கண்ணன் அம்பலம் NS
இந்தியா

கண்ணன் அம்பலம் : ஆப்ரிக்காவின் பென்னிகுவிக் ஆன தமிழர் - கெளரவித்த இந்திய அரசு

17வது பிரவாசி பாரதீய சம்மான் விருதினை பெற்றவர்கள் பட்டியலில் கண்ணன் அம்பலம் என்ற ஒரு தமிழரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. யார் இந்த கண்ணன் அம்பலம்? இந்த உயரிய விருது அவரது கைகளை வந்தடைந்தது எப்படி?

Keerthanaa R

17வது பிரவாசி பாரதிய சம்மான் விருதுகள் ஜனவரி 8 முதல் 10 ஆம் தேதி வரை இந்தோர் நகரத்தில் நடைப்பெற்றது. பிரவாசி பாரதீய தினத்த்னறு இந்த விருதுகளை, இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.

Diaspora: Reliable Partners for India's Progress in Amrit Kaal என்பது இந்த வருடத்திற்கான தலைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழாவிற்கு குயானா அதிபர் முகமது இர்ஃபான் அலி, சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

பிரவாசி பாரதீய சம்மான் விருதுகள், கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான விருது. பிரவாசி பாரதீய திவாஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக வழங்கப்படும் இந்த விருதுகள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.

இந்த 17வது பிரவாசி பாரதீய சம்மான் விருதினை பெற்றவர்கள் பட்டியலில் கண்ணன் அம்பலம் என்ற ஒரு தமிழரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

யார் இந்த கண்ணன் அம்பலம்? இந்த உயரிய விருது அவரது கைகளை வந்தடைந்தது எப்படி?

மதுரை இளங்காளை:

ஆப்ரிக்காவின் எத்தியோபியாவில் நீர் மேலாண்மை துறையில் அசத்திக்கொண்டிருக்கும் கண்ணன் அம்பலம், மதுரை அலங்காநல்லூரில் பிறந்த இளங்காளை.

மதுரை தியாகராயர் கல்லூரியில் வேதியலில் இளங்கலை பட்டமும், மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில் முதுகலை பட்டம் பெற்ற இவர், டெல்லி ஜவர்ஹர்லால் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் எம் ஃபில், பி எச் டி முடித்திருக்கிறார்.

பொந்துகம்பட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணனுக்கு, ஐ ஏ எஸ் அதிகாரியாகவேண்டும் என்பது லட்சியம். ஆனால், அந்த கனவு கைக்கூடவில்லை, மாறாக எத்தியோப்பியாவில், பேராசிரியராக வேலைக் கிடைத்தது.

2009 ஆம் ஆண்டு, சிதைந்த கனவுகளுடனும், கனத்த இதயத்துடனும், கிடைத்த வேலையை ஏற்றுக்கொண்டு, கண்டம் கடந்தார் கண்ணன். ஆனால், எத்தியோப்பியாவின் நிலை இவரது மனத்தை மாற்றியது. மக்களுக்காக ஏதேனும் செய்யவேண்டும் என்று முடிவெடுக்கிறார்.

ஒரு நாள் வழக்கம்போல வேலைக்கு செல்லும்போது, செவக்கா என்ற கிராமத்தில், ஒரு மூதாட்டி ஆற்றைக்கடக்க சிரமப்ப்ட்டுக்கொண்டிருப்பதை இவர் கவனித்தார். இது பற்றி தன் மாணவர்களிடம் பேசியபோது தான், அவூரில் இதுபோன்ற இடங்கள் பல இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், ஆற்றைக்கடக்க முயற்சிக்கும்போது பல மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

முதற்படி:

ஐ ஏ எஸ் அதிகாரி ஆகவேண்டும் என நினைத்ததே மக்களுக்கு சேவையாற்றத் தான். அதை எங்கு செய்தால் என்ன என்ற எண்ணத்துடன், தனது முதல் முயற்சியாக எத்தியோப்பிய மக்கள் ஆற்றைக்கடக்க, ஒரு மரப்பாலத்தை உருவாக்கினார். கண்ணனின் மாணவர்கள், ஊர் மக்கள் இவருடன் கைக்கோர்த்தனர்.

