு

தங்கவேண்டிய நாட்கள்

2 முதல் 3 வரை

பட்ஜெட்

ஒரு நாளைக்கு ரூ.1000 - ரூ. 2000

பயண வழி

குவஹாத்தி விமான நிலையம் வழியாக...

Gangtok in Sikkim

கேங்டாக் - சிக்கிம்

உங்கள் மனதைப் புத்துணர்ச்சி அடையச் செய்யும் இந்த இடம். பெண்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய ஏற்ற இடம்.

காணவேண்டிய இடங்கள்: நாதுலா பாஸ், ஹனுமான் டோக், பாபா ஹர்பஜன் சிங் நினைவு கோவில், பஞ்சாக்ரி நீர்வீழ்ச்சிகள், இமயமலை விலங்கியல் பூங்கா

தங்க வேண்டிய நாட்கள்

2 முதல் 3 வரை

பட்ஜெட்

ஒரு நாளைக்கு 2000 முதல் 3000 ரூபாய்

பயண வழி

பாக்டோக்ரா விமான நிலையம் வழியாக அல்லது புதிய ஜல்பைகுரி ரயில் நிலையம் வழியாக

Hampi in Karnataka

ஹம்பி - கர்நாடகா

வரலாற்று இடங்களுக்குப் பயணம் செல்ல விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம். இது பெண்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.

காணவேண்டிய இடங்கள்: விருபாக்ஷா கோவில், நினைவுச்சின்னங்கள், குரங்கு கோவில், விஜய விட்டலா கோவில், லோட்டஸ் மஹால், மாதங்கா மலை

தங்க வேண்டிய நாட்கள்

1 முதல் 2 வரை

பட்ஜெட்

ஒரு நாளைக்கு 1500 முதல் 2500 ரூபாய்

பயண வழி

பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அல்லது பெல்லாரி உள்நாட்டு விமான நிலையம் வழியாக. ஹோஸ்பெட் ரயில் நிலையம் வழியாக ரயிலில்

Udaipur in Rajasthan

ஜெய்ப்பூர் - ராஜஸ்தான்

கிழக்கின் வெனிஸ் என்று அழைக்கப்படும் இந்த இடம் இந்தியாவின் தலைசிறந்த வரலாற்று சுற்றுலாத்தலம். பெண்களின் பாதுகாப்பை வெகுவாக உறுதி செய்கிறது.

காணவேண்டிய இடங்கள்: ஏரி அரண்மனை, ஜக் மந்திர், மான்சூன் அரண்மனை, அஹர் அருங்காட்சியகம், ஜகதீஷ் கோவில், ஃபதே சாகர் ஏரி, பிச்சோலா ஏரி

தங்க வேண்டிய நாட்கள்

1 முதல் 2 வரை

பட்ஜெட்

ஒரு நாளைக்கு 2000 முதல் 3000 ரூபாய்

பயண வழி

உதய்பூர் அல்லது தபோக் விமான நிலையம் வழியாக அல்லது உதய்பூர் நகர ரயில் நிலையம் வழியாக ரயிலில்...

Munnar in Kerala

மூணார் - கேரளா

மிகச்சிறந்த மலை வாசஸ்தலம். சிறந்த பயண அனுபவத்தைத் தரக்கூடியது.

காண வேண்டிய இடங்கள்: சொக்ரமுடி சிகரம், ரவிகுளம் தேசிய பூங்கா, குண்டலா ஏரி, மாட்டுப்பட்டி அணை, லக்கம் நீர்வீழ்ச்சிகள், சின்னார் வனவிலங்கு சரணாலயம்

தங்க வேண்டிய நாட்கள்

1 முதல் 2 வரை

பட்ஜெட்

ஒரு நாளைக்கு 1500 முதல் 2500 ரூபாய்

பயண வழி

கொச்சி சர்வதேச விமான நிலையம் அல்லது அங்கமாலி ரயில் நிலையம் வழியாக

Darjeeling in West Bengal

டார்ஜிலிங் - மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு கண்கவர் மலை வாசஸ்தலம். இந்தியாவில் பெண்கள் பயணிக்கும் பிரபலமான இடங்களில் இதுவும் ஒன்று.

காணவேண்டிய இடங்கள்: காஞ்சஜுங்கா மலைத்தொடர்கள், டைகர் மலை, பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா, படாசியா லூப்

தங்க வேண்டிய நாட்கள்

2 முதல் 3 வரை

பட்ஜெட்

ஒரு நாளைக்கு ரூ.1000 முதல் ரூ. 2000 வரை

பயண வழி

பாக்டோக்ரா விமான நிலையம் வழியாக அல்லது புதிய ஜல்பைகுரி ரயில் நிலையம் வழியாக

Nainital in Uttarakhand

நைனிடால் - உத்தராகண்ட்

அடர்ந்த தோட்டங்கள் மற்றும் அமைதியான சூழலால் சூழப்பட்ட ஒன்பது ஏரிகளின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. குளிர்காலத்தில், பனி மூடிய மலை சிகரங்களையும், அழகிய நிலப்பரப்பில் பரவியிருக்கும் வெண்மையான பனி அடுக்குகளையும் நீங்கள் காணலாம்.

காண வேண்டிய இடங்கள்: நைனிடால் ஏரி, முக்தேஷ்வர் கோவில், நைனா சிகரம், பாங்கோட் மற்றும் கில்பரி பறவைகள் சரணாலயம்

தங்க வேண்டிய நாட்கள்

2 முதல் 3 வரை

பட்ஜெட்

ஒரு நாளைக்கு 2000 முதல் 3000 ரூபாய்

பயண வழி

பந்த்நகர் விமான நிலையம் அல்லது கத்கோதம் ரயில் நிலையம் வழியாக

Ladakh

லடாக்

லடாக் இந்தியாவில் தனியாகப் பெண் பயணிகளுக்கு சிறந்த மற்றும் கவர்ச்சிகரமான இடங்களில் ஒன்றாகும். அழகிய நிலப்பரப்புகள், உயரமான மலைப்பாதைகள், அழகான மடங்கள் மற்றும் சிலிர்ப்பூட்டும் சாகச நடவடிக்கைகள் ஆகியவை இந்த இடத்திற்கானவை.

காணவேண்டிய இடங்கள்: பாங்கோங் த்சோ ஏரி, டிசோ மோரிரி ஏரி, திக்சே மடாலயம், நுப்ரா பள்ளத்தாக்கு, ஹெமிஸ் தேசிய பூங்கா, கர்துங்-லா பாஸ்

தங்க வேண்டிய நாட்கள்

2 முதல் 3 வரை

பட்ஜெட்

ஒரு நாளைக்கு 2000 முதல் 3000 ரூபாய்

பயண வழி

லேயில் உள்ள குஷோக் பகுலா ரிம்போச்சி விமான நிலையம் அல்லது ஜம்முவிலிருந்து சாலை வழியாக

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?