ஆனால், பாலம் உருவான பின்னர் தான், மற்றொரு சிக்கல் அவருக்கு தெரியவந்தது.

பிரதான போக்குவரத்து - கழுதை

எத்தியோப்பியாவின் பிரதான போக்குவரத்து கழுதைகள் மூலமாக நடந்தது. மரப்பாலங்களின் மேல் நடக்கும்போது அவ்விலங்குகளின் கால்கள் மரங்களின் இடுக்கில் சிக்கி, அவை இடரி விழுந்தன. இதற்கு மாற்றாக, அனைத்து பாலங்களையும், சிமெண்ட் கொண்டு கட்டமைத்தனர் கண்ணன் மற்றும் குழுவினர்.

பல கிராமங்களில் சிமெண்ட் பாலம் அமைக்கப்பட்டன. இவற்றுடன் சேர்த்து குடிநீர் வசதிகளையும் மேம்படுத்திக்கொடுத்தார் கண்ணன் அம்பலம்.

அடர் வனங்களும், மலைகளும் சூழப்பட்ட கிராமங்கள் அவை. இங்கு இயற்கை நீரூற்றுகள் ஏராளம். ஆனால் அவற்றில் கிடைக்கும் தண்ணீர் அவ்வளவாக தூய்மையானதாக இல்லை. அதனை வடிக்கட்டி, சுத்தமான தண்ணீரை பயன்படுத்த, குடிப்பதற்கும் ஏதுவாக மாற்ற சிறிய கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டன

நமக்கு நாமே !

இந்த பணிகளை மேற்கொள்ள கண்ணன் அம்பலம், உள்ளூர் மக்களையே ஈடுப்படுத்திக்கொண்டார். “கிராம மக்களின் கைகளால் இவற்றை உருவாக்கும்போது, இது தங்களுடைய உழைப்பு, உரிமை என்ற எண்ணம் அவர்களுக்கு வரும். இல்லையென்றால், யாரோ செய்தது தானே என்ற எண்ணத்தில், சரியான பயன்பாடோ, அல்லது பராமரிப்போ அவர்கள் செய்யமாட்டார்கள்.

இந்த நமக்கு நாமே கோட்பாடு, கண்ணன் அம்பலத்துக்கும் பொருந்தும். காரணம், பாலங்கள் அமைக்க, குடிநீர் மேலாண்மையை மேற்கொள்ள அவர் தனது ஊதியத்தை பயன்படுத்துகிறார்.

படிக்கத் தான் பாடமா நெனச்சு பாத்தோமா?

தனது இந்த கொள்கைகளுக்கு ஊக்கமாக இருந்தவர், பென்னி குவிக் என்றும் கண்ணன் அம்பலம் குறிப்பிடுகிறார்.

“நாம் கற்கும் கல்வி மக்களுக்கு பயன்படத்தானே? எனக்கு ஒரு விஷயத்தில் இருக்கும் அறிவு, சிலருக்கு தேவைப்படுகிறது. அதை நாம் பகிரவேண்டும் இல்லையா? அதை தான் நான் செய்தேன்” என்றவர், இதனை நான் தனியாக செய்துவிடவில்லை என பணிவின் மறு உருவமாக பதிலளிக்கிறார் கண்ணன்.

இதுவரை 93 சிறுபாலங்களும், , 55 நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள், 1 சிறிய அணை, 1 கழிப்பிடம், பள்ளியில் கழிப்பிடம் 1 உள்ளிடவைகளை எத்தியோப்பியாவில் உருவாக்கியிருக்கிறார் கண்ணன் அம்பலம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